நீ/அ/உ: 3,995/1,821/1,617 மிமீ

வீல்பேஸ்: 2,600 மிமீ

டேங்க்: 42 லிட்டர்

பூட் ஸ்பேஸ்: 257 லிட்டர்

இன்ஜின்: 1.2 லி (பெ), 1.5 லி (டீ)

பவர்: 110 bhp (பெ), 115 bhp (டீ)

டார்க்: 20 kgm (பெ), 30 kgm (டீ)

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்

டயர்: 215/55 R17

அராய் மைலேஜ் (பெ/டீ): 17/20 கி.மீ

`மஹிந்திராவிலிருந்து ட்ரீட் காத்திருக்கிறது’ என்று போன மாதம் சொன்னோம். இந்த மாதம் ட்ரீட் வந்துவிட்டது. ஆம்! மஹிந்திரா XUV500-ன் சின்னத்தம்பி XUV300, விற்பனைக்கு வந்துவிட்டது. `வெல்கம் டு கோவா’ என்று மஹிந்திரா நிறுவனம், தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவியோடு நமக்காக கோவாவில் காத்திருந்தது. பிறகு என்ன? XUV300-வின் 17 இன்ச் அலாய் வீல்களை, கோவாவின் எல்லா தெருக்களிலும் பதித்துவிட்டேன். புது எக்ஸ்யூவி, நம் கோவை சின்னத்தம்பி யானை மாதிரி சுறுசுறுப்பாக இருக்குமா... கும்கி மாதிரி வெறித்தனம் காட்டுமா?

வெளியே

கட்டுமஸ்தான ஸாங்யாங் டிவோலியின் X100 பிளாட்ஃபார்மில் இந்த எஸ்யூவி தயாராவதுதான் முதல் ஸ்பெஷல்! அதிவேகங்களில், கார்னரிங்கில் என எல்லா இடங்களிலும் இந்தக் கட்டுமானத் தரத்தை உணர முடிந்தது. கிரில், பம்பர் போன்றவை எல்லாமே டிவோலியின் இன்ஸ்பிரேஷன்தான். அதேநேரம் `டிவோலியின் ஜெராக்ஸ்’ என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்று மஹிந்திரா முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. பானெட், ஃபெண்டர், கதவு, ரூஃப் என எல்லா இடங்களிலும் ஸாங்யாங்கைத் தாண்டிய ஒரு புதுமை தெரிந்தது. மேலும், டிவோலியைவிட ரைடிங் உயரத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். டிவோலியின் நீளம் 4.2 மீட்டர்; XUV300-ன் நீளம் 3,995 மிமீ. ஆனால், வீல் பேஸ் அதேதான்.

மற்றபடி, இதன் மொத்த டிசைனும் ஒரு சிறுத்தையின் இன்ஸ்பிரேஷனில் செய்யப்பட்டிருக்கிறது என்று அடித்துச் சொல்கிறது மஹிந்திரா. உண்மைதான், ஹெட்லைட்டுகளின் ஒருபுறம் அப்படியே கீழிறங்கி பனிவிளக்குகளை டச் செய்வது, சிறுத்தையின் `முக’வரி போல்தான் இருக்கிறது. பம்பரில் லோயர் இன்டேக் கொஞ்சம் பெரிது. இதுதான் எஸ்யூவி லுக் தருகிறது. 17 இன்ச் ஷார்ப் டைமண்ட் கட் அலாய் வீல் சூப்பர். பின்பக்கம் கார் தடாலென கட் ஆகியிருக்கிறது. நீள விகிதத்துக்காக இருக்கலாம். ரியர் விண்ட்ஷீல்டில் வைப்பர், மேலே ஸ்பாய்லர், ரூஃப் ரெயில் என எல்லாமே பக்கா! அழகான சின்ன எஸ்யூவி.

உள்ளே

உள்ளேயும் டிவோலிதான். டேஷ்போர்டு, ஸ்டீயரிங், ஸ்விட்ச் கியர் எல்லாவற்றிலும் டிவோலி வாசம். ஆனால், இது நன்றாகத்தான் இருக்கிறது. தரம், மற்ற மஹிந்திரா கார்களைவிட மேலேதான். ஸ்விட்ச்களைப் பயன்படுத்தும்போதே புரிகிறது. ஒரு குறை - ஏ.சி பட்டன்கள், கொஞ்சம் குறுகலாக, பயன்படுத்துவதற்கு வசதியாக இல்லை. ஆனால், இதன் பலன் அபாரம். டூயல் டோன் ஏ.சி என்பதால், இடது/வலது என இருபக்கப் பயணிகளுக்கும் சூடு/குளிர் என்று காற்றைப் பிரித்துத் தருவது அருமை. ஆனால், அந்தச் சிவப்பு நிற ஏ.சி ஸ்க்ரீன், ஏதோ அலாரம் லைட் போல பயமுறுத்துகிறது.

