Published:Updated:

“தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்!” - ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முழக்கம்

“தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்!” - ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முழக்கம்
பிரீமியம் ஸ்டோரி

‘தி.மு.க தலைமையிலான கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு’ என்று வர்ணிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தால் திருச்சி நகரம் திணறிப்போனது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு திருச்சியில் ஜனவரி 23-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குத் தடைவிதிக்கக் கோரி, காவல்துறை ஆணையரிடம் பி.ஜே.பி., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மனுக் கொடுத்திருந்தனர். அதனால், ஆரம்பம் முதலே திருச்சியில் பரபரப்பு நிலவியது. இந்த மாநாட்டுக்காக, திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. தி.மு.க தலைவர் .ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, காங்கிரஸ்  சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி, முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.

“தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்!” - ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முழக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “தி.மு.க மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல் படுகிறோம். மோடியின் ஆட்சியில் தலித்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு இல்லை. அதானி களும் அம்பானிகளும் தான் இந்த ஆட்சியில் வளர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. கம்யூனிஸ்ட்களைப் பயங்கரவாதிகளாகவும், விடுதலைச் சிறுத்தை களை வன்முறையாளர்களாகவும் சித்திரிக்கிறார் கள். அவற்றையெல்லாம் கடந்து, வரும் தேர்தலில் 40-க்கு 40 வெற்றிபெறுவோம்” என்றார்.

வைகோ பேசியபோது, “ஆட்சி அதிகாரத்துக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் வரவேண்டும் என்று பெரியார் விரும்பினார். அதை, பெரியார் சமத்துவபுரம் வழியாக நனவாக்கினார் கருணாநிதி. கஜா புயல் நிவாரண நிதி, மேக்கேதாட்டூ விவகாரம் என்று பிரதமர் மோடி தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவருகிறார். தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. சமூகநீதிக்கு விரோதமாகச் செயல்படும் மத்திய அரசு, மாநில உரிமைகளை நசுக்குகிறது. நேதாஜியின் பிறந்தநாள் இன்று. ‘ரத்தத் துளிகளைத் தாருங்கள்... தேசம் காப்போம்’ என்றார் நேதாஜி.  நீங்கள், விலை மதிப்பில்லாத வாக்குச்சீட்டுகளைத் தாருங்கள் இந்தியாவைக் காப்போம்” என்றார்.

சீதாராம் யெச்சூரி பேசியபோது, ‘‘மிகப்பெரிய பாரதப் போர் நடைபெறுகிறது. மோடி ஆட்சி வீழ்த்தப்படும். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு உயர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், விவசாயி களின் நிலையோ மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, மோடி அரசைத் தூக்கியெறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும்” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், “பொய்யான வாக்குறுதியால் மக்களை ஏமாற்றி னார், மோடி. மோடியின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஆவி ஆட்சியும், மத்தியில் நடக்கும் காவி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும்” என்றார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்!” - ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முழக்கம்

கொடிக்குனில் சுரேஷ், ‘‘இந்தத் தேர்தலில் திருமாவளவனை வெற்றிபெறச் செய்து டெல்லிக்கு அனுப்பினால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது’’ என்றார்.

மு.க.ஸ்டாலின் பேசியபோது, “தேசம் காப்போம் என்ற முழக்கம் ஏன் எழ வேண்டும்? தேசத்துக்கு அந்நிய நாட்டிலிருந்து ஆபத்து வந்துள்ளதா? பாகிஸ்தான் படையெடுத்து விட்டதா? சீனா நம் மீது போர் தொடுக்கிறதா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து வந்துள்ளது. அதனால்தான், தேசம் காப்போம் என்ற தலைப்பை திருமாவளவன் தேர்ந்தெடுத்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போர் மே மாதம் நடக்கவுள்ளது. நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான், நம் அனைவரின் முழக்கமும். ரஃபேல் விமான விவகாரத்தில் தேசத்தையே 41 சதவிகிதத்துக்கு விற்கக்கூடிய அரசுதான் இந்த மோடி அரசு. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 100 சதவிகிதத்தையும் விற்றுவிடுவார்கள்” என்றார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி, ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வருகையால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism