பெயர்: பாலாஜி I ஊர்: சென்னை I தொழில்: சுயதொழில் I கார்: ஹூண்டாய் கிராண்ட் i10 (டீசல்) இடம்: கைலாசகோனா, ஆந்திரா I பயண தூரம்: சுமார் 350 கி.மீ

‘‘ஆந்திராவில் பார்க்கிறதுக்குப் பெருசா ஒண்ணும் கிடையாதுங்க...’’ என்பவர்கள், சுற்றுலா பற்றித் தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், ‘சென்னைக்கு மிக அருகில்’ எனும் கேப்ஷன் போட்டு சிலாகித்தபடி, சித்தூர் பக்கம் வண்டியைக் கிளப்புவார்கள் ‘வாண்டர்லஸ்ட்’டுகள். உண்மையில் சென்னைக்கு மிக அருகில், சித்தூரில் அருவிகளுக்குப் பஞ்சமே இருக்காது. நாகலாபுரம் அருவிகள், அர்ரே அருவி, தடா, கோனே, கங்கண்ணசிரசு, கைகல் என்று எக்கச்சக்க இடங்கள் சித்தூரிலேயே உண்டு. இவையெல்லாமே சென்னையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு நாள் டூரிஸ்ட் ஸ்பாட்கள் என்பது இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்.

அப்படி ஒரு திட்டம்தான் காதலர் தினத்தன்று போடப்பட்டது. ‘‘நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம். சட்டுனு ஒரு ஃபால்ஸ் போய்க் குளிச்சுட்டு, ஒரு சின்ன ட்ரெக்கிங் போயிட்டு, வெயிட்டா ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு வரலாம்’’ என்று தனது கிராண்ட் i10 காருடன் நம்மைத் தேடி வந்துவிட்டார் பாலாஜி. முதலில் ‘கந்திக் கோட்டா’ எனும் இடம்தான் ஸ்பாட்டாக இருந்தது. ‘ஃபால்ஸ் போயே ஆகணும்’ என்று அடம் பிடித்ததால், சித்தூரில் உள்ள கைலாசகோனா எனும் இடத்தில் உள்ள அருவிக்கு ஸ்கெட்ச் போட்டோம். டீசலை நிரப்பிவிட்டு, கோனே ஃபால்ஸ் எனும் கைலாச கோனாவுக்கு வெகுதாமதமாகவே கிராண்ட் i10-யை விரட்டினோம்.

* செங்குன்றம், புழல் ரூட்தான் பாதை. செங்குன்றம் தாண்டி IOC பெட்ரோல் பங்க். இடதுபுறம் திரும்பினால் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர், நாகலாபுரம், கைலாசகோனா என்பதுதான் ரூட். புழல் டோல்கேட்டில் ‘லோக்கல்’ என்று சொல்லியதும் கேட் திறந்து விட்டார்கள். ‘‘இங்கதாங்க ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணினேன்.’’ என்றார் பாலாஜி. TN18 ரிஜிஸ்ட்ரேஷன் எண் கொண்டவர்கள் கவனிக்க.

* கார் வாங்கப் போகும்போது, நாம் ஒரு காரை நினைத்துப் போனால், வேறு ஒரு காரை புக் செய்துவிட்டு வருவோமே... அதுபோல், நாம் ஒன்று நினைக்க, நமக்கு வேறொரு டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு வழி காட்டும் பாதைகள் சித்தூரில் ஏராளம். நாகலாபுரத்தில் மட்டுமே கிட்டத்தட்ட நான்கைந்து அருவிகள் காட்டினார்கள். பெரியபாளையம் தாண்டி பிச்சாட்டூர் வழியாக வலதுபுறம் திரும்பினால் நாகலாபுரம் அருவி. நேராகப் போனால் திருப்பதி.

* தமிழ்நாட்டு எல்லையான ஊத்துக்கோட்டையில் இருந்தே ஜாங்கிரியைப் பிய்த்துப் போட்டதுபோல் சைன் போர்டுகள் இருந்தன. எங்கேயாவது கைலாசகோனாவுக்கான பெயர்ப் பலகை என்று தெரியும் என்று நினைத்து கூகுள் லென்ஸில் சோதனை செய்தால், எல்லாமே டாஸ்மாக் கடைகளுக்கான போர்டுகள்.

* ஆந்திர சாலை தமிழ்நாடு மாதிரி இல்லை; கொஞ்சம் தெலுங்குப் படம் பார்ப்பது மாதிரி ரஃப் அண்ட் டஃப்பாகவே இருந்தது. வீக்கான சஸ்பென்ஷன், டயர் கொண்ட கார்கள்... இங்கே பம்மிப் பம்மித்தான் ஆக வேண்டும். பச்சைப் பசேல் வயல்கள், மஞ்சள் சூரியகாந்திகள், கறும்புத் தோட்டம் என்று கலர்ஃபுல்லாக இருந்தது பாதை. எல்லாவற்றிலும் போட்டோ ஷூட்.

