Published:Updated:

மெர்சிடீஸ் பென்ஸ் V-Class... இந்த லக்ஸூரி எம்.பி.வி-யில் என்ன ஸ்பெஷல்?!

இதில் 6 சீட் மாடலின் நடுப்புற வரிசை இருக்கைகள் கொஞ்சம் ஸ்பெஷல்! அதாவது இங்கே இருக்கும் 2 ArmChair பாணியிலான இருக்கைகளை, தேவைபட்டால் மூன்றாவது வரிசையைப் பார்த்தபடி வைத்துக் கொள்ளமுடியும்.

மெர்சிடீஸ் பென்ஸ் V-Class... இந்த லக்ஸூரி எம்.பி.வி-யில் என்ன ஸ்பெஷல்?!
மெர்சிடீஸ் பென்ஸ் V-Class... இந்த லக்ஸூரி எம்.பி.வி-யில் என்ன ஸ்பெஷல்?!

2019-ம் ஆண்டை இந்தியாவில் வித்தியாசமாகத் தொடங்கியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். V-Class எனும் லக்ஸூரி எம்பிவி-யை, 68.40 லட்சம் ரூபாய்க்கு (எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் விட்டோரியா நகரத்தில் மெர்சிடீஸ் பென்ஸுக்குச் சொந்தமாக இருக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு CBU முறையில் முழு காராக V-Class இறக்குமதி செய்து விற்பனையாகவுள்ளது. இந்த நிறுவனத்தின் தாய்நாடான ஜெர்மனியைவிட ஸ்பெயினில் உற்பத்திச் செலவு குறைவு என்பதால், இந்தியாவில் அதிரடியான விலையில் இந்த லக்ஸூரி எம்பிவி களமிறங்கியுள்ளது. உலகளவில் Viano காருக்கு மாற்றாக V-Class பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. எனவே, பிராக்டிக்கலான மற்றும் சொகுசான கேபினில், மெர்சிடீஸ் பென்ஸ் காருக்குரிய லக்ஸூரி அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 

சர்வதேசச் சந்தைகளில் Compact Wheelbase (4,895 மிமீ), Long Wheelbase (5,140 மிமீ), Extra Long Wheelbase (5,370 மிமீ) எனும் மூன்று மாடல்களில் V-Class விற்பனை செய்யப்படுகிறது. என்றாலும், இந்தியாவில் Long Wheelbase (Exclusive) மற்றும் Extra Long Wheelbase (Expression) ஆகிய இரண்டு மாடல்களில் இந்த லக்ஸூரி எம்பிவி இந்தியாவில் டயர் பதித்திருக்கிறது. எனவே, Exclusive 6 சீட்டர் வேரியன்ட் என்றால், Expression 7 சீட்டர் வேரியன்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 6 சீட் மாடலின் நடுப்புற வரிசை இருக்கைகள் கொஞ்சம் ஸ்பெஷல்!

அதாவது இங்கே இருக்கும் இரண்டு ArmChair பாணியிலான இருக்கைகளை, தேவைப்பட்டால் மூன்றாவது வரிசையைப் பார்த்தபடி வைத்துக்கொள்ள முடியும். முன்பக்க இருக்கைகளுக்கு வழக்கமான கதவுகள் வழங்கப்பட்டிருந்தால், பின்பக்க இருவரிசை இருக்கைகளுக்கு Sliding கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில்வர், நீலம், கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் மற்றும் இரண்டு வேரியன்ட்களில் V-Class காரை வாங்க முடியும். 

இரண்டு வேரியன்ட்களுக்குமிடையே சிறப்பம்சங்களில் வித்தியாசம் இருக்கிறது. Expression வேரியன்ட்டில் LED ஹெட்லைட்ஸ், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், மல்ட்டிமீடியா சிஸ்டம், 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. Exclusive வேரியன்ட்டில் Adaptive Dampers, Ambient Lighting, 17 இன்ச் அலாய் வீல்கள், பூட் ஸ்பேஸை எளிதில் அணுகுவதற்கு உதவும் பின்பக்கக் கண்ணாடி, Nappa லெதர் உள்அலங்காரம், பின்பக்கத்தில் நகர்த்திக்கொள்ளக்கூடிய Centre Table இருக்கின்றன. 640W 15 ஸ்பீக்கர் Burmester Surround சவுண்ட் சிஸ்டம், இரண்டு வேரியன்ட்களிலும் ஆப்ஷனல் அம்சம். ஆறு காற்றுப்பைகள், Attention Assist, 360 Degree Camera, Active Parking Assist ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. V-Class காரில் OM651 சீரிஸ் 2.1 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் - 7G Tronic AT அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது 163bhp பவர் மற்றும் 38kgm டார்க்கை, பின்பக்கச் சக்கரங்களுக்கு அனுப்புகிறது. 

இது பழைய இன்ஜினாக இருந்தாலும், மெர்சிடீஸ் பென்ஸின் லேட்டஸ்ட் மாடல்களில் இருக்கும் OM654 சீரிஸ் டீசல் இன்ஜின்போல BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்டிருக்கிறது. `கார் உற்பத்தியாளர்கள், வருடத்துக்கு 2,500 கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துகொள்ளலாம்' என மத்திய அரசாங்கம் விதிகளைத் தளர்த்தியதன் பயனை, இந்த லக்ஸூரி எம்பிவி பெற இருக்கிறது.

கடந்த 2011-ல் R-Class காரை, லக்ஸூரி எம்பிவி செக்மென்ட்டில் மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது தெரிந்ததே. ஆனால், அதற்குக் கிடைத்த குறைவான வரவேற்பால், அந்த காரின் விற்பனையை அந்த நிறுவனம் உடனடியாக நிறுத்திவிட்டது. எனவே, இரண்டாவது முறையாக இந்த செக்மென்ட்டில் கால் பதித்திருக்கும் மெர்சிடீஸ் பென்ஸ், 3/5/7 ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் VIP-களுக்கு லக்ஸூரி கார்களை வழங்கும் போக்குவரத்து நிறுவனங்களை மனதில்வைத்து V-Class காரை வெளியிட்டிருக்கிறது. என்றாலும், காரை Office Cum Meeting Hall ஆகப் பயன்படுத்துவோருக்கு இது வரப்பிரசாதம் எனலாம்.