Published:Updated:

ஒரு மாதத்தில் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்ததா ஏர்டெல் நிறுவனம்?

ஒரு மாதத்தில் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்ததா ஏர்டெல் நிறுவனம்?
ஒரு மாதத்தில் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்ததா ஏர்டெல் நிறுவனம்?

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் டிசம்பர் முடிவில் இந்தியாவில் மொத்தம் 28.42 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த தகவலில் இருந்துதான் சுமார் ஐந்தரை கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை ஏர்டெல் இழந்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நவம்பர் மாதத்துக்கான தகவல்கள் கொண்ட அறிக்கையை ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில் மொத்த ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.1 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீழ்ச்சியின் மூலம் ஏர்டெலின் எண்ணிக்கைக்கும் ஜியோவின் எண்ணிக்கைக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. முதல் இடத்தில் சமீபத்தில் உருவான கூட்டணியால் வோடஃபோன்-ஐடியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வாடிக்கையாளர் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுவது, இன்கமிங் கால்களுக்கும் வேலிடிட்டி பேக் மூலம் பணம் கட்ட வேண்டும் என்ற புதிய மாற்றம் வந்ததுதான் என அனைவரும் கருதுகின்றனர். இதனால் வரும் மாதங்களில் இன்னமும்கூட அதிக வாடிக்கையாளர்களை இழக்க ஏர்டெலுக்கு வாய்ப்பிருக்கிறது.

இந்த இன்கமிங் கால்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் சர்ச்சையைப் பற்றி விரிவாகப் பார்க்க கீழே இருக்கும் கட்டுரையைக் க்ளிக் செய்யவும்.