பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம். சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...
1. மத்திய பட்ஜெட் எந்தத் தேதியில் நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது?
அ. பிப்ரவரி - 28 ஆ. மார்ச் - 31
இ. பிப்ரவரி - 1
2. பட்ஜெட் 2018-19-ல் ஆரோக்கியத் தீர்வை 1% அறிமுகம் செய்யப்பட்டது.
அ. சரி
ஆ. தவறு
3. சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர்
அ. மொரார்ஜி தேசாய்
ஆ. டி.டி.கிருஷ்ணமாச்சாரி
இ. ஆர்.கே.சண்முகம் செட்டி
4. அதிக முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர்
அ. மொரார்ஜி தேசாய்
ஆ. ப.சிதம்பரம்
இ. ஆர்.கே.சண்முகம் செட்டி

5. இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய மதிப்பு
அ. 2 டிரில்லியன் டாலர்
ஆ. 2.5 டிரில்லியன் டாலர்
இ. 3.5 டிரில்லியன் டாலர்
6. கடந்த பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, எதனைப் பச்சைத் தங்கம் (Green gold) எனக் குறிப்பிட்டார்.
அ. துளசி
ஆ. மூங்கில்
இ. வேம்பு
7. ஆயூஷ்மான் பாரத் திட்டம் எந்தத் துறையுடன் தொடர்புடையது?
அ. ரயில்வே
ஆ. தொழில்துறை
இ. ஆரோக்கியம்
8. 2018-19-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி), நிதிப் பற்றாக்குறை ...... சதவிகிதமாக இருக்கும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அ. 2%
ஆ. 3.5%
இ. 3.3%
9. வங்கி மற்றும் தபால் அலுவலகச் சேமிப்பு மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வரி விலக்கு ரூ.10,000 என்பது எவ்வளவாக அதிகரிக்கப்பட்டது?
அ. ரூ.25,000
ஆ. ரூ.30,000
இ. ரூ.50,000
10. தனிநபர்களுக்கான வருமான வரியை 40 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட கனவு பட்ஜெட்டை ப.சிதம்பரம் எந்த ஆண்டு தாக்கல் செய்தார்?
அ. 1997-98
ஆ. 2000-01
இ. 1996-97
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- சி.சரவணன்
விடைகள்:
1. இ. பிப்ரவரி - 1
2. அ. சரி
3. இ. ஆர்.கே. சண்முகம் செட்டி
4. இ. மொராஜி தேசாய்
5. ஆ. 2.5 டிரில்லியன் டாலர்
6. ஆ. மூங்கில்
7. இ. ஆரோக்கியம்
8. இ. 3.3%
9. இ. ரூ.50,000
10. அ. 1997-98