இடவசதி

வழக்கம்போல அந்த சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டும் கியர் லீவரும் உயரமாக இருப்பது உறுத்தலாக, இடைஞ்சலாக இருக்கிறது. ஆனால், இடவசதியில் தாராளம். ஏகப்பட்ட பாட்டில் ஹோல்டர்கள், சென்டர் கன்ஸோலில் ஒரு பாக்ஸ், டேஷ்போர்டில் உள்ள க்ளோவ்பாக்ஸ்... இது நல்ல அகலம். இவை தவிர, சீட் பாக்கெட்டுகள் வேறு. எலாஸ்டிக் ஸ்டைல் பாக்கெட், பயன்படுத்த இன்னும் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கலாம். பூட் இடவசதிதான் குறைத்துவிட்டார்கள். 257 லிட்டர்தான். காருக்குள் பொருட்களை ஏற்றவும் வசதியாக இல்லை. டிக்கியின் உயரம் அதிகமாக இருக்கிறது. டேஷ்போர்டு கன்ட்ரோல்கள் இன்னும் கொஞ்சம் எர்கானமிக்ஸில் முன்னேற வேண்டும்.

XUV300 காரின் அகலம் - 1,820 மிமீ. பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், நெக்ஸான், க்ரெட்டாவைவிட அதிகம். அதனால் சீட் இடவசதி அருமை. பின்பக்க லெக்ரூமும் அதிகம். ஆனால், மூன்று பேர் வசதியாக உட்கார்ந்து வர முடியவில்லை.

வசதிகள்

`மஹிந்திராவா இது’ என்று முதல் பார்வையில் நான் வியந்தது - பின்பக்க டிஸ்க் பிரேக்ஸ்தான். 18 லட்சம் ரூபாய் க்ரெட்டாவில்கூட பின்பக்க டிஸ்க் இல்லை. சூப்பர் மஹிந்திரா! உள்ளேயும் வசதிகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், காஸ்ட்லி கார்களில் இருப்பதுபோன்று டயர்களில் காற்றைச் சோதிக்கும் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் ரியர்-வியூ மிரர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஆட்டோ வைப்பர்ஸ், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் (ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன்), க்ரூஸ் கன்ட்ரோல், ட்வின்-பாட் 3.5 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். இதில் டயர் டைரக்ஷன் இண்டிகேட்டர் எல்லாம் புதிது. அதாவது, பொதுவாக ஒரு காரை ஸ்டார்ட் செய்து கிளப்பும்போது, டயர்கள் எந்தப் பக்கம் இருக்கும் என்பது தெரியாது. XUV300-ல் அந்தப் பிரச்னை இருக்காது.

முக்கியமாக, அந்த ஸ்மார்ட் வாட்ச்சையும் சொல்ல வேண்டும். நீங்கள் டிரைவர் வைத்துப் பயணிக்கும் நபர் என்றால், வாட்ச் மூலமே போன், ஆடியோ, டயர் பிரஷர் வரை எல்லாவற்றையும் கன்ட்ரோல் செய்துகொள்ளலாம். இதுதவிர, பாதுகாப்பும் வாவ்! முன்பக்கம், பக்கவாட்டு, கர்டெய்ன், முழங்கால் என எல்லாவற்றுக்கும் சேர்த்து ஏழு காற்றுப்பைகள். ஐந்து பயணிகளுக்கும் ஹைட் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ISOFIX மவுன்ட் சீட், ABS, ESP, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் எனக் கலக்குகிறது. ஸ்டீயரிங்குக்குக்கூட மூன்று மோடுகள் வைத்து அப்ளாஸ் அள்ளிவிட்டது மஹிந்திரா. ஆனால், `இந்தச் சின்ன எஸ்யூவிக்கு இது தேவையா?’ என்கிற விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.

டிரைவிங்

பெட்ரோல்/டீசல் என இரண்டிலுமே வந்திருக்கிறது XUV300. 1.2