Published:Updated:

`செட்-டாப் பாக்ஸை மாற்றாமலேயே ஆபரேட்டரை மாற்றலாம்' - DTH-க்கும் வருகிறதா போர்ட்டபிலிட்டி?

`செட்-டாப் பாக்ஸை மாற்றாமலேயே ஆபரேட்டரை மாற்றலாம்' - DTH-க்கும் வருகிறதா போர்ட்டபிலிட்டி?
`செட்-டாப் பாக்ஸை மாற்றாமலேயே ஆபரேட்டரை மாற்றலாம்' - DTH-க்கும் வருகிறதா போர்ட்டபிலிட்டி?

பிப்ரவரி 1 முதல் கேபிள் மற்றும் DTH விலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் இந்த டிவி சந்தையில் பல ஆரோக்கியமான மாற்றங்களை முன்னெடுக்கவுள்ளது டிராய் அமைப்பு. அதில் முக்கியமான மாற்றங்களாக இருக்கும் எனக் கூறப்படுவது இரண்டு.

இந்த டிவி ஒளிபரப்பும் சேவைகள் தங்கள் செட்-டாப் பாக்ஸைதான் வாங்கவேண்டும் என வற்புறுத்தமுடியாது என்பது அதில் ஒன்று. வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் தங்களது செட்-டாப் பாக்ஸ்களை வாங்கிக்கொள்ளலாம். இப்போது பிராட்பேண்டு சேவைகளில் எப்படி `Modem'-களை தனியாக வாங்கிக்கொள்ளமுடியுமோ அதே போல் செட்-டாப் பாக்ஸ்களையும் தனியாக வாங்கி சேவையை மட்டும் பெறக்கூடிய சூழல் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது எப்படி மொபைல்களில் நம்பரை மாற்றாமலேயே ஒரு தொலைத்தொடர்பு சேவையிலிருந்து இன்னொரு சேவைக்கு மாறமுடிகிறதோ அதே போல் செட்-டாப் பாக்ஸ்களை மாற்றாமலேயே ஒரு DTH/கேபிள் சேவையிலிருந்து மற்றொன்றுக்கு மாறமுடியும். இதுவும் இந்த வருடத்தின் இறுதிக்குள் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இவை இரண்டையும் அமல்படுத்துவதில் தற்போது சிக்கல் நிலவுகிறது. இப்போது சேவைகள் அனைத்தும் வெவ்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் செட்-டாப் பாக்ஸ்களையே பயன்படுத்துகின்றன. இதனால் அனைத்துக்கும் பொதுவான ஒரு தொழில்நுட்பம் ஒன்றைக் கொண்டுவராமல் இவை சாத்தியமில்லை. இதை எப்படிச் செயல்படுத்தப்போகிறது டிராய் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.