கேடிஎம் டியூக் 125 பைக்கை டிராக்கில் ஓட்டிவிட்டு, `இது சாதுவான டியூக்’ என எழுதியிருந்தோம். இந்தச் சாது, நம் சாலைகளில் எப்படி இருக்கிறது என டெஸ்ட் செய்து பார்த்தோம். கார்னர்களில் வளைத்து ஓட்டுவதற்கும், வேகம் எடுப்பதற்கும் தோதாக இருக்கும் எர்கானமிக்ஸ், சிட்டி ரைடுக்குப் பொருந்தவில்லை. உயரமான ரைடர்கள் பைக்கில் சுருங்கி உட்கார வேண்டியுள்ளது. கால் முட்டி, பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டில் முட்டிக்கொண்டே இருக்கிறது.

125 சிசி இன்ஜினின் பவர், 160 சிசி பைக்குகளுக்கு இணையாக இருந்தாலும், செக்மென்ட்டின் வேகமான பைக்குகளுடன் இதை ஒப்பிட முடியவில்லை. 100 கி.மீ வேகம் தொட 16.67 நொடியை எடுத்துக்கொண்டது டியூக் 125. இது அப்பாச்சி 160 4V பைக்கைவிட 3 விநாடியும், சுஸூகி ஜிக்ஸரைவிட 1.13 விநாடியும் அதிகம்.

நேர் பாதையில் உடலை வளைத்து ஓட்டும்போது, 120 கி.மீ வேகத்தைத் தொடுகிறது இந்தச் சின்ன டியூக். 80 கி.மீ வேகம் வரை சீறிப் பாய்ந்துவிட்டு, பிறகு அடக்கம் காட்டுகிறது இன்ஜின்.

சஸ்பென்ஷன், டியூக் 200 பைக்கில் இருக்கும் அதே யூனிட்தான். 148 கிலோ எடை, குறைவானதுதான். பைக்கில் உள்ள தொழில்நுட்பங்களைக் குறைத்திருந்தால், இன்னும் எடை குறைந்து செம ஃபன் டிரைவிங்கைக் கொடுத்திருக்கலாம்.

300 மிமீ - 230 மிமீ டிஸ்க் பிரேக்குகள் இருக்கின்றன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இருக்கிறது. ஆனால், திடீர் பிரேக்கிங் சமயங்களில் போதுமான அளவு ஃபீட்பேக் இல்லை. டியூக் 125, சிட்டியில் 39.1 கி.மீ மைலேஜும், நெடுஞ்சாலையில் 46.5 கி.மீ மைலேஜும் கொடுக்கிறது. பவர்/மைலேஜ் என இரண்டுமே இருக்கிறது. சிட்டியில் மட்டுமே ஓட்டவேண்டும் என்றால், டியூக் 125 பைக்குக்காக நீங்கள் கொஞ்சம் சமரசம் செய்யவேண்டும். சிட்டி, டிராக், நெடுஞ்சாலை என வீக்எண்டை மாறி மாறி என்ஜாய் செய்பவர்கள், யோசிக்காமல் டியூக் 125 வாங்கலாம். இது சாதுவான டியூக் மட்டுமல்ல... சாமர்த்தியமான டியூக்கும்கூட!

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