Published:Updated:

விற்பனையிலும் விருதுகளிலும் இதுதான் நம்பர் ஒன்! #HondaJazz

விற்பனையிலும் விருதுகளிலும் இதுதான் நம்பர் ஒன்! #HondaJazz
விற்பனையிலும் விருதுகளிலும் இதுதான் நம்பர் ஒன்! #HondaJazz

சில ஆண்டுகளாக இந்தியர்களின் விருப்பமான கார்களில் ஹேட்ச்பேக் செக்மென்ட் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்டைலிஷ் லுக், சராசரி குடும்பத்துக்கு ஏற்ற இடவசதி, இந்திய சாலைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு, எளிதில் வாங்கக்கூடிய விலை என ஹேட்ச்பேக்குகள் நம் மக்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளன. இதனிடையே உலகப்புகழ் ஹோண்டா நிறுவனம் 'ஹோண்டா ஜாஸ் (JAZZ)' காரை அறிமுகப்படுத்தி இந்திய ஹேட்ச்பேக் சந்தையில் பரபரப்புக்கு உள்ளாக்கியது. 2018 ஆம் வருடம் அப்கிரேடட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருந்த ஹோண்டாவின் ஜாஸ் கார் எப்படி இருக்கிறது? ஒரு பார்வை...

விற்பனையிலும் விருதுகளிலும் இதுதான் நம்பர் ஒன்! #HondaJazz

பில்டு குவாலிட்டி, இடவசதி, இன்ஜின் தரம் ஆகியவற்றில் இந்த செக்மென்ட்டின் பெஞ்ச் மார்க் கார், ஜாஸ் என்றே சொல்லலாம். 2015 ஆண்டு முதன்முறையாக அறிமுகமானபோது, இந்தக் காரை அடிப்படையாக வைத்துதான் போட்டியாளர்கள் தங்களின் ப்ரீமியம் ரேஞ் ஹேட்ச்பேக் கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தார்கள். 100 சதவிகிதம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஜாஸ், தற்போது மேனுவல் பெட்ரோல், ஆட்டோமேட்டிக் பெட்ரோல் மற்றும் மேனுவல் டீசல் ஆகிய வேரியண்டுகளில் கிடைக்கிறது.

இன்ஜின்

ஹோண்டாவின் இந்த காமன் ரெயில் டீசல் இன்ஜின், 98.6bhp சக்தியை 3,600 ஆர்பிஎம்மிலேயே வெளிப்படுத்துகிறது. 20.4 kgm டார்க்கை 1750 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பிடித்துள்ளது. டர்போ லேக் இல்லாமல் ஓட்டுவதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுதான் ஜாஸின் பலம். டீசல் வேரியண்டில் 1,500-2,500 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி மிகவும் சீராக இருப்பதால், நகருக்குள் ஒரு பெட்ரோல் காரை ஓட்டுவது போன்றே ஈஸியாக இருக்கிறது. கிளட்ச் ஹெவியாக இல்லை என்பதோடு, கியர் லீவரும் ஸ்போர்ட்டியாக இருப்பதால், டிரைவிங் அனுபவம் ஜாஸில் குதூகலம்.

ஓட்டும் அனுபவம் எப்படி?

ஹேட்ச்பேக் கார்களை 2 லட்ச ரூபாய்க்கும் வாங்க முடியும்; 9 லட்ச ரூபாய்க்கும் வாங்க முடியும். ப்ரீமியம் ஹேட்ச்பேக் என வகைப்படுத்தப்படும் இந்த 6 முதல் 9 லட்ச ரூபாய் ஹேட்ச் பேக் கார்களில் ஓட்டுதல் தரம் என்பது மிகவும் முக்கியம். கார் பார்ப்பதற்கு ஸ்டைலாக, பெர்ஃபாமென்ஸில் கில்லியாக மட்டும் இருந்தால் போதாது, ஓட்டுதல் தரம் மிகவும் முக்கியம். மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, அலுங்கல் குலுங்கல் இல்லாத காராகவும், திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு கையாளுமையில் சிறந்த காராகவும் வேண்டும். இந்த வகையில் , ஹோண்டா ஜாஸ் முன் நிற்கிறது. நெடுஞ்சாலையில் வேகமாகப் பயணிக்கும்போது, ஹோண்டா ஜாஸ் ஸ்டெபிளிட்டியில் நம்பிக்கையளிக்கிறது. ஸ்டீயரிங்கை வளைக்கும்போது முன் வீல்களில் அதன் திருப்பம் உடனடியாகத் தெரிய வேண்டும், ஸ்டீயரிங் ஃபீட்பேக்கில் ஜாஸ் சிறப்பாக செயல்படுகிறது.

விற்பனையிலும் விருதுகளிலும் இதுதான் நம்பர் ஒன்! #HondaJazz

உள்ளே...

பாதுகாப்புக்கு ஏபிஎஸ் பிரேக்குகளும், 2 காற்றுப் பைகளும் உள்ளன. ஜாஸில் கூடுதலாக, கிளைமேட் கன்ட்ரோல்  டச் ஸ்கிரீனிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. பின் பக்க இடவசதியைப் பொறுத்தவரை ஹோண்டா ஜாஸ் நம்பர் ஒன். கால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்து பயணிக்க தாராளமான இடவசதி உள்ளது. ஹோண்டா ஜாஸில் பெட்ரோல் டேங்க், முன் இருக்கைகளுக்குக் கீழே வைக்கப்பட்டிருப்பதால், பின் இருக்கைகளின் கீழ் பைகள் உள்ளிட்ட பொருட்களை வைக்கவும் இடம் இருக்கிறது.

தரமான அம்சங்கள், அதிக இடவசதிகொண்ட, மைலேஜிலும் சிறந்த காராக பாஸ்மார்க்கைத் தாண்டி  ஸ்கோர் செய்து அசத்துகிறது ஹோண்டா ஜாஸ்.  75 நாடுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜாஸ் கார்களை விற்றுள்ளது ஹோண்டா. உலக அரங்கில் இதுவரை 70ற்கும் மேற்பட்ட விருதுகளை ஜாஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாஸின் சில அம்சங்கள்:

17.7 செ.மீ. டச் ஸ்க்ரீன் 
ஆடியோ, வீடியோ & நேவிகேஷன் சிஸ்டம் |

ஸ்டார்ட் / ஸ்டாப் செய்ய புஷ் பட்டன் 
ஸ்மார்ட் கீ |

ரியர் LED விங் லைட் |

பேடில் ஷிஃப்ட் கொண்ட 7 ஸ்பீடு CVT
க்ரூஸ் கன்ட்ரோல் 

ஹோண்டா ஜாஸ் காரை வாங்க விருப்பமா? ஜாஸை டெஸ்ட் டிரைவ் செய்யவும், மேலும் விவரங்கள் அறிந்துகொள்ளவும் கீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்.  

விவரங்களைப் பெற