பெயருக்கு ஏற்றபடியே அவர்கள் கொஞ்சம் குழப்பவாதிகள்தான். தாங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, எந்த எல்லைக்கும் போவார்கள்! ஹிப்ஸ்ட்டர் பாணி பைக்குகள், தற்போது மீண்டும் மார்க்கெட்டுக்குள் வரத் தொடங்கி விட்டன என்பது, அவர்களுக்கான மிகப்பெரிய ப்ளஸ். FB மோண்டியால் (FB Mondial) நிறுவனத்தின் HPS 300 என்ற பைக் அதில் ஒன்று. பைக்கின் பெயரிலேயே ஹிப்ஸ்ட்டர் ஒளிந்திருக்கிறது. ஆனால், FB மோண்டியாலுக்கு வரலாறு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற மறு ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 1949-1957 வரையிலான காலகட்டத்தில் பைக் ரேஸிங்கில் பல சாம்பியன்ஷிப்களை வென்று குவித்தது. ஆனால், மோசமான நிதி நெருக்கடி காரணமாக, 1970-களில் மூடுவிழா கண்டது.

கடந்த 2014-ம் ஆண்டில் மறு அறிமுகமான இந்த நிறுவனம் வடிவமைத்த முதல் கான்செப்ட் பைக்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. 70 ஆண்டு பின்னணியைக்கொண்ட FB மோண்டியாலின் நிறுவனர்களே, தமது பைக்குகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு உலகெங்கும் விற்பனை செய்யப்படும் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்! வித்தியாசமான பெயருடன் வித்தியாசமானவர்களுக்காக களமிறங்கி இருக்கும் இந்த பைக்கில் என்ன ஸ்பெஷல்?

டிசைன்

ஃபர்ஸ்ட் இன்னிங்ஸில் பைக் ரேஸில் அசத்திய FB மோண்டியால், செகண்ட் இன்னிங்ஸில் பைக்கின் தனித்துவமான டிசைனுக்காக மெனக்கெட்டிருக்கிறது. கச்சிதமான சைஸில் இருக்கும் HPS 300, 5 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கக்கூடிய பைக்குகளில் சிறந்த டிசைன் என உறுதியாகச் சொல்லலாம். பைக்கில் இடம் பெற்றுள்ள பாகங்களின் டீட்டெய்லிங் வாவ் ரகம்! நீர்த்துளியைப் போன்ற ஹெட்லைட், `பல்க்’கான பெட்ரோல் டேங்க், ஷார்ட்டான டெய்ல் பகுதி, ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளை நினைவுபடுத்தும்படியான குட்டியான முன்பக்க ஃபெண்டர் மற்றும் பக்கவாட்டில் இருக்கும் இரட்டை எக்ஸாஸ்ட், 18 இன்ச் - 17 இன்ச் ஸ்போக் வீல்கள் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.

கைக்கு அடக்கமான ஹேண்டில் பாரில், Retro பாணியிலான Balloon Hand Grip மற்றும் Bar End மிரர்கள் இருப்பது ஸ்டைலாக இருக்கிறது. ஆஃப்செட் பொசிஷனில் இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிலிருந்து எடுத்து மாட்டியதுபோல் உள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்க்ராம்ப்ளர் - கஃபே ரேஸர் - ஃப்ளாட் ட்ராக்கர் ஆகிய பைக்குகளின் கலவையான தோற்றத்தில் கவர்ந்திழுக்கிறது FB மோண்டியால் HPS 300. ஆனால், பைக்கை உன்னித்துப் பார்க்கும்போது சில குறைகள் தெரிகின்றன. விலை மலிவான ஸ்விட்ச்கள், பெட்ரோல் டேங்க்கைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் பாகங்களின் ஃபிட்டிங், இன்ஜினின் ப்ளம்பிங் பணி, சம்பந்தமில்லாத நட் போல்ட்டுகள் - இவற்றைச் சொல்லலாம். பைக்கின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 155மிமீ என்றாலும், இன்ஜினுக்குக் கீழே வழங்கப்பட்டிருக்கும் பெரிய Belly Pan... ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறி இறங்கும்போது அடிபடலாம்.

