Published:Updated:

கருணாரத்னேவை பதம்பார்த்தது கம்மின்ஸ் வீசிய பந்து! - மைதானத்தில் சுருண்டுவிழுந்த இலங்கை வீரர்

கருணாரத்னேவை பதம்பார்த்தது கம்மின்ஸ் வீசிய பந்து! - மைதானத்தில் சுருண்டுவிழுந்த இலங்கை வீரர்
கருணாரத்னேவை பதம்பார்த்தது கம்மின்ஸ் வீசிய பந்து! - மைதானத்தில் சுருண்டுவிழுந்த இலங்கை வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில், பந்து தாக்கியதால் இலங்கை வீரர் கருணாரத்னே மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.


ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளுக்கும்  இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு  534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் இன்னிங்ஸை கருணாரத்னே - திரிமனே ஆகியோர் தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளித்து இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர். 31-வது ஓவரை ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசினார். கம்மின்ஸ் வீசிய பந்து கருணாரத்னேவின் கழுத்தைப் பதம்பார்த்தது. அவர், மைதானத்தில் சுருண்டுவிழுந்தார். மைதானமே நிசப்தம் ஆனது. உடனடியாக கள நடுவர் மருத்துவ உதவிகளைக் கோரினார்.


இதுபோன்ற ஒரு வேகப்பந்துதான், ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரின் உயிரைப் பறித்தது. அந்த வலி ஆஸ்திரேலிய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். மிகவேகமாக கருணாரத்னேவுக்கு முதல் உதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலிய மருத்துவர் மைதானத்திற்கு விரைந்தார். கருணாரத்னே நினைவு இழக்கவில்லை. அவர், மற்றவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். கை, கால்களில் அசைவுகள் இருந்தது. ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு மைதானத்திலிருந்து அவர் வெளியே கொண்டுசெல்லப்பட்டார். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பயப்படும்படி எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.