``என் பையன் ரோஹித்துக்கு பைக் ஓட்டுறதுனா உயிர். அவனுக்கு டிரெயினிங் கொடுக்க முடியுமா?’’ என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் வந்தனர் ஒரு பெற்றோர். அந்தச் சிறிய கைகளை அப்போது பற்றி, ``உன் பேர் என்ன?’’ என்றபோது, ``ரோஹித்... செகண்...ட்.. ஸ்டா...ண்டர்...டு.. படிக்...கிறேன் அங்கிள். பைக்... ரேஸர் ஆகணும்... சொல்லிக்.... குடுங்க!’’ என்றான் மழலை மொழியில்.

இப்போது ரோஹித்துக்கு 11 வயது. இப்போது பேச்சில் மட்டுமல்ல, டிராக்கிலும் செம வேகம். அவனுக்குப் பயிற்சி கொடுத்த இந்த நான்கு ஆண்டில் ஐரோப்பா, கிழக்காசிய நாடுகளுக்கெல்லாம் சென்று பைக் ரேஸில் கலந்துகொண்டுள்ளான். இந்த வயதிலேயே இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று, ரேஸில் கலந்துகொள்வது என்பதே பெருமைதானே!

இதைத் தாண்டி இன்னொரு ஹைலைட்டும் இங்கே இருக்கிறது. ரோஹித்துடன் இன்னொரு பிஞ்சு முகத்தையும் பார்த்தேன். அவன் பெயர் வினித். இருவரும் அண்ணன் - தம்பி. ``அங்கிள், அண்ணனுக்கு மட்டும்தான் சொல்லிக் குடுப்பீங்களா... எனக்கும் சொல்லிக்குடுங்க!’’ என்று ஆர்வத்தோடு ரோஹித்தைவிட மழலை மொழியில் ஒருநாள் கேட்டேவிட்டான் வினித்.

அவனின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. கால்கூட எட்டாத நிலையில், ``பைக்கை ஓட்டிடுவேன்’’ என்று அவன் தன்னம்பிக்கையோடு சொன்னது, எனக்கும் தன்னம்பிக்கையை ஊட்டியது. அவனுக்காகவே பிரத்யேகமாக பாக்கெட் பைக் ஒன்று ரெடிசெய்து, பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவர்கள் இருவருக்கும் சர்க்யூட் மற்றும் எண்டியூரன்ஸ் ரேஸ் மீது ஆசை வந்துவிட்டது. அதாவது, நீண்ட தூர லேப்களுக்கான பயிற்சி ஒன்று சர்க்யூட் ரேஸில் உண்டு. தொடர்ந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் வரை பைக் ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கீழே இறங்கவே கூடாது. பெரிய பெரிய ரேஸ்களில் 50 முதல் 60 லேப்கள் வரை வைத்திருப் பார்கள். நேஷனல் சாம்பியன்ஷிப்பிலேயே 6 லேப் வரைதான் உண்டு. ஆனால், இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக 300 மீட்டர்கொண்ட மெரினா கோ கார்ட் டிராக்கில், பாக்கெட் பைக்கிலேயே ராக்கெட் மாதிரி 60 லேப் வரை நான்ஸ்டாப்பாக ஓட்டினார்கள்.

பாக்கெட் பைக்குகள் போர் அடித்துவிட, ``அங்கிள், எனக்கு 50சிசி பத்தலை’’ என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டான் வினித். அப்புறம் அவனுக்கு 100சிசி ஸ்கூட்டர் ரேஸில் டிரெயினிங் கொடுக்க ஆரம்பித்தேன். இப்போது, கால்கள் எட்டாத நிலையிலும்கூட 150சிசி ரேஸில் கலந்துகொள்வதற்கான எல்லா டெக்னிக்ஸும் இருவரிடமும் நிரம்பிவழிகின்றன. மலேசியாவில் நடந்த அண்டர்போன் பைக் ரேஸில் இருவருமே கலந்துகொண்டனர். இதுதவிர, ஏஷியன் கப் ரேஸ் லெவலில் இருவருமே இப்போது தயார். இன்னும் மூன்று ஆண்டில் ரோஹித் மோட்டோ 2-வில் கலந்துகொள்ளப்போகிறான் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஓகே... விஷயத்துக்கு வருகிறேன். `அப்படி யென்றால், சிறு வயதிலேயே ரேஸ் பைக் ஓட்டலாமா?’ என்பதுதானே உங்களது சந்தேகம்? ஆம்! மூன்று அல்லது நான்கு வயதிலி ருந்தே குழந்தைகளுக்கு பைக் ஓட்ட பயிற்சி கொடுத்துவிடலாம். ஸ்விம்மிங், கராத்தே, நடனம் போன்று பைக் ஓட்டுவதற்கும் நாள் ஒன்றுக்கு அரைமணி நேரப் பயிற்சிகொடுக்கலாம். இதற்கெல்லாம், ரேஸர் ஆக வேண்டும் என்ற லட்சியம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இது, நாளடைவில் அவர்கள் 18 வயது தொடங்கும்போது, சாலையில் பாதுகாப்பாக பைக் ஓட்டுவதற்கும் பெரிதும் உதவும். சிலர் பைக் ஓட்டத் தெரியாமலேயே லைசென்ஸ் எடுத்துவிடுவார்கள். லைசென்ஸ் எடுத்தால் போதும் என்கிற மனப்பான்மை பலருக்கு இருக்கும். அது இதில் தவிர்க்கப்படும்.