* திருப்பதி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பினால் கைலாசகோனா. நல்லவேளையாக சைன் போர்டு வைத்திருந்தார்கள். ‘நீலு பாகவுந்தி’ என்றார்கள். பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு டவுசர், துண்டு எல்லாம் பேக் செய்துவிட்டுக் கிளம்பினால், நீலு பார்த்துக் கண்ணில் நீர் வந்துவிட்டது. பெரிதாக எதிர்பார்த்துப் போனால், கோவணத் துண்டுபோல் மெல்லிசாகக் கொட்டிக் கொண்டிருந்தது அருவி.

* பார்ப்பதற்குத்தான் மெல்லிசாக இருக்கிறது அருவி. அருவிக்குத் தலையைக் கொடுத்தால், ஏதோ ஒரு ஜென்நிலை கிடைக்கிறது. வலிக்கவும் இல்லை; ‘என்னடா குளியல் இது’ என்று கடுப்பும் வரவில்லை. அதுதான் கோனே ஃபால்ஸின் ஸ்பெஷல்.

* காடுகள் மட்டுமே தோன்றிய காலத்தில் இருப்பதுபோன்றதொரு இயற்கைச் சூழலில், பச்சைத் தலை விரித்த மரங்களினூடே, தாய் வயிற்றிலிருந்து குழந்தை சுகப்பிரசவம் ஆவது மாதிரி மென்மையாக பாறைகளில் வழிந்தோடும் அருவி மீது எல்லோருக்கும் பாசம் வரும். அருவிக்கும் நம் மீது பாசம். அத்தனை பாசி படிந்து வழுக்கித் தள்ளியது அருவி.

* தானாகக் கைகள் குவிந்துவிடும் அழகில் அத்தனை அற்புதமாய் அமைந்திருக்கிறது இங்குள்ள சிவன் கோவில். இடது பக்கம் அருவி, மேலே மலை, கீழே ஓடை, சுற்றிலும் மரங்கள் என்று ‘Z' பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்போல் அத்தனை பாதுகாப்பாய் கோவிலுக்குள் குடிகொண்டிருக்கிறார் சிவன். இவரால்தான் இந்த இடத்துக்கு கைலாசகோனா என்றே பெயர் வந்தது என்றார்கள்.

* சிவனுக்குப் பிறகு குரங்குகள்தான் கோனேவில் ஹைலைட். பஸ் கட், ஸ்பைக்கி, ஷார்ட் கட், பவுல் கட் என்று வெரைட்டியான ஹேர்ஸ்டைல்களில் குரங்குகள் கோனேவை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தன. மூத்த குரங்கார் ஒருவர், பைக்கின் டேங்க் கவரைத் தன் ஸ்டைலில் பிரித்து, பைக்கின் RC புக்கை எடுத்துப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

* பைக்கில் வருபவர்கள் டேங்க் கவரில் தின்பண்டங்கள் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ‘ஐய்யய்யோ... என் காரோட ஆன்டெனா’ என்று பதறிவிட்டார் பாலாஜி. சேட்டைக்காரக் குரங்கொன்று கிராண்ட் i10-ன் ஆன்டெனாவில், தண்டால் போன்ற ஏதோ உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

* இந்த அருவிக் குளியல் போதாதவர்களுக்கு, இங்கேயே இன்னொரு அற்புதமான இடமும் இருக்கிறது. ‘நீச்சல் அடிச்சுக் குளிக்கணும்னா மேலே போங்க’ என்று ஏற்கெனவே நம் கைடு ஒருவர் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. இடப்பக்கம் கிர்ரென குறுகலாக மேலேறிய ஒரு மலைப்பாதையில் பயணித்தோம்.

* பெரிய பெரிய பாறைகளை இயற்கையே படிக்கட்டு மாதிரி தயார் செய்து வைத்திருப்பது போன்றதொரு பாதை. ஒரு அம்சமான ட்ரெக்கிங் ரெடியாகிக் கொண்டிருந்தது. வழி தெரியாமல் போனால், அம்சம் துவம்சமாகிவிட வாய்ப்புண்டு. மேலே ஏறியதும் சட்டென இடப்புறம் திரும்ப வேண்டும். முதல் தடவை கோனேவுக்கு வந்தபோது, வழிகாட்ட ஆளே இல்லாமல் மலை உச்சி வரை சென்று மூச்சு வாங்க நடந்து பல்பு வாங்கியது நினைவுக்கு வந்தது.

