விளையாடு மங்காத்தா!

'சீட்டு விளையாடுவது... சூதாட்டம். அதை விளையாடுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள்’ என நினைப்பவர்களுக்கு இது அதிர்ச்சி செய்திதான். அதே சீட்டு விளையாட்டுக்கான தேசிய அளவிலான போட்டி, அரசு அனுமதியுடன் சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சீட்டுக் கட்டைவைத்து விளையாடும் 'பிரிட்ஜ்’ என்ற இந்த விளையாட்டு, ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பெண்கள் உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த 750 பேரும் நான்கு பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து அமர்ந்து சீட்டுகளை கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி.

விளையாடு மங்காத்தா!
##~##

'பிரிட்ஜ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’வின் தலைவர் கிருபாகரன், ''இது சூதாட்டம் கிடையாது. மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும் அறிவு சார்ந்த விளையாட்டு. இதை விளையாட நான்கு பேர் தேவை. இரண்டு பேர் ஜோடி சேர்ந்து விளையாடணும். 18 வயது முதல் 80 வயசு வரை உள்ள யார் வேண்டுமனாலும் விளையாடலாம். இதை விளையாடினால் ஞாபக சக்தி அதிகரிக்கும், இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவை எடுக்க முடியும். இந்த பிரிட்ஜ் விளையாட்டு மத்திய, மாநில அரசின் நிதி உதவியால்தான் நடத்தப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது பள்ளிகளில் பாடத் திட்டமாகவே வைக்கப்பட்டு உள்ளது. பில்கேட்ஸ் பிரிட்ஜ் விளையாட்டுக்காக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் செலவு செய்கிறார். பிரிட்ஜ் விளையாடும் பணியாளர்கள், அதிக சுறுசுறுப்புடனும் திறமையோடும் இருப்பதாகவும் பில்கேட்ஸ் கூறியுள்ளார். ஆனால், இந்தியாவில் சமீபமாகத்தான் பிரிட்ஜ் விளையாட்டு சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கு. பாண்டிச்சேரி ஆரோவில்லில் இந்த விளையாட்டுக்காக பயிற்சி மையம், அமைத்து மாணவர்களுக்கு இதைச் சொல்லித் தருகிறோம். இப்போ நடக்கிற போட்டியில் வெற்றி பெறுபவர்கள், உலக அளவிலான பிரிட்ஜ் போட்டியில் கலந்துக்கப் போறாங்க'' என்பவர், ''வர்றீங்களா ஒரு கை போடுவோம்'' என்கிறார்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: எஸ்.அனுசத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு