சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில் (Central Institute of Brackishwater Aquaculture-CIBA). ‘சர்வதேச உவர்நீர் மீன் வளர்ப்பு மாநாடு’ (Braqcon-2019) கடந்த ஜனவரி 22 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 22-ம் தேதி விவசாயிகளுக்கான மீன் வளர்ப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.

மாநாட்டைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ‘‘நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள நம் நாட்டுக்கு, உவர்நீர் மீன் வளர்ப்பு அவசியமானது. மீன் வளர்ப்பு மூலம் விவசாயிகளும் பயன்பெறுவார்கள், மக்களுக்கும் புரதச்சத்துள்ள உணவு கிடைக்கும். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவதில், மீன் வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிறப்பாக மீன் வளர்ப்பு தொழில் நடைபெற்றால், வீட்டுக்கும் நாட்டுக்கும் உலக்கும் நன்மையைச் செய்யும்’’ என்றார்.

நிகழ்வின் ஒருபகுதியாக புதிய மீன் இனங்கள், உபகரணங்களையும் வெளியிட்டு கருத்துரை வழங்கிய, தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘மீன் வளத்தைப் பெருக்க, இப்படியொரு மாநாடு நடைபெறுவதைப் பாராட்டுகிறேன். சுயவேலைவாய்ப்புக் கொடுப்பதில் மீன் வளர்ப்பு தொழில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு, நானே கெமிக்கல் நிறுவனத்தை நடத்தியவன்தான். அரசாங்க வேலைக்குக் காத்திருக்காமல், இளைஞர்கள் பலருக்கும் வேலைக் கொடுப்பவர்களாக மாற வேண்டும்.

அருகில் உள்ள கோவளம் பகுதியில், இந்த நிலையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட மீன் வளர்ப்பவர்களைச் சந்தித்துப்பேசினேன். மீன் வளர்ப்பு மூலம் லட்சகணக்கில் வருமானம் வருவதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டினார்கள். மீன் வளர்ப்பில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி. இதேபோல, லட்சக்கணக்கில் வருமானத்தைத் தரக்கூடியது கடற்பாசி வளர்ப்பு. ஆக, தமிழக அரசும், மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையமும் மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்களுக்கு பல வகையில் உதவி வருகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.