நம்மில் பெரும்பாலோர் வருமான வரியைச் சேமிப்பதற்கான முதலீட்டை பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் யோசிக்க ஆரம்பிக்கிறோம். கடைசி நேரத்தில் செய்யப்படும் முதலீடுகளில் பல தவறாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

பொதுவாக, பிராவிடென்ட் ஃபண்ட், பிள்ளைகளின் கல்விக் கட்டணம், ஆயுள் காப்பீடு பாலிசி, வீட்டு வாடகை போன்ற வரிச் சேமிப்பு விஷயங்கள் பலருக்கும் இருக்கும். இந்த நிலையில், வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க அவசர அவசரமாக ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, அடுத்துவரும் ஆண்டுகளில் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்.

ஆயுள் காப்பீடு பாலிசிகள்

கடைசி நேரத்தில் வருமான வரியை மிச்சப்படுத்தக் கொடுப்பதற்கென்றே சில லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் பலமுறை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லியும் கேட்காத பலரும், மார்ச் மாதம் தேடிவந்து இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவார்கள்.

பல ஏஜென்ட்டுகள், நீங்கள் அதிகத் தொகையை வரிச் சேமிக்க முதலீடு செய்யவேண்டும் என்பதால், டேர்ம் பிளான் எடுப்பதால், எந்தப் பயனும் இல்லை; எண்டோவ்மென்ட் பாலிசி அல்லது யூலிப் பாலிசி எடுத்தால்தான் நீங்கள் கட்டிய பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்பார்கள்.

ரூ.1 லட்சம் பிரீமியம் கட்டினால், ரூ.30,000 வரி மிச்சமாகும் என எண்டோவ்மென்ட் அல்லது யூலிப் பாலிசியை பரிந்துரை செய்வார்கள் அதை விற்கும் ஏஜென்ட்டுகள். இந்த பாலிசிகளில் அடுத்துவரும் ஆண்டுகளிலும் இதே அளவுக்கு பிரீமியத்தைக் கட்ட வேண்டும் என்கிற விவரம் தெரியாமலே பலரும் இந்த பாலிசியை எடுத்துவிடுகிறார்கள். அடுத்துவரும் ஆண்டுகளில், பிரீமியம் கட்டச் சொல்லி நோட்டீஸ் வரும்போதுதான், ‘அடடா தவறு செய்துவிட்டோமே’ என்று தவிக்கத் தொடங்குகிறார்கள்!

உங்களிடம் இருக்கும் ஆயுள் காப்பீடு பாலிசி களின் மொத்தக் கவரேஜ் தொகை உங்களின் ஆண்டுச் சம்பளத்தைப்போல் சுமார் 15 மடங்கு இருக்கும்பட்சத்தில், புதிதாக பாலிசி எடுக்கத் தேவை இல்லை. அப்படியே கவரேஜ் குறைவாக இருக்கும்பட்சத்தில் ‘பிரீமியம் குறைவு, கவரேஜ் அதிகம்’ எனச் செயல்படும் டேர்ம் பிளான் எடுத்துக்கொண்டு மீதித் தொகைக்கு வேறு முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம்.

உங்கள் முடிந்தவரை எண்டோவ்மென்ட் பாலிசி அல்லது யூலிப் பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது. காரணம், அவற்றில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறைவாக இருக்கும்; வருமானமும் குறைவாக இருக்கும். அடுத்த ஆண்டு இதே அளவுக்கு பிரீமியம் கட்டச் சொல்லி ஏஜென்ட் கேட்கும்போதுதான் சிக்கல் உருவாகும்.

அந்த ஆண்டு பிள்ளைகளின் கல்விச் செலவு உயர்வு, பிராவிடென்ட் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் அந்த அளவுக்கு முதலீடு செய்யமுடியாமல் போகக்கூடும். அல்லது அந்த அளவுக்கு முதலீடு செய்யக் கைவசம் பணம் இல்லாமல் இருக்கும். அந்தச் சமயத்தில்தான், ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று பலரும் வருத்தப்படுவார்கள்.

கடன் வாங்கி வரிச் சேமிப்பு முதலீடு வேண்டாம்

சிலருக்கு வருமான வரியை சேமிக்க முதலீடு செய்ய போதுமான தொகை கையில் இருக்காது. அதுபோன்றவர்களுக்கு ஏஜென்ட்டுகள் நமக்குத் தெரிந்தவர் இருக்கிறார், குறைவான வட்டிதான், கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி, கடன் வாங்க வைத்து முதலீடு செய்ய வைப்பதும் நடக்கிறது. வேறு சிலர், ஏற்கெனவே யூலிப் பாலிசி எடுத்திருப்பார்கள். அதில், பகுதித் தொகையை எடுக்கும் வசதி இருக்கிறது. அதனை எடுத்து அதே பாலிசியில் டாப்அப் செய்யும்போது வரிச் சலுகை கிடைக்கும்.

இப்படிச் செய்வதில் தவறு இல்லை. இதற்குப் பதில், இந்தத் தொகையை கொண்டு புதிய யூலிப் பாலிசிக்கு பிரீமியம் கட்டுவதாக இருந்தால் பாலிசி எடுப்பவருக்கு லாபகரமாக இருக்காது. அது ஏஜென்ட்டுக்குதான் லாபமாக இருக்கும். இதுபோன்ற சூழலைத் தவிர்த்துவிடலாம்.

அதேநேரத்தில், வரிச் சேமிப்பு ஃபண்டில் ‘லாக் இன் பிரீயட்’ முடிந்திருக்கும்பட்சத்தில், யூனிட்டுகளை விற்று மறுமுதலீடு செய்து வரிச் சலுகை பெறுவதில் தவறில்லை. கடைசி நேரத்தில், வருமான வரிச் சலுகைக்காகச் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும் அடுத்துவரும் ஆண்டு களுக்குத் தொடராமல் இருப்பதுபோல் பார்த்துக் கொள்வது நல்லது.

என்ன செய்யலாம்?

அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் கட்டாயம் முதலீடு செய்வது என்கிற அவசியம் எதுவும் இல்லாத, வரிச் சலுகை அளிக்கும் ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள், தேசிய சேமிப்புப் பத்திரம் (என்.எஸ்.சி), பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (இ.எல்.எஸ்.எஸ்) போன்றவற்றில், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டை மேற் கொள்ளலாம்.

தற்போதைய நிலையில், பங்குச் சந்தை இறக்கத்தின் போக்கில், வரிச் சேமிப்புக்காக மொத்த முதலீடு செய்யவேண்டியவர்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

- சி.சரவணன்