ஜாகுவாரின் இந்த எஸ்யூவி, சிறப்பான ஓட்டுதலுக்குப் பெயர்பெற்றது. ஆனால் இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினில், காரின் பெயரில் இருந்த Pace கொஞ்சம் மிஸ்ஸிங். இதற்கான தீர்வாக, XE - XF - ரேஞ்ச் ரோவர் Velar ஆகிய கார்களில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, F-பேஸ் எஸ்யூவியின் பானெட்டுக்கு கொரியரில் பார்சல் அனுப்பியிருக்கிறது ஜாகுவார். 250bhp பவர் மற்றும் 36.5kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த ‘Ingenium’ சீரிஸ் இன்ஜின், காருக்குத் தேவையான Pace-ஐ கொடுத்திருக்கிறதா?

டிசைன் மற்றும் வசதிகள்

F-பேஸ் 20d மாடல் போலவே காட்சியளிக்கிறது F-பேஸ் 25t. இரண்டையுமே Prestige வேரியன்ட்டில் மட்டுமே வாங்க முடியும். என்றாலும் டீசல் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை, பெட்ரோல் மாடலைவிட அதிகமாக இருக்கிறது (25t: 62.77 லட்சம், 20d: 63.17 லட்சம்). ஒரே வேரியன்ட்தான் என்பதால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அடாப்ட்டிவ் LED ஹெட்லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், Selectable LED ஆம்பியன்ட் லைட்டிங், 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 380W Meridian Hi-Fi ஆடியோ சிஸ்டம், Lane Keeping அசிஸ்ட், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் என இரண்டிலுமே வசதிகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

முன்பக்க இருக்கைகளுக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வழங்கப்பட்டிருந்தும், அதனை அவ்வளவாக அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை. காரின் விலையுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் டெயில்கேட் வசதி இருந்திருக்கலாம். LED ஆம்பியன்ட் லைட்டிங், இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். ஆங்காங்கே ப்ளாஸ்டிக் தரம்... ப்ச்! மற்றபடி கேபினில் எந்தக் குறையும் இல்லை.

இன்ஜின் - கியர்பாக்ஸ்

F-பேஸ் எஸ்யூவியுடன், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் செம கூட்டணி அமைத்திருக்கிறது. உடனடியான த்ராட்டில் ரெஸ்பான்ஸ், அதிரடியான மிட் ரேஞ்ச், Free Revving திறன் என இந்த காருக்குத் தேவையான Fun-Quotientயை அள்ளித் தருகிறது. 0 - 100 கி.மீ வேகத்தை 7 விநாடிகளிலேயே எட்டிப் பிடிக்கும் F-பேஸ் பெட்ரோல், டீசல் மாடலை விட 2 விநாடிகள் வேகமாக இருக்கிறது. டெக்னிக்கல் விபரங்களைப் பார்த்தபோது, ‘இவ்வளவு பெரிய காருக்குச் சிறிய இன்ஜினா? எனத் தோன்றியது. எனினும் இந்த எஸ்யூவியை ஓட்டியபோது, அதன் ஆன்-ரோடு பெர்ஃபாமென்ஸ் வேற லெவலில் இருந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆனால் இன்ஜினின் வேகத்துக்கு, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொஞ்சம் தடைக்கல்லாக இருக்கிறது. ஆம், குறைவான வேகத்தில் இருந்து திடீரென காரின் வேகத்தை அதிகரிக்கும்போதும், மிகக் குறைவான வேகத்தில் காரைச் செலுத்தும்போதும், கியர்பாக்ஸ் கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறது. மற்றபடி வேகம் பிடித்தபிறகு, உடனுக்குடன் கியர்களை மாற்றி, இது ஸ்மூத்தாகச் செயல்படுகிறது.

பெர்ஃபாமென்ஸ் அனுபவம்

டைனமிக் மோடில் காரை ஓட்டும்போது, இன்ஜினின் ரெஸ்பான்ஸ் ஷார்ப்பாக இருப்பதுடன், ஸ்டீயரிங்கின் எடையும் கொஞ்சம் கூடிவிடுகிறது. இந்த நேரத்தில் கியர்பாக்ஸை S மோடுக்கு மாற்றுவது நலம். ஆனால் முன்னே சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒன்றுசேரும்போது, மைலேஜ்தான் கொஞ்சம் அடிவாங்கிவிடுகிறது. எக்கோ மோடில் காரை ஓட்டும்போது, த்ராட்டில் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் டல்லாகிவிடுகிறது. என்றாலும், அது மைனஸாகத் தெரியவில்லை.

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இது அவ்வளவு Refined இன்ஜின் இல்லை என்பது தெரிந்தது. இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது, ஒருவித Boom சத்தத்துக்குப் பிறகே ஐடிலிங்கில் செட்டில் ஆகிறது. இது இரைச்சலாக இல்லாவிட்டாலும், சத்தம் கேபினுக்குள்ளே கேட்கிறது. நல்ல வேகத்தில் பயணிக்கும்போது, இன்ஜின் சைலன்ட்டாக மாறிவிடுகிறது. ஆனால் 3,000 ஆர்பிஎம்மைத் தாண்டிய பிறகு, இன்ஜினின் சத்தம் ரசிக்கும்படி அமைந்திருப்பது பெரிய ப்ளஸ்.

முதல் தீர்ப்பு

ஸ்டைலான டிசைன் மற்றும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் F-பேஸ், பெர்ஃபாமென்ஸில் கலக்கும் எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கான தேர்வாக இருக்கும். இந்த ஜாகுவார் காரின் சேஸிக்கும் தோற்றத்துக்கும் நியாயம் சேர்த்திருக்கிறது டர்போ பெட்ரோல் இன்ஜின். சில விஷயங்கள் மைனஸாக இருந்தாலும், கொடுக்கும் காசுக்கான மதிப்பைத் தன்வசம் கொண்டிருக்கிறது F-பேஸ். ஒரே வேரியன்ட்டில் கிடைத்தாலும், கிட்டத்தட்ட டீசல் மாடலுக்குச் சமமான விலையில் பெட்ரோல் மாடல் வெளிவந்திருப்பது வாவ். முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ X5 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் GLE ஆகிய கார்கள் வரவிருக்கும் நிலையில், தனது இருப்பை கெத்தாகக் காட்டியிருக்கிறான், இந்த பிரிட்டிஷ் இளவரசன்.

தொகுப்பு: ராகுல் சிவகுரு