நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டி ருக்கிறார். வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளை முன்வைத்தோம்...

தேர்தலுக்கு மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன...இந்த நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை மாற்றியதற்கான காரணம்?

“மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட கட்சிகளின் மாநிலத் தலைவர்களை சமீபகாலத்தில்தான் ராகுல்காந்தி மாற்றியிருக்கிறார். இது இந்திய அளவில் ராகுல் எடுத்துவரும் நடவடிக்கை. அதுபோலத்தான் தமிழகத்திலும் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாது.”

உங்கள் நியமனத்தின் பின்னணியில் தி.மு.க இருப்பதாகக் கூறப்படுகிறதே?

“நிச்சயமாக இல்லை. காங்கிரஸும் தி.மு.க-வும் இருபெரும் கட்சிகள். இரு கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் உள்ளன. ஓர் அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் இன்னொரு கட்சி தலையிடாது. அது நன்றாகவும் இருக்காது. அதை ஒருகாலும் தி.மு.க செய்யவே செய்யாது.”

ப.சிதம்பரத்தின் விசுவாசியானதால்தான் தங்களுக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டது; அதனால், சிதம்பரத்தின் விருப்பப்படியே, உங்களது நடவடிக்கைகள் இருக்குமென்று சொல்கிறார்களே?

“முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் யாரும், யாருடைய ஆளாகவும் இருக்க முடியாது. நான் மாணவனாக இருக்கும்போதே, ப.சிதம்பரத்தின் அரசியல் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டவன். தலைவர் மூப்பனாரால் வசீகரிக்கப்பட்டவன். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசு, கிருஷ்ணசாமி என எல்லோருமே எனக்கு மிக முக்கியமானவர்கள், நண்பர்கள். அந்த வகையில் அவர்கள்மீது நல்ல அபிப்ராயம் உண்டு. அதற்காக அவர்களின் ஆள் என்று எனக்கு முத்திரை குத்த வேண்டியதில்லை. அதை அவர்களும் விரும்ப மாட்டார்கள்.”

மூப்பனாரால் வசீகரிக்கப்பட்டவன் என்கிறீர்கள். அவர் மகன் வாசன், உங்கள் கூட்டணியில் இடம் பெறுவாரா?

“அதைத் தி.மு.க-வும், அகில இந்திய காங்கிரஸ் தலைமையும்தான் முடிவெடுக்க வேண்டும். அவர் எங்கள் கூட்டணிக்கு வருவாரா எனத் தெரியவில்லை.”

கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்றது, தமிழக காங்கிரஸ்...எல்லோரையும் ஒருங்கிணைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

“எல்லா அரசியல் கட்சிகளிலுமே கருத்து வேறுபாடு இருக்கும். அது இல்லை என்றால் அது ஜனநாயகக் கட்சியாகவே இருக்காது. காங்கிரஸ் கட்சியிலும் விவாதங்கள் உண்டு. அது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும். இது ஆரோக்கியமான ஒன்றுதான். சில சமயம் ஆக்கபூர்வமான விவாதமாக இல்லாவிட்டால், அது கோஷ்டி அரசியலாகத் தெரியும். பொதுவான விவாதமாக இருந்தால், அது கொள்கைமுடிவாகத் தெரியும்”

அப்போ, தமிழக காங்கிரஸ் கட்சியில் நடப்பதெல்லாம் ஆக்கபூர்வமான விவாதமா?

“என்னைப் பொறுத்தவரை, ஆக்கபூர்வ விவாதங்களைத்தான் நான் முன்னெடுப்பேன். எல்லோரையும் என் நண்பர்களாகவே கருதுகிறேன். கருத்து வேறுபாடுகளை மதிப்பேன். தனிமனிதர்கள்மீதான விமர்சனங்களை ஏற்க மாட்டேன்.”

ஏழு தமிழர் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன?

“குற்றவாளிகளைத் தமிழர்கள் என்று சொல்லுவதோ, இல்லை வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லுவதோ தவறு. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்தத் தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சொல்லவில்லை. அதுபோல, நீதிமன்றம் அவர்களுக்குத் தண்டனை கொடுத்ததையும் நாங்கள் மாற்றச்சொல்லவில்லை. இது நீதிமன்றத்தின் முடிவு. இவர்கள் குற்றமற்றவர் களாக இருந்திருந்தால், நீதிமன்றமே இவர்களை விடுதலை செய்திருக்கும். நீதிமன்றத்தின் முடிவுகளில் தலையிடுவது தவறு. அதை மாற்ற அழுத்தம் கொடுப்பதும் தவறு.”

இ.லோகேஷ்வரி - ஓவியம்: ஹாசிப்கான்