* வேற லெவலில் இருந்தது மலை உச்சி. கண்களை மூடி அப்படியே சித்தர் மாதிரி அமர்ந்து விடலாம்போல இருந்தது. இடது பக்கம் ஒரு பெரிய குளம். இங்கிருந்து வழியும் நீர்தான் கீழே நாம் குளித்துவிட்டு வந்த இடம் என்றார்கள். சிலர் கவுண்டமணி ஸ்டைலில் ‘தலைகீழாத்தான் குதிக்கப் போறேன்’ என்று அரைக்கால் டவுசருடன் டைவ் அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆள் மூழ்கும் அளவே ஆழம் என்பதால் டைவிங்கில் கவனம் தேவை.

* கோனேவில் உள்ளே நுழையும்போது, பார்க்கிங்கிலேயே மடக்கி விடுகிறார்கள் ஆந்திர அண்ணையாக்கள். ‘‘சார், தமிழா...? சாப்பாடு செமையா இருக்கும். நாட்டுக்கோழியா, மீனா, மட்டனா, சிக்கனா? எது வேணுமோ, சொன்னீங்கன்னா குளிச்சுட்டு வர்றதுக்குள்ள பிரமாதப்படுத்திடலாம்’’ என்று கார் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ஏற்ற மொழியில் வியாபாரம் செய்கிறார்கள்.

* குளித்து முடித்து சாப்பிட உட்கார்ந்தால், குரங்குகள் தொல்லைதான் தாங்க முடியவில்லை. நம் வாய்க்குள் கையை விட்டுப் பிடுங்கி எடுக்க மட்டும்தான் குரங்குகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மற்றபடி உரிமையுடன் உணவைப் பகிர்ந்து உண்ணத் தொடங்கின.

* அருவிக்கு நுழையும் முன்பு கீழே கம்பு அதிரசம், முறுக்கு, சீடை போன்றவற்றை விற்கும் பாட்டிகள், கையில் எப்போதும் தடியோடுதான் வியாபாரம் செய்கிறார்கள்.

* கோனேவில் காட்டுக்கு நடுவே தங்குவதற்கும் அற்புதமான சாய்ஸ் உண்டு. ஹரிதா எனும் ரெஸார்ட்டுகள் ஆந்திரா முழுக்கப் பரவிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு ஓட்டல்’ மாதிரி ஆந்திர அரசாங்கமே நடத்து வதுதான் ஹரிதா ரெஸார்ட்டுகள். 950 ரூபாயில் இருந்து 2,500 வரை வாடகை.

* கோனேவில் இருந்து 2 கி.மீ திரும்பவும் ரிட்டர்ன் ஆகி, சும்மா ஒரு ஏரியாவில் காரை நிறுத்தி போட்டோ ஷூட் எடுக்கலாம் என்று காரை நிறுத்தினால்... அருவிச் சத்தம் மனசிலிருந்து இறங்கவில்லை. சினிமாவில் வருவது மாதிரி பிரமையாக இருக்குமோ என்று நினைத்தால்... பக்கத்தில் நிஜமாகவே சலசலப்பு. ‘இண்டியானா ஜோன்ஸ்' படத்தில் வருவதுபோல் லேசாக 400 மீட்டர் த்ரில்லிங்கோடு நடந்து போனால், அட... யாரும் இல்லாத ஏரியாவில் தனித்துவமாக, கவிதை மாதிரி விழுந்து கொண்டிருந்தது மற்றோர் அருவி.

* ‘இது என்ன பிரமாதம்? இது மாதிரி கோனேவில் தெருவுக்குத் தெரு அருவி இருக்கு.. சீஸன் அப்போ வந்தீங்கன்னா, உங்களுக்கு கோனேவை விட்டுப் போக மனசே இருக்காது’ என்றார் ஆந்திராவில் கும்பகோணம் காபிக் கடை வைத்திருக்கும் தமிழ்நாட்டுவாசி ஒருவர். எங்களுக்கு இப்போதே கோனேவை விட்டுப் பிரிய மனசு இல்லை.

தொகுப்பு: தமிழ் - படங்கள்: பா.காளிமுத்து

இதை நோட் பண்ணுங்க!

சென்னையில் இருந்து ஒரு நாள் டூருக்கு அற்புதமான இடம் - ஆந்திர மாநிலம் சித்தூர். சித்தூரில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தாறு அருவிகள் உண்டு. நாகலாபுரம், அர்ரே அருவி, உப்பலமடுகு, தலகோனா, வரதய்யபாளம், சத்திகூடு மடுகு, நானியாலா, கங்கண்ணசிரசு என்று எக்கச்சக்க அருவிகள் உண்டு. சென்னையில் இருந்து கைலாசகோனாவுக்கு அதிகாலையில் கிளம்பினால், மாலை இருட்டும்போது வீட்டுக்கு வந்துவிடலாம். திருப்பதி போகும் சாலையில் இடதுபுறம் திரும்பினால் கைலாசகோனா. இங்கு தங்கும் ரெஸார்ட்டுகள் சில உண்டு. ஆந்திர அரசாங்கத்தின் ஹரிதா ரெஸார்ட் மிகவும் மலிவு. ரூ.950-ல் இருந்து 2,500 வரை வாடகை.

