2012 முதல் நாள் மாலை, வாக்கிங் செல்ல  பூங்கா, கடற்கரைக்கு வந்தவர்களை, 'நடந்தால் வியாதிகள் ஓடும்’, 'எடுப்பான தோற்றத்துக்கு மிடுக்கான நடை’  வாசகங்கள் தாங்கிய அட்டைகளைப் பிடித்தபடி 'டாக்டர் விகடன்’ சார்பாகக் கல்லூரி மாணவர்கள் வரவேற்றனர். சென்னை கடற்கரை, அண்ணாநகர் டவர், மயிலாப்பூர், அடையாறு, சேலையூர் கேம்ப் ரோடு ஜங்ஷன் எனப் பல இடங்களில் டாக்டர் விகடன் டீம் கொடுத்த புதுவருட வாழ்த்து அட்டைகள் மற்றும் பாடி மாஸ் இன்டெக்ஸ் கணக்கிடும் அட்டைகளை இன்முகத்தோடு வாங்கிக்கொண்டவர்கள், ''இதுல ஏன், டாக்டர் விகடனின் சந்தா விவரம் பற்றி குறிப்பிடலை? சந்தா செலுத்த எந்த நம்பருக்கு போன் பண்ணணும்?’ என்று ஆர்வமாக கேள்வி எழுப்பினார்கள் (சந்தா விவரங்களுக்கு: 044- 28411679)

இனி எல்லாம் சுகமே!
##~##
சென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் நடைப்பயிற்சிக்காக வந்த ரத்னா, ''ரொம்ப நாளா மூட்டு வலி, டாக்டர் சொன்னதால வாக்கிங் வரத் தொடங்கினேன். நாலு நாள் வந்தால் இரண்டு நாள் வர்றது இல்லை. இப்போ டாக்டர் விகடனும் 'வாக்கிங் போ’னு சொல்லுது. 'ஏன் வாக்கிங் போறது இல்லை?’னு டாக்டர் கேட்கிறதுக்கு முன்னாடி இனி ஒழுங்கா வர ஆரம்பிச்சிடுறேன்'' என்கிறார்.

ரத்னாவைப் போல, எல்லோரும் முடிவுசெய்து வாக்கிங் கிளம்பிவிட்டால் இனி எல்லாம் சுகம்தான்!

- ரேவதி
படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு