Published:Updated:

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?
பிரீமியம் ஸ்டோரி
தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

Published:Updated:
தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?
பிரீமியம் ஸ்டோரி
தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?
தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

‘கஜா’ பேரிடரை வழியனுப்பி வைத்த கையோடு, 2019-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது, தமிழகம். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2016-ல் வர்தா புயல், 2017-ல் ஒகி புயல், 2018-ல் கஜா புயல் என வரிசையாக இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பேரிடர்களை இயற்கைப் பேரிடர் மற்றும் செயற்கையான பேரிடர் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கையான பேரிடர்கள் ஒருமுறை உருவாகவே அதிக ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். ஆனால், செயற்கையான பேரிடர்கள் மனிதச் செயல்பாடுகளால் உருவாக்கப்படுபவை. அவை, கால இடைவெளிகள் இல்லாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கும். நிலம், நீர், காற்று ஆகிய மூன்று காரணிகளை அதிகமாகச் சேதப்படுத்தும்போதும், இயற்கையை நவீன அறிவியலால் வெல்ல முற்படும்போது ஏற்படும் குளறுபடிகளாலும் செயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையிலும், 2018-ம் ஆண்டிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள்.

கூடங்குளம் போராட்டம் நடந்தபோது, கூடங்குளத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் ‘இது மூன்றாம் தலைமுறை அணு உலை, எந்தப் பிரச்னையும் வராது' என்றார்கள். அணு உலைக்காகப் போராடிய மக்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இப்போது, தேசிய அணுமின் கழகமே முன்வந்து, ‘எங்களிடம் அணுக் கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறது. அன்று மக்கள் சொன்னவற்றை, இன்று விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.

தொழிற்சாலை நகரமான தூத்துக்குடியில் 20 வருடங்களுக்கு மேல் நடந்துவரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து, துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கிறது. மொத்தமாக 14 உயிர்களைக் காவுவாங்கிய பின்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசு. ஆனாலும், ‘ஆலையை மூடியது தவறு’ என்று எதிர்த்துவந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் பசுமைத் தீர்ப்பாயத்தின் மூலம் ஆலையைச் செயல்படுத்தத் தயாரானது. அப்படியும் ஆலையை திறக்கக்ககூடாது; ஆலையை மூடத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதிது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம்.

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் நிதி உதவியோடு ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. இதற்காக ஐந்து மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுவருகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களில் விவசாய நிலங்களும் வனப்பகுதிகளும் அதிகமாக இருக்கின்றன. இது, மக்கள் போக்குவரத்துக்காகத்தான் என்று தமிழக அரசு சொன்னாலும், பாதுகாப்பு கேந்திரங்களுக்காகவே ஏற்படுத்தப்படுகிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள். இந்தத் திட்டத்தால் மொத்தமாக 2,554 ஹெக்டேர் விவசாய நிலங்களும், வனப்பகுதிகளும் அழிக்கப்படும். இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். ஆனாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த முழுவீச்சில் இறங்கியிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. தீர்ப்பில், ‘மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்குத் தடை இல்லை' என்று அதற்கான கதவு திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், நியூட்ரினோ மையம் இடைக்காலத் தடை தீர்ப்பில், ‘இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான், இந்தத் திட்டத்தைத் தொடர முடியும்’ என்று சொல்லியிருக்கிறது. அந்த அனுமதி வழங்கிவிட்டால் நியூட்ரினோவை முழுமையாக இந்திய அரசு முன்னெடுக்கும்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு எதிராக மக்கள் கொதித்தெழவே... திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும் டெல்டா மாவட்டங்களில் இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டு மூன்று இடங்களில் எரிவாயு எடுக்கவும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. அதற்கான பணிகளும் ஆரம்பமாகவுள்ளன.

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

“சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில்கூட எப்போதாவது நிகழும் இயற்கைப் பேரிடர், சில ஆண்டுகளாக வருடாந்திர நிகழ்வாகிவருகிறது. இதற்கு மனித தவறுகள்தான் காரணம் என்று உலக அளவில் உறுதியாகியிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தமிழ்நாடும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுபற்றி அக்கறை காட்ட வேண்டிய அரசும் எதுவும் செய்யவில்லை. அதேசமயம், பொதுச் சமூகத்தில் சூழல் போராட்டங்கள் அதிகம் விவாதிக்கப்படுவதாக மாறியிருப்பது நம்பிக்கையை விதைத்தாலும், அச்சம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை” என்கிறார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்.

ஆனால், அமெரிக்கன் கல்லூரியின் பயனுறு அறிவியல் துறைத் தலைவரும், நியூட்ரினோ திட்டத்தின் ஒத்துழைப்பு விஞ்ஞானியுமான, ஸ்டீபன் ராஜ்குமார், “எந்த ஒரு தொழிற்சாலையோ, திட்டமோ மனித முன்னேற்றத்துக்கு முக்கியமானதுதான். அப்படியான திட்டங்களைச் செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் வரும். அதைத் தடுப்பதற்கான முறைகளும் அறிவியல்பூர்வமாக இருக்கின்றன. அந்தத் தொழில்நுட்பங்களும் நமக்குத் தெரியும். தொழிற்சாலைகள் செயல்படும்போது சுற்றுச்சூழலைக் காக்கும் முறைகளைக் கண்டிப்புடன் கையாள வேண்டும். ஸ்டெர்லைட்டை எடுத்துக்கொண்டால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாகச் செயல்பட்டிருந்தால், இந்தப்  பிரச்னைகளே வந்திருக்காது. சுற்றுச்சூழல் சட்டத் திட்டங்களை மதிக்காமல் செயல்படும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பற்றி மட்டும் பேசுபவர்கள், அரசின் திட்டங்களை மட்டுதான் எதிர்க்கிறார்கள். நியூட்ரினோ தமிழ்நாட்டுக்குப் பயன்தரக்கூடிய திட்டம். ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல்  பொத்தாம்பொதுவாகச் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்று அதையும் எதிர்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இங்குத் தொடங்கப்படும் அனைத்துத் திட்டங்களும் சுற்றுச்சூழல் விதிகளின்படிதான் அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் விதிகளை மீறித் திட்டங்களைத் தொடங்குவதற்கு இந்தியாவில் சட்டம் அனுமதிப்பது இல்லை. அதேசமயம், சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அப்படி முறையாகப் பின்பற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அதனால் நாட்டுக்குத் தொழிற்சாலைகளும், நல்ல திட்டங்களும் தேவையான ஒன்று” என்றார்.

இருதரப்பையும் கூர்ந்து கவனித்து, அரசுகள் செயல்பட வேண்டும்!

- துரை.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism