Published:Updated:

தனி சுவை... தனித்துவம்

தனி சுவை... தனித்துவம்
தனி சுவை... தனித்துவம்

2019-ம் ஆண்டின் முதல் இதழே அசத்தல். அட்டையே அமர்க்களம்.

- பானுமதி சுந்தரம், கோயமுத்தூர்-1 

தனி சுவை... தனித்துவம்

ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதாவின் நியூ இயர் ஸ்பெஷல் பார்ட்டி ரெசிப்பிகளின் படத்தைப் பார்த்ததும் செய்வதற்கு முன்பாகச் சுவைக்கத் தூண்டியது.

- அருணா சண்முகசுந்தரம், சென்னை-17


சாக்லேட் ஃபேன்டஸியில் மெனுராணி செல்லம், தனி முத்திரையைப் பதிவு செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

- கார்த்திகா ஏகலைவன், சேலம்-7

முகிலின் பனை உணவு, தமிழர்களின் பலமான உணவு என்பதை பறைசாற்றியது. குறிப்பாக, பனை ஓலை பற்றிய வரிகள் ஹைலைட்.

- சுந்தரி ஜீவானந்தம், திருச்சி-12

செஃப் ஹர்பால் சிங் சொன்ன ரெசிப்பிகளின் பெயரைப் பார்த்ததும் நமக்கு அந்நியமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், செய்து பார்த்ததில் எனக்கு அணுக்கமாகி விட்டார் சிங்.

- சவீதாஸ்ரீ, மதுரை-14

சமையல் திலகம் ரேவதி சண்முகத்தின் செட்டிநாடு ரெசிப்பிகள் தின்னத்தின்ன திகட்டாதவை. மீண்டும் மீண்டும் செய்ய தூண்டுபவை.

- மலர்விழி வைத்தி, சென்னை-100


நளமகாராணி மல்லிகா பத்ரிநாத் அளித்த ஸ்பைருலினா ஸ்பெஷல் ரெசிப்பிகள் தனி ரகம்; தனி சுவை, தனித்துவம்.

- எஸ்.யாஷ்மி, ஹைதராபாத்