எர்கானமிக்ஸ்

பார்க்கப் பெரிய பைக்காகத் தெரிந்தாலும், நேரில் மிகவும் காம்பேக்ட்டாகக் காட்சியளிக்கிறது FB மோண்டியால் HPS 300. 785மிமீ சீட் உயரம் மற்றும் 147 கிலோ எடை இதை உறுதிப்படுத்துகின்றன. உயரமானவர்களுக்கும் பைக் வசதியாக இருந்தாலும், எடை அதிகமானவர்களுக்கு இது கொஞ்சம் அசெளகரியத்தைத் தரலாம். ரைடரை நோக்கி வளைக்கப்பட்டிருக்கும் ஹேண்டில் பார் ஓகே என்றாலும், உயரத்தில் பின்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ், கால்கள் வைக்க வசதியாக இல்லை.எனவே, FB மோண்டியால் HPS 300 பைக்கை நீண்ட நேரம் ஓட்டினால், முழங்கால் - இடுப்பு - முதுகுப் பகுதிகளில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உலகளவில் இருக்கும் Hipster-கள், சுற்றுச்சூழல் மீது தமக்கிருக்கும் பற்றை எடுத்துக் காட்டுவதற்காக, டொயோட்டா ப்ரையஸ் போன்ற கார்களையே பயன்படுத்துவர். டூ-வீலர் விஷயத்தில் இது பொருந்தாது என்றாலும், நீளமான பெயரைக்கொண்ட FB மோண்டியால் HPS 300 பைக்கில் இருப்பது சிறிய 249சிசி இன்ஜின்தான்!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

DOHC - லிக்விட் கூலிங் - 4 வால்வ் - பியூல் இன்ஜெக்ஷன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பியாஜியோ Zongshen தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த இன்ஜின், 22.8bhp பவர் மற்றும் 2.2kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. பைக்கின் அதிரடியான டிசைனுடன் ஒப்பிடும்போது, இன்ஜின் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது நெருடல். குறைவான ஆர்பிஎம்-களில் இன்ஜின் ஸ்மூத்தாக இருந்தாலும், 6,000 ஆர்பிஎம்-மைத் தாண்டும்போது ரஃப்பாக மாறிவிடுகிறது. ஆனால், 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 11.82 விநாடியிலேயே எட்டிப்பிடித்துவிடுகிறது FB மோண்டியால் HPS 300. பைக்கின் குறைவான எடையே இதற்கான காரணம் எனினும், அதிகபட்ச வேகமான 141 கி.மீ-ஐ எட்டுவதற்கு அதிக நேரத்தை பைக் எடுத்துக்கொள்கிறது. ஒட்டுமொத்த பெர்ஃபாமென்ஸ் ஓகே ரகம்தான் என்றாலும், இன்ஜின் அதிக சூட்டை வெளிப்படுத்துவது மைனஸ். எனவே, இடதுபுறத்தில் இன்ஜின் கேஸ் மற்றும் வலதுபுறத்தில் எக்ஸாஸ்ட் பைப் மீது கால் படாமல் இருப்பது நல்லது ரைடர்களே!

ஓட்டுதல் அனுபவம்

USD ஃபோர்க் - ட்வின் ஷாக் அப்சார்பர்கள், சிறப்பாக பேலன்ஸ் செய்யப்பட்டிருக்கும் சேஸியில் இணைக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக செட் செய்யப்பட்டிருப்பதால், ஓட்டுதல் தரம் கொஞ்சம் அடிவாங்கியிருக்கிறது. இதனால் அதிக வேகத்தில் செல்லும்போது, சாலையின் தன்மையை ரைடரால் உணர முடிகிறது. Cheng Shen நிறுவனத்தின் Block Pattern டயர்கள், பைக்கின் நல்ல ரோடு கிரிப்புக்கு வழிவகுக்கின்றன. டயர்கள் ஆஃப் ரோடிங்குக்கு ஏற்புடையதாக இருந்தாலும், பைக்கின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் ரைடிங் பொசிஷன் அதற்கு ஒத்துழைக்காது என்பதை நினைவில் கொள்ளவும். முன்பக்கம் 280மிமீ - பின்பக்கம் 220மிமீ டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக் சிறப்பு. டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதால், 60 கிமீ வேகத்திலிருந்து பைக்கை நிறுத்துவதற்கு வெறும் 18.29 மீட்டர்தான் தேவைப்பட்டது.

முதல் தீர்ப்பு

CKD முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் FB Mondial HPS 300, எதிர்பார்த்தபடியே அதிக விலையைக் கொண்டிருக்கிறது. இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையான 3.37 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த பைக், பவர்ஃபுல்லான 300சிசி பைக்குகளைவிடவும் (கேடிஎம் டியூக் 390, ஹோண்டா CB300R, பிஎம்டபிள்யூ G310R, கவாஸாகி நின்ஜா 300) விலை அதிகம்! ஆனால், இந்த மாதிரியான டிசைனுடன் இந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரே பைக் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இது தனித்து நிற்கிறது.

இருப்பினும், கேடிஎம் நிறுவனம் ஹஸ்க்வர்னா பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வரை மட்டுமே FB மோண்டியால் முன்னிலை வகிக்கும்.

தொகுப்பு: ராகுல் சிவகுரு