க்ளாசிக் கார்னருக்காக இந்த முறை யாரைச் சந்திக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு யெஸ்டி D250 க்ளாசிக் பைக் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தது. காத்திருந்து பைக்கின் ஓனரைப் பிடித்தேன். `96’ படத்தின் இயக்குநர் பிரேம் குமாரின் பைக் அது. ட்ரெண்டிங் ஹிட் படத்தைக் கொடுத்த பிரேம் தினமும் பயன்படுத்தும் பைக், ஒரு யெஸ்டி க்ளாசிக்.

``பைக் எங்க குடும்பத்துல ஒரு அங்கம். அப்பா ஜாவா வெச்சிருந்தார். நான் பிறந்த பிறகு ராஜ்தூத் வாங்கினார். அப்புறம் சுஸூகி AX100, லூனா மொபெட், ஹீரோ புக், ஹீரோ ஹோண்டா CD100, TVS XL பைக்கெல்லாம் வாங்கிப் பயன்படுத்தி இருக்கார். அப்பாவுடைய CD100-தான் என் கனவு பைக். அது அண்ணன்கிட்ட போய், அப்புறம் என்கிட்ட வந்தது. அதுதான் என் முதல் பைக்” என்று தான் பைக் ஓட்டிய நினைவுகளுக்குச் சென்று திரும்பினார் பிரேம்.

``யெஸ்டி, உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா?’’

`` `ரம்மி’ பட ஷூட்டிங்ல பழைய பைக் எல்லாம் பயன்படுத்துவோம். அப்போ யெஸ்டி பத்திப் பேசிட்டே இருப்பேன். அதைப் பார்த்து எடிட்டர் கார்த்திக் அவரோட பைக்கை விக்கிறேன்னு சொன்னார். அப்போ காசு இல்லை. என்னால வாங்க முடியலை. அந்த பைக்கை விஜய் சேதுபதி வாங்கிட்டார். அதுக்கு அப்புறம் அந்த பைக்கைப் பத்தி நான் இன்னும் அதிகமா பேச ஆரம்பிச்சிட்டேன். அதே படத்துல கூட வேலை செஞ்ச பாவா-னு ஒருத்தர் திருச்சிக்குப் பக்கத்துல இருக்கும் ஒரு ஊர்ல இருந்து, நான் இப்போ வெச்சிருக்கும் யெஸ்டி பைக்கை விலைக்கு வாங்கிட்டு வந்தார். நான் யெஸ்டியைப் பத்திப் பேசிட்டே இருக்கிறதைப் பார்த்துட்டு, `போய்த் தொலையுறான்’னு சொல்லி பைக்கை எனக்குக் கொடுத்தார். `ஐ பைக் வந்துடுச்சே!’னு ஒரு பக்கம் சந்தோஷம். `காசு இல்லையே’னு இன்னொரு பக்கம் வருத்தம். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா காசு தர்றேன்னு சொல்லி பைக்கை வாங்கிட்டேன்!” என்று சொன்னபோது, அவரின் முகத்தில் சந்தோஷம் துள்ளியது.

`எப்படி பைக்கை ரெஸ்டோர் செய்திருப்பார்?’ என்று என் ஆர்வம் கேள்வியாக வந்துவிட்டது.

``30,000 ரூபாய்க்கு பைக் வாங்கினேன். மொத்தமா பைக்கை ரெடி பண்ண 25,000 ரூபாய் செலவாச்சு. ரோரிங் ரைடர்ஸ் கிளப் ஸ்ரீனிவாசன்தான் ஜாவா டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனார். இந்தியாவில் இருக்கும் பெஸ்ட் ஜாவா மெக்கானிக்ல ஜாவா டாக்டர் சேகரும் ஒருத்தர்னு அப்போ எனக்குத் தெரியாது. அவர் ஒரு பைக்கில் கை வெச்சார்னா, ரொம்ப பெர்ஃபெக்ட்டாதான் ரெடிபண்ணுவார். எனக்கு ஆர்வம் அதிகம். பொறுமையும் இல்லை. நான் அந்த பைக் ரெடியாகி வர வரைக்கும் அவரோட மெக்கானிக் ஷெட்லதான் அதிக நேரம் இருந்தேன். ஏதோ என் முகத்துக்காக பைக்கை சீக்கிரம் கொடுத்துட்டார். மூணு வருஷம் ஆச்சு, பைக் ரெடிபண்ணி. ஒரு பிரச்னைகூட வந்ததில்லை” என்று ஹேப்பியாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பிரேம் குமாரின் வீட்டில் வளர்க்கும் த்ரிஷா பூனை, சேட்டை செய்ய ஆரம்பித்தது.

ஒரு வழியாக பூனையை அடக்கிவிட்டு, பைக்கால் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். ``பைக் வெளியே எடுத்தாலே ஏதாவது சுவாரஸ்யமான விஷயம் தேடி வந்துடும். ரோட்ல போகும்போதெல்லாம் யாராவது வந்து பைக்கை நிறுத்தி `என்ன மாடல், என்ன வருஷம், எப்படி வாங்குனீங்க, விக்கிற ஐடியா இருக்கா’னு கேட்பாங்க. அவங்களுக்குத் தேவை பதில் இல்லை. பைக்கை கொஞ்ச நேரம் பார்க்கணும். பைக் ஓட்டுறது யாருனு தெரிஞ்சிக்கணும்... அவ்ளோதான்.

ஒருமுறை 40-50 வயசு லேடி ஒருத்தங்க, `பைக்கை எங்க ரெடி பண்ணீங்க, எங்க அப்பா இந்த பைக் வெச்சிருந்தார். அதுலதான் நாங்க ஸ்கூலுக்குப் போவோம். எங்க அப்பா இப்போ இல்லை. அந்த பைக் இன்னும் வீட்ல நிக்குது. அந்த பைக்கை ரெடி பண்ணி ஸ்டார்ட் பண்ணணும்’னு சொன்னாங்க.

`ஜாவா டே’ போயிட்டுத் திரும்பி வந்துட்டிருந்தோம். அப்போ பல்லவன் டவுன்பஸ், ஹார்ன் அடிச்சிட்டே பின்னாடி வந்தது. பைக்கை நிறுத்திட்டுத் திரும்பிப் பார்த்தேன். 55 வயசு பெரியவர் ஒருத்தர், `பைக் சூப்பர்’னு சொன்னார். அவரை ஓவர்டேக் பண்ணவே மனசில்லை. அவர் பக்கத்துலயேதான் ஓட்டிட்டு வந்தேன். அவரும் பைக்கைப் பார்த்துட்டே வந்தார்.

என் ஸ்கூல் ஃப்ரெண்டோட அப்பா, ஒரு யெஸ்டி வெச்சிருந்தார். அப்போ அதைப் பார்க்க செம ஆசையா இருக்கும். நான் யெஸ்டி வாங்கின பிறகு, அந்த ஃப்ரெண்டைத் தேடிக் கண்டுபுடிச்சு அவங்க அப்பாகிட்ட `நான் பைக் வாங்கிட்டேன்’னு சொல்லச் சொன்னேன். அப்போ எனக்கு ஒரு மாஸ் ஃபீல் கெடச்சது. அதெல்லாம் சான்ஸே இல்லை” எனக் கெத்தாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மீண்டும் த்ரிஷா சேட்டை செய்ய ஆரம்பித்தது.

``இப்போ நான் யெஸ்டி அதிகமா பயன் படுத்துறதில்லை. இப்போ என் ஃபேவரைட் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர். விஜய் சேதுபதி கொடுத்த பரிசு இது. `என்ன பைக் வாங்குறது?’னு கேட்டார். ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் வாங்கச் சொன்னேன். அவர் வாங்கினது மட்டுமில்லை, அதேபோல ஒரு பைக்கை அவர் பிறந்த நாளைக்கு எனக்கு சர்ப்ரைஸ் பரிசா கொடுத்தார். `என்ன நம்பர் வேணும்?’னு கேட்டார். `96’ன்னு சொன்னேன்.”

இப்போது மட்டுமல்ல, 20 ஆண்டுகள் கழித்து இந்த நம்பர் பிளேட்டைப் பார்க்கும்போதும் பலருக்கும் நாஸ்டால்ஜியா கிளம்பும்.

ரஞ்சித் ரூஸோ - படங்கள்: பா.ப்ரியங்கா