மீன், இறால் போன்ற கடல் உணவுகளை நீங்களே வாங்கிவந்து கொடுத்தால், சமைத்துத் தர ஆள் உண்டு. நாட்டுக்கோழி, மட்டன் போன்றவற்றை அங்கேயே செலெக்ட் செய்து கொள்ளலாம். குரங்குகள் தொல்லை மிக மிக அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்க! டூரிஸ்ட்களின் கார்/பைக் சாவி முதற்கொண்டு ஆட்டையைப் போட்டு அலைக்கழித்த சம்பவங்கள் கைலாசகோணாவில் நிறைய உண்டு.

என்ன பார்க்கலாம்?

சித்தூர், நகரியில் இருந்து

* தடா அருவி

உப்பலமடுகு என்பதுதான் பெயர். ட்ரெக்கிங், அருவி, நீச்சல் என்று ஜமாய்க்கலாம். நடக்கத் தெம்பு உள்ளவர்கள் மட்டும் கிளம்பலாம்.

* கவுண்டின்யா வனச்சரகம்

வனவிலங்குகள் பார்க்க அருமையான இடம். யானைகள் அதிகம் என்கிறார்கள்.

* சதாசிவ கோனா அருவி

ட்ரெக்கிங், அருவிக் குளியல்தான் இங்கும் பிரசித்தம். எங்களுக்கு நிறைய கிளைகள் உண்டு என்பதுபோல், உள்ளுக்குள்ளே இரண்டு மூன்று கிளைகள் கொண்ட அருவி.

* மூலகோனா அருவி

பெரிதாக யாரும் அறிந்திராத டூரிஸ்ட் ஸ்பாட். நீச்சல் எக்ஸ்பெர்ட்டுகளுக்கான அருமையான இடம். இங்கும் இரண்டு கிளை அருவிகள் உண்டு.

* மாமண்டூர் அருவி

சென்னை - கடப்பா ஹைவேஸில் இருக்கிறது. நிறைய குளங்கள், ஓடைகள் என்று இயற்கை விரும்பிகளுக்கு அற்புமதமான ஸ்பாட்.

* தலக்கோனா

செப்டம்பர் முதல் ஜனவரி வரை அருமையான சீஸன். மேலே போகப் போக, அருமையான வியூவில் அற்புதமான குளியல் போடலாம்.

* வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்

இங்கு ஜங்கிள் சஃபாரி உண்டு. தலைக்கு 500 ரூபாய் கட்டணம். காலை 6 முதல் மாலை 4 மணி வரை சஃபாரி உண்டு. விலங்குகள் பார்க்கலாம்.

* பூபதேஸ்வரா கோனா அருவி

T.P கோட்டா எனும் கிராமத்தில் இருக்கும் அருவி. இயற்கையோடு இயைந்த மூலிகை மணம் கமழும் அருவி.

* சுவாமி சித்தேஸ்வரா கோனா அருவி

நாகலாபுரத்தில் இருக்கும் அருவிகளில் ஒன்று. இங்கு ட்ரெக்கிங் போக தனிப் பயிற்சி வேண்டும்.

கிராண்ட் ஐ10 எப்படி?

ஹூண்டாயின் எக்கானமி கார் கிராண்ட் i10. சான்ட்ரோ, இயான் என்று பட்ஜெட் கார்கள் இருந்தாலும், கிராண்ட் i10-க்கு ஒரு மவுசு எப்போதுமே உண்டு. காரணம், இதன் மைலேஜ். சின்ன காரான சான்ட்ரோவில்கூட 4 சிலிண்டர் இருக்க, i10-ல் 3 சிலிண்டர். மைலேஜ் நினைத்தபடியே நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகும். 2,500 ரூபாய் டீசல் நிரப்பிவிட்டு, ஆந்திரா முழுக்க கிட்டத்தட்ட 450 கி.மீ சுற்றி சென்னைக்கு வந்த பிறகும் டீசல் மிச்சம் இருந்தது. ரிவர்ஸ் கேமரா, டச் ஸ்க்ரீன், ஜிபிஎஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ ப்ளே என்று வசதிகள் சூப்பர். ஹூண்டாயின் ஸ்டீயரிங் ஃபீட்பேக்தான் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும். சில காட்டுப் பாதைகளில் 4 பேர் அமர்ந்து பயணித்தபோது, ‘மடார்’ என அடி வாங்கியது கிராண்ட் i10. ஓட்டுவதற்கு பெப்பியாக இல்லாவிட்டாலும், மைலேஜ் - வசதி விரும்பிகள் கிராண்ட் i10-யைத் தேர்ந்தெடுக்கலாம்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!