இனி எல்லாம் சுகமே!

புது வருடத்தின் முதல் நாள் அன்று மாலை, வாக்கிங் செல்ல பீச், பார்க் என்று வந்தவர்களை, 'நடந்தால் வியாதிகள் ஓடும்’, 'எடுப்பான தோற்றத்துக்கு மிடுக்கான நடை’ என்பது போன்ற வாசகங்களை தாங்கிய அட்டைகளை உயர்த்திப் பிடித்தபடி 'டாக்டர் விகடன்’ சார்பாக, கல்லூரி மாணவர்கள் வரவேற்றார்கள். டாக்டர் விகடன் டீம் கொடுத்த புது வருட வாழ்த்து அட்டைகளை இன்முகத்தோடு வாங்கிக்கொண்டவர்கள், ''இதிலே ஏன், டாக்டர் விகடனின் சந்தா விவரம் பற்றி குறிப்பிடவில்லை? எந்த நம்பருக்கு போன் பண்ணா விவரம் கிடைக்கும்?'' என்று ஆர்வமாகக் கேள்வி எழுப்பினார்கள். (சந்தா விவரங்களுக்கு: 044- 28411679)

கோவை, புரூக்ஃபீல்ட்ஸில் ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களை ஒரு கைபார்த்துக்கொண்டு இருந்த அகிலா என்ற பெண்மணி, டாக்டர் விகடன் சார்பில் வழங்கப்பட்ட கையேட்டை ஒருமுறை வாசித்துவிட்டு, ''இதுவரைக்கும் அப்பா அம்மா சொல்லிகூட வாக்கிங் போகலை. டாக்டர், 'வாக்கிங் போ’னு சொல்றதுக்கு முன்னாடி, டாக்டர் விகடன் சொல்லும் போதே வாக்கிங் போறது பெட்டர்னு படுது’ என்று டச்சிங்காகப் பேசினார்.

அகிலா போலவே அத்தனை பேரும் முடிவு செய்து வாக்கிங் கிளம்பிவிட்டால் இனி எல்லாம் சுகம்தான்!

இனி எல்லாம் சுகமே!

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு