Published:Updated:

2019-ம் ஆண்டின் முதல் மிஷன்! - விண்ணில் பாய்ந்தது `பி.எஸ்.எல்.வி. - சி 44 ராக்கெட்!

2019-ம் ஆண்டின் முதல் மிஷன்! - விண்ணில் பாய்ந்தது `பி.எஸ்.எல்.வி. - சி 44 ராக்கெட்!
2019-ம் ஆண்டின் முதல் மிஷன்! - விண்ணில் பாய்ந்தது `பி.எஸ்.எல்.வி. - சி 44 ராக்கெட்!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோளை, 'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட் உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

தற்போது, புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்க,  இஸ்ரோ தயாரித்துள்ள 'மைக்ரோசாட் - ஆர்' என்ற  செயற்கைக்கோளுடன்  சென்னையின்  ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்கிற அமைப்பின் மாணவர்கள் உருவாக்கிய குறைந்த எடை உடைய `கலாம்சாட்’ என்ற செயற்கைக்கோளையும் சுமந்தபடி, 'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, நேற்று  இரவு, 11:37 மணிக்கு வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது. ‘மைக்ரோசாட்-ஆர்’  செயற்கைக் கோள் பூமியைக் கண்காணிக்கவும், `கலாம் சாட்’ செயற்கைக் கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய இந்த செயற்கைக் கோள்கள் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. என்ற நான்கு கட்டங்கள் கொண்ட ராக்கெட்டின் மொத்த எடை 260 டன்.  இதுவரை  ராக்கெட்டுகளின் 4-வது நிலையில், செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்’ செயற்கைக் கோள் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.