Published:Updated:

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!
பிரீமியம் ஸ்டோரி
வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

Published:Updated:
வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!
பிரீமியம் ஸ்டோரி
வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

ரப்போகும் புதிய நிதியாண்டுக்கு, பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள வரிச் சலுகைகளை எடைபோடும் தருணம் இது. அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்குச் செலுத்தப்பட்டுள்ள வருமான வரியைச் சரிபார்த்து,  குறைகளை நிவர்த்தி செய்து, வரிக் கணக்கை முடிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு பிப்ரவரி மாதச் சம்பளம்தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

ஏனென்றால், கடந்த மூன்றாண்டுகளில், விழிப்பு உணர்வு நடவடிக்கை மூலம் சுமார் மூன்று கோடி புதியவர்களை, வருமான வரித்துறை, வரி வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இருந்தாலும், வரி கணக்குத் தாக்கலின்போது தெரியவரும் தவறுகளின் எண்ணிக்கை இரண்டு கோடிக்குப் பக்கத்தில்  உள்ளது. அதாவது, வழங்கப்பட்ட சம்பளத்துக்கான அறிக்கையைச் சம்பளம் கொடுக்கும் அதிகாரி அனுப்புகிறார். வாங்கிக்கொண்ட சம்பளத்துக்கு வரிக் கணக்கை சம்பளதாரர் தாக்கல் செய்கிறார். இதில் என்ன சிக்கல்?

அதிகாரியின் அறிக்கையும், சம்பளதாரரின் வரி கணக்குத் தாக்கலும் ஒன்றுக்கொன்று முரண்பாடு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முக்கியமான காரணம், பெற்றுக்கொண்ட வீட்டு வாடகை அலவன்ஸில் வரிச் சலுகையாகக் கழிவு செய்யப்படும் தொகையில் உள்ள பிழைதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

மொத்தமுள்ள 40 அலவன்ஸ்களில், வரிவிலக்குப் பெறாத அலவன்ஸ் 11, பகுதியளவு வரிவிலக்கு பெறத்தக்கவை 17, முழுமையும் வரிவிலக்கு பெற்றவை 12.

இவற்றுள் சம்பளதாரர் அனைவருக்கும் பொதுவானவை மூன்று அலவன்ஸ்கள்.

*   அகவிலைப் படி (Dearness Allowance)

*   மருத்துவப் படி (Medical Allowance)

*   வீட்டு வாடகைப் படி (HRA - House Rent Allowance)

இதர 37 அலவன்ஸ்களும், சம்பளதாரரின் பதவி, பணிபுரியும் இடம் பொறுத்து வழங்கப்படும். பொதுவான, மூன்று அலவன்ஸ்களில் வீட்டு வாடகை அலவன்ஸ் மட்டுமே பகுதி வரிவிலக்குப் பெற்றது. மற்ற இரண்டுக்கும் வரிவிலக்கு கிடையாது. மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச வீட்டு வாடகை ரூ.1,800. அதிகபட்ச மாத வீட்டு வாடகை அலவன்ஸ் ரூ.60,000. தமிழக அரசில் குறைந்தபட்சம் ரூ.250. அதிகபட்சம் ரூ.8,300-ஆக உள்ளது.

 இதர சம்பளதாரர்கள், அவரவர் பணிபுரியும் நிறுவனங்களின் நடைமுறைப்படி வீட்டு வாடகை அலவன்ஸ் பெறக்கூடும்.

அடிப்படைச் சம்பளத்தையும் பணிபுரியும் ஊரின் உள்ளாட்சித் தகுதியையும் பொறுத்து வீட்டு வாடகை தரப்படுகிறது. ஆக, வீட்டு வாடகை பெறுவதற்கு இரண்டே காரணிகள்தான்.

சம்பளதாரருக்கு மாதந்தோறும் வழங்கிய வீட்டு வாடகை அலவன்ஸ் தொகையை அப்படியே பதிவு செய்துவிடுவார் சம்பளம் வழங்கும் அதிகாரி. எனவே, சம்பளதாரர் பெற்றுக்கொண்ட வீட்டு வாடகைக்கான அலவன்ஸ் தொகையில் முரண்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால், சம்பளதாரர் தனக்குக் கிடைத்த வீட்டு வாடகை அலவன்ஸில் வரிச் சலுகையைக் கணக்கிடுவதில்தான் முரண்பாடு ஏற்படுகிறது. அதாவது, வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகையைத் தீர்மானிக்கும் காரணிகள் மூன்று. அவை...