பாக்கெட் பைக் என்றால் என்ன?

நீங்கள் குழந்தையாக இருக்கும்போது, வீட்டில் மூன்று சக்கரங்கள் கொண்ட சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதே டைப்தான் பாக்கெட் பைக்குகள். சில குழந்தைகளுக்கு பைக்கில் பின்னால் அமர்ந்துபோவது என்றாலே கொள்ளைப் பிரியமாக இருக்கும். அவர்களை பைக்கையே ஓட்டவிட்டால்? அதற்காகத்தான் பாக்கெட் பைக்குகள் எனும் மினியேச்சர் பைக்குகள் உருவாயின.

இதன் உயரம் 2.5 அடியிலிருந்து 5 அடி வரை இருக்கும். பார்ப்பதற்கு விளையாட்டுப் பொருள்போல் இருந்தாலும், சாலையில் ஓடும் பைக்குக்கு இருக்கும் அதே குணம்தான் இதற்கும். அதிகபட்சம் 40 கி.மீ வேகம் வரை போகும். பாதுகாப்புக்காக இப்போது இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ்கொண்ட பாக்கெட் பைக்குகள் தயாரிக்கிறார்கள்.

இதற்கான பயிற்சியை நீங்கள் வீட்டிலேயே கொடுக்கலாம். அப்படி நீங்கள் தயங்கும்பட்சத்தில் இதற்கென டிரெயினிங் அகாடமிகளும் உண்டு. பைக்கை வாடகைக்கு எடுத்தும் பயிற்சி கொடுக்கலாம். இது சாலையில் ஓட்டுவதற்கான பைக் அல்ல என்பதை நினைவில்கொள்ளுங்கள். உங்கள் தெருக்கள், பூங்காக்கள், வீட்டுக் கொல்லைப்புறம்தான் இதற்கான ரைடிங் டிராக்.

எங்கு கிடைக்கும்?

முன்பெல்லாம் சீனா, மலேசியாவில் இருந்துதான் இப்படிப்பட்ட பாக்கெட் பைக்குகள் இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது இன்ஜின் மற்றும் ஸ்பேர்களை தனித்தனியே வாங்கி இங்கேயே அசெம்பிள் செய்கிறார்கள். சென்னை நந்தனத்தில் `மோட்டோ மேனியாக்’ எனும் கராஜில் இந்த பைக்குகள் தயாரிக்கிறார்கள். பழைய சன்னி, டிவிஎஸ் எக்ஸெல் போன்ற 50சிசி இன்ஜின்கொண்டு தயாரிக்கப்பட்ட இவை, 20,000 முதல் 25,000 ரூபாய் வரை கிடைக்கின்றன. கொஞ்சம் வேக ப்ரிய குழந்தைகளுக்கு, 125சிசி வரையிலும் பைக்குகள் உண்டு. இப்போதைக்கு சென்னையில் மாதத்துக்கு 8 முதல் 10 பாக்கெட் பைக்குகள்தான் விற்பனை ஆவதாகச் சொன்னார் `மோட்டோ மேனியாக்’ உரிமையாளர்.

பாக்கெட் பைக்கின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் விரும்பும் வடிவத்துக்கு ஏற்ப இது ரெடியாகி, உங்கள் கைக்கு வரும். ஸ்போர்ட்ஸ் பைக் வடிவில், ஸ்கூட்டர் வடிவில், மோட்டோ க்ராஸ் வடிவில், ஏடிவி வடிவில் என வெரைட்டியாக நம் விருப் பத்துக்கு ஏற்ப பைக்குகளை ரெடிசெய்யலாம்.

ரேஸுக்கு எத்தனை வயது?

சரி, அப்படியென்றால் பாக்கெட் பைக் ஓட்டி பயிற்சி எடுத்துக் கொண்டால், சிறிய வயதிலேயே ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட முடியுமா?

வெளிநாடுகளில் 5 வயதிலிருந்தே ரேஸ் ஓட்டலாம். ஆனால், நம் நாட்டில் 13 வயதுதான் ரேஸில் கலந்து கொள்வதற்கான அடிப்படை வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தை 4 வயதில் இருந்தே பாக்கெட் பைக் ஓட்ட ஆரம்பித்தால், 9 ஆண்டுகள் கழித்து அவன் நேஷனல் டூவீலர் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் ரேஸில் கலந்து கொள்ளலாம். இப்போது நேஷனல் லெவலில் பெரிய சாம்பியன்களுடன் மோதி, போடியமும் ஏறியிருக்கும் முகமது மிக்கேலுக்கு வயசு 13தான் என்றால் நம்புவீர்களா?

சிறிய வயசில் ரேஸில் கலந்துகொள்ள வெளிநாடெல்லாம் போக எனக்கு வசதியில்லை என்பவர்களுக்கும் ஒரு ரேஸ் ஆப்ஷன் இருக்கிறது. அதுதான் மோட்டோ க்ராஸ்!

(வ்வ்ர்ர்ர்ரூம்)

தொகுப்பு: தமிழ்

சுதாகர் - படங்கள்: பா.அகல்யா