Published:Updated:

பிஎம்டபிள்யூ X4... இந்த எஸ்யூவி கூபே காரில் என்ன ஸ்பெஷல்?!

X3 எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டே X4 தயாரிக்கப்பட்டிருப்பதால், ப்ளாட்ஃபார்ம் - கேபின் - சிறப்பம்சங்கள் - பாதுகாப்பு வசதிகள் - இன்ஜின் ஆப்ஷன் ஆகியவை X3-ல் இருந்து அப்படியே இங்கு Cut Paste செய்யப்பட்டிருக்கிறது.

பிஎம்டபிள்யூ X4... இந்த எஸ்யூவி கூபே காரில் என்ன ஸ்பெஷல்?!
பிஎம்டபிள்யூ X4... இந்த எஸ்யூவி கூபே காரில் என்ன ஸ்பெஷல்?!

தனது இரண்டாம் தலைமுறை X4 எஸ்யூவி கூபே காரை, 60.60-65.90 லட்ச ரூபாய்க்குக் (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) களமிறக்கியுள்ளது பிஎம்டபிள்யூ. இதன் ஆரம்ப மாடலின் விலையே, X3 எஸ்யூவியின் ஆரம்ப மாடலான xDrive20d-ன் விலையை விட 4.6 லட்சம் அதிகம்! X3 எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டே X4 தயாரிக்கப்பட்டிருப்பதால், ப்ளாட்ஃபார்ம் - கேபின் - சிறப்பம்சங்கள் - பாதுகாப்பு வசதிகள் - இன்ஜின் ஆப்ஷன் ஆகியவை X3-ல் இருந்து அப்படியே இங்கு Cut Paste செய்யப்பட்டிருக்கிறது. தவிர இந்த எஸ்யூவி கூபே காரை, சென்னையில் அமைந்திருக்கும் தனது தொழிற்சாலையில்தான் பிஎம்டபிள்யூ அசெம்பிள் செய்கிறது என்பது வரவேற்கத்தக்கது. நம் நாட்டிலே முதன்முறையாக, M Sport X Design Trim-ல் வெளி வந்திருக்கும் பிஎம்டபிள்யூ கார் X4தான் என்பதுடன், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது.

 
xDrive20d மாடலில் இருக்கும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் - 190bhp பவரை வெளிப்படுத்துகிறது. xDrive30d மாடலில் இருக்கும் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் - 265bhp பவரைத் தருகிறது. xDrive30i மாடலில் இருக்கும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் - 252bhp பவரை வெளிப்படுத்துகிறது. அனைத்து இன்ஜின்களுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருப்பதுடன், அது 4 வீல்களுக்கும் பவரைச் செலுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎம்டபிள்யூவின் டிரைவ் மோடு செலக்ட் சிஸ்டம் இருப்பதால், Eco Pro, Comfort, Sport, Sport+ எனத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தலாம். உலகளவில் எஸ்யூவி கூபே செக்மென்ட்டை, X6 வாயிலாகத் தொடங்கியதே பிஎம்டபிள்யூதான்!M Sport X பேக்கேஜ், ஏற்கெனவே இருந்த M Sport Body Kit-ன் மாடர்ன் வெர்ஷனாக இருக்கிறது. 

எனவே X4 காரின் வெளிப்புறத்தில் Side Skirt, Rear Diffuser, 19 இன்ச் அலாய் வீல்கள், டூயல் எக்ஸாஸ்ட் சிஸ்டம், ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் ஸ்போர்ட் சீட்கள் (முன்பக்கத்தில் மட்டும்), M பேட்ஜிங் உடனான ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், Panaromic சன்ரூஃப், எலெக்ட்ரிக் டெயில் கேட், Adaptive சஸ்பென்ஷன், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் iDrive இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Heads-Up டிஸ்பிளே, 16 ஸ்பீக்கர்களுடன் கூடிய Harman Kardon Surround சவுண்ட் சிஸ்டம் என வசதிகளின் பட்டியல் பெரிது. 6 காற்றுப்பைகள், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், Attentiveness அசிஸ்ட், ISOFIX Child Seat Mounts போன்ற பல பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. மெர்சிடீஸ் பென்ஸ் GLC கூபே மற்றும் ரேஞ்ச் ரோவர் இவோக் ஆகிய கார்களுக்குப் போட்டியாக X4 பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இவோக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 52 லட்சத்திலிருந்து தொடங்குகிறது; GLC 43 கூபேவின் எக்ஸ்-ஷோரூம் விலை 78 லட்ச ரூபாய். இந்த ஆண்டில் 12 கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளது பிஎம்டபிள்யூ. அதில் முற்றிலும் புதிய 3 சீரிஸ் செடான், 8 சீரிஸ் கூபே, புதிய X6 மற்றும் X7 எஸ்யூவிகள், Z4 Roadster, X1 மற்றும் 7 சீரிஸ் கார்களின் பேஸ்லிஃப்ட் குறிப்பிடத்தகுந்தவை.