* சம்பளதாரர் வாடகை வீட்டில் வசிக்க வேண்டும்.

* சொந்த வீட்டிலோ, வாடகை யில்லாக் குடியிருப்புகளிலோ வசிப்பவராக இருக்கக் கூடாது.

* குடியிருக்கும் வாடகை வீட்டின் சொந்தக்காரருக்குச் சம்பளதாரர் ஓர் ஆண்டு முழுவதும் கொடுத்த வீட்டு வாடகையானது, அவர் அந்த நிதியாண்டு முழுவதும் பெற்ற சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் (சம்பளம் என்பது அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி மட்டுமே).

* இதன் அடிப்படையில் வீட்டு வாடகை அலவன்ஸுக்கான வரிச் சலுகையானது கீழ்க்கண்ட மூன்று இனங்களில் எந்தத் தொகை குறைவோ, அந்தத் தொகை மட்டுமே சலுகை பெறும். சலுகைத் தொகை போக, மீதமுள்ள வீட்டு வாடகையைச் சேர்த்து வருமான வரி கணக்கிடப்பட வேண்டும். இதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு...

* 10% சம்பளத்தைவிட, கொடுத்த வீட்டு வாடகை (10% Salary (-) Rent Paid) 

* சம்பளதாரர் பெற்ற வீட்டு வாடகை அலவன்ஸ்      
   
* ஓராண்டுக்கான சம்பளத்தில் 40% தொகை (சென்னையில் வசிப்பவருக்கு 50%)

இவற்றுள் எது மிகவும் குறைவான தொகையோ, அந்தத் தொகைக்கே வரிச் சலுகை கிடைக்கும். அதாவது, சம்பள வருமானத்தில் கழிக்கப்படும். நிகர சம்பளத்துக்கு வருமான வரிக் கணக்கிடப் படும். இதுதான் வீட்டு வாடகை அலவன்ஸுக்கான வரிச் சலுகை. இந்தச் சலுகையானது, ஒரே சம்பளம் பெறுபவர்கள் என்றாலும் ஒருவருக் கொருவர் மாறுபடும்.

வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!

இதற்காக ரூ.50,000 அடிப்படைச் சம்பளமும், ரூ.4,500 அகவிலைப்படியும் பெறும் மூவரின் ஒப்பீட்டு அட்டவணை மேலே தரப்பட்டுள்ளது. மூவருக்கும் வருட வருமானம் 54,500x12 = ரூ.6,54,000தான்.

சம்பளதாரர் A கொடுத்துள்ள வீட்டு வாடகை ரூபாய் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதால், இவர் வீட்டுச் சொந்தக்காரரின் பெயர், கொடுக்கப்பட்ட வீட்டு வாடகை, முகவரி மற்றும் பான் எண் ஆகிய தகவல்களுடன் படிவம் 12BB சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அத்துடன் வாடகை ரசீதும் இணைக்கப்பட்டு சலுகை பெற வேண்டும்.

சம்பளதார B கொடுத்துள்ள வீட்டு வாடகைத் தொகை ரூபாய் ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளதால், வாடகை ரசீது கொடுப்பது அவசியம். சலுகை பெற்றுக்கொள்ளலாம்.

சம்பளதாரர் C  கொடுத்துள்ள வீட்டு வாடகைத் தொகை அவரது 10% சம்பளத்துக்கும் குறைவாக உள்ளதால், வீட்டு வாடகையின் மீது வரிச் சலுகை பெற முடியாது.

ரசீது கட்டாயம்

சென்ற நிதியாண்டு வரை வீட்டு வாடகைச் சலுகைக்கு, சிறப்புச் சலுகை ஒன்றும் இருந்தது. அதாவது, சம்பளதாரர் பெறும் மாதாந்திர வீட்டு வாடகை அலவன்ஸ் ரூ.3,000-க்கும் குறைவாக இருந்தால், அவர் வீட்டு வாடகைச் சலுகை பெற, வீட்டு வாடகைக்கான ரசீது சமர்ப்பிக்க வேண்டிய தில்லை. அந்தச் சலுகை. நடப்பு ஆண்டில் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, வரிச் சலுகை கோருவோர் அனைவரும் வீட்டு வாடகை ரசீது சமர்ப்பிக்க வேண்டும்.

வீட்டு வாடகை அலவன்ஸ் விஷயத்தில் இனி குழப்பம் வேண்டாமே!

- ப.முகைதீன் சேக்தாவூது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism