Published:Updated:

மதி நிறைந்த மார்கழிப் பெருவிழா!

மதி நிறைந்த மார்கழிப் பெருவிழா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலத்தின் சிறப்புகளில் ஒன்று, ஆண்டுதோறும் நடக்கும் மார்கழிப் பெருவிழா. தெருவுக்குத் தெரு சொற்பொழிவுகளும் ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடந்தாலும், அம்மாப்பேட்டையில் கடந்த 28 ஆண்டுகளாக நடக்கும் மார்கழிப் பெருவிழாவுக்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. இங்கு மார்கழி மாதம் 30 நாட்களும் தமிழகத்தின் தலைசிறந்தப் பேச்சாளர்கள் வந்து, சொற்பொழிவு ஆற்றுவார்கள்.

மதி நிறைந்த மார்கழிப் பெருவிழா!

'மார்கழிப் பெருவிழா’ என்ற அமைப்பை உருவாக்கி, இந்த விழாவை உயிரோட்டத்துடன் நடத்திவரும் பழனியப்பனைச் சந்தித்தேன். ''என் பெற்றோர்தான் எனக்கு

ஆன்மிகத்தையும் நாட்டுப்பற்றையும் ஊட்டி வளர்த்தார்கள். பொது வாழ்க்கைக்குத் திருமணம் தடை என்பது என் கருத்து. அதனால், நான் திருமணம் செய்துகொள்ள வில்லை. காங்கிரஸில் 30 ஆண்டுகள் இருந்தேன். காமராஜர், மொரார்ஜி தேசாய், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரிடம் பழகக்கூடிய அற்புதமான வாய்ப்பு எனக்குக்  கிடைத்தது.

##~##

பிற்பாடு என் மனம் அரசியலில் இருந்து விலகி, ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டது. ஆன்மிகத்தில் இருக்கும் மூடப் பழக்க வழக் கத்தைக் களையவும் இளைஞர்களிடம் சமூகச் சிந்தனைகள் மேம்படச் செய்யவும் ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று எண்ணினேன். மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள். கண்ணனுக்கு உகந்த மாதம். அதனால், இந்த மாதம் முழுவதும் சொற்பொழிவு நடத்த முடிவு செய்தேன். என் நண்பர்கள் 43 பேர் சேர்ந்து 1983-ல் 'மார்கழிப் பெருவிழா’ என்ற அமைப்பை உருவாக்கினோம். ஒவ்வொருவரும் ஆயுட்காலச் சந்தாவாக

மதி நிறைந்த மார்கழிப் பெருவிழா!

1,000 செலுத்தி, மார்கழிப் பெருவிழாவை நடத்தினோம். முதல் வருடம் மார்கழிப் பெருவிழாவில் சுகி சிவம், தமிழருவி மணியன், பம்பாய் தீர்த்த மஹாராஜ் சுவாமிகள் ஆகியோர் தலா பத்து நாட் கள் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தற்போது 930 ஆயுட்கால சந்தா உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கிவருகிறது எங்கள் அமைப்பு. தமிழகம் மட்டும் இன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் என வெளிநாடுகளில் இருந்தும் பேச்சாளர்களும் பார்வையாளர்களும் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும்

மதி நிறைந்த மார்கழிப் பெருவிழா!

பேச்சாளர்களை இரண்டு மாதங்களுக்கு முன்பே புக் செய்துவிடுகிறோம்.

இந்த விழாவில் சாதி, மத, பேதம் கிடையாது. அனைத்துச் சமூகத்தினரும் வருவார்கள். இங்கு நடக்கும் சொற்பொழிவுகள் வெறும் ஆன்மிகச் சிந்தனை மட்டும் இல்லை. நாட்டுப்பற்று, அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு, சமூக அக்கறை எனப் பொது சிந்தனைகளைத் தூண்டும்விதமாகவும் சொற்பொழிவுகள் நடக் கும். இந்த விழாவில் பேசாத தமிழகப் பேச்சாளர்களே அரிது. வாரியார் சுவாமிகள், வைகோ, நாஞ்சில் சம்பத் என அனைத்துத் தரப்பினரும் பேசி இருக்கிறார்கள். கடந்த 2008-ம் ஆண்டு வெள்ளி விழாவின்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொற் பொழிவு ஆற்றினார்.

இந்த மாதம் நடக்கும் விழாவில் இலங்கை ஜெயராஜ், தமிழருவி மணியன், ஜெகத் கஸ்பர், அப்துல் காதர், சுகிசிவம், ஈரோடு தமிழன்பன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசுகிறார்கள். இந்த மார்கழிப் பெருவிழாவின் நோக்கம், ஆன்மிகம் என்ற பெயரால் நடக்கும் மூடப் பழக்கவழக்கங் களை நீக்குதல், காலம் தவறாமை, மனித மனங் களைப் பக்குவப்படுத்துதல், மனிதன் மனிதனாக வாழச் செம்மைப்படுத்துதல் போன்றவையே.

இந்தச் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பலர் மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். பாகப் பிரிவினைகளால் பிரிந்திருந்த உறவினர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். இதன் மூலம் இளம் கவிஞர்கள், இளம் பேச்சாளர்கள், புதிய படைப்பாளிகள் உருவாகி இருக்கிறார்கள். அரசியலில் சாதிக்க முடியாதை ஆன்மிகத்தின் வழியாகச் சாதித்து வருகிறேன். இதுபோதும் எனக்கு!'' - நிறைவாக முடிக்கிறார் பழனியப்பன்!

மதி நிறைந்த மார்கழிப் பெருவிழா!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு