Published:Updated:

கடலிலே பயணம்!

கடலிலே பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடலிலே பயணம்!

கடலிலே பயணம்!

குழந்தையும் சிரிப்பும் போல கடலும் அலையும்!

ரசித்துக்கொண்டே இருக்கலாம்... நம்மை பிரமாண்டப்படுத்திக்கொண்டே இருக்கும். கரைலிருந்து பார்த்தாலே வியக்கவைக்கும் கடலில், ஒரு பயணம் போனால்? அப்படி  ஓர் அனுபவத்தில் சுட்டி விகடனின் சீனியர் சுட்டி ஸ்டார் யாழ் அரசியும் அவருடன் சென்னை மாநகராட்சி அரசு மே.நி.பள்ளி, மடுவின்கரை யில் படிக்கும் சுட்டிகளும் பங்கேற்றனர்.

கடலிலே பயணம்!

இந்தியக் கடலோரக் காவல்படை, தன்னுடைய 43-வது ஆண்டு கொண்டாட்டத்தை, பொதுமக்களுடன் சேர்ந்து ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் நடத்தியது.

அரசு அலுவலகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக இதில் கலந்துகொண்டனர். சென்னை துறைமுகத்திலிருந்து கிளம்பிய கப்பல்கள், கரை தெரியாத தூரம் வரை அழைத்துச் சென்றது. முதன்முதலாக கடலில் பயணம் செய்யும் பலரும் ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடலிலே பயணம்!

கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சாகர், சமுத்ரா, வரத், சவுரியா, ராஜ் தராங், சங்கவான், சாரங், அனாக் என 8 கப்பல்களும், ஒன்றன்பின் ஒன்றாகக் கடலில் வலம் வந்தன. சிறிய  ரோந்துக் கப்பல்கள் அடிக்கடி வேகமாக வந்து, யூ- டர்ன் போட்டுச் சென்றது. சாகச விமானங்கள் கப்பலின் மேலே பறந்து சிலிர்ப்பூட்டின.

கடலிலே பயணம்!

பயணத்தின் ஹைலைட், ஹெலிகாப்டர்கள். ‘டுகுடுகுடுகு’ எனச் சத்தம் எழுப்பியவாறு வந்ததும், சுட்டிகள் உற்சாகமாகக் கூச்சலிட்டனர். அந்த ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள், கடலில் விழுந்தவர்களை மீட்பது போன்ற சாகசங்களைச் செய்துகாட்டினர். கைதட்டி உற்சாகம் அளித்தனர் நம் மக்கள்.

கடலிலே பயணம்!

குறிப்பிட்ட தூரத்துக்குக் கப்பல் சென்றதும், ராக்கெட் லாஞ்சர், மிஷின் கன் போன்றவற்றையும் இயக்கி அசத்தினர். ‘டப்... டப்...’ சத்தத்துடன்  புல்லட்டுகள் கடலுக்குள்  பாய்ந்தன. கப்பல்களில் அணிவகுப்பு, பங்சுவாலிட்டி என வீரர்கள் ஒவ்வொருவரும் பிரமிக்க வைத்தனர்.

ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலைப் பார்த்து டாடா காட்டுவது, டால்பினோ, திமிங்கலமோ தென்படுமா என்று கடலுக்குள் எட்டிப் பார்ப்பது எனச் சுட்டிகளின் உற்சாகம் நொடிக்கு நொடி கடல் அலையாகப் பொங்கியது.

கடலிலே பயணம்!

கப்பலின் மேல் தளத்துக்கும் சென்று, தங்கள் உற்சாகத்தைத் தொடர்ந்தார்கள்.  திரும்பும்போது பெரியவர்கள் எல்லாம் களைத்துவிட, சுட்டிகளின் எனர்ஜி கொஞ்சமும் குறையவில்லை.

‘‘அப்பா, இன்னொரு ரவுண்டு போக பர்மிஷன் கிடைக்குமான்னு கேட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்’’ என்று ஒரு சுட்டி துள்ளினான். அதுதான் சுட்டிகளின் கெத்து!

கப்பலில் குவிஸ் போட்டி.. கலக்கிய பள்ளி மாணவர்கள்!

கடலிலே பயணம்!

குவிஸ் போட்டி என்றாலே குஷிதான். அதிலும், கடல் காற்றை வாங்கியவாறு கப்பலில் போட்டி நடந்தால் சொல்லணுமா?

ஆண்டுதோறும் ஜனவரி மாதம், இந்தியக் கடலோரக் காவல்படை, பள்ளி மாணவர்களுக்கான குவிஸ் போட்டிகளை நடத்திவருகிறது. இந்த ஆண்டுக்கான குவிஸ் போட்டி, சென்னை துறைமுகத்தில் ஐசிஜீஎஸ் சாகர் கப்பலில் நடைபெற்றது.

கடலிலே பயணம்!சென்னை முழுவதிலும் உள்ள 21 பள்ளிகளிலிருந்து 78 மாணவர்கள் கலந்துகொண்டனர். இரண்டு சுற்றாக நடந்த போட்டியில், ஆவடி கேந்திர வித்யாலயா விமானப் படை பள்ளி, சங்கரா உயர்நிலைப் பள்ளி, பால வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

நாட்டியக் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ரேவதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முதல் சுற்றில் 30 கேள்விகள், பொதுஅறிவு சார்ந்தும் கடற்படை சார்ந்தும் கேட்கப்பட்டன. தகுதிச் சுற்றிலிருந்து 6 அணிகள், இறுதிச் போட்டிக்குத் தேர்வுசெய்யப்பட்டன.

கடலிலே பயணம்!

இறுதிப் போட்டியில் விளையாட்டு, இலக்கியம், பொதுஅறிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதியாக, வெற்றிபெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தனர்கள் பரிசுகளை வழங்கினர்.

கடலிலே பயணம்!


பரிசுகளை வழங்கி பேசிய ரேவதி ராமச்சந்திரன், ‘‘இந்தியக் கடற்படை மீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவைத் தேடித் தேடிப் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த அறிவு, சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். நாட்டுக்குச் சேவை செய்யும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

முதல் பரிசுபெற்ற சானித்ய சிங் மற்றும் கிஷோர் ஆனந்த் ஆகியோருக்கு இது முதல் கடற்படைப் போட்டி. சானித்ய சிங் எதிகாலத்தில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றவும், கிஷோர் ஆனந்த் மெடிக்கல் சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்றனர்.

கடலிலே பயணம்!

அவர்களின் ஆசிரியர் ஜெயராஜன் “இவர்கள் ஏற்கெனவே பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர். இந்தப் போட்டிக்கு இருவரும் சொந்தமாகவே தயார்செய்தனர். முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றது மற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது” என்றார்.

ஓயாத கடல் அலைகள் போல மாணவர்களின் சாதனைகளும் தொடரட்டும்!

- ச.ராம் சங்கர், இ.மோகன்

படங்கள்: பா.அகல்யா, பெ.ராக்கேஷ், ஆ.வள்ளி சௌத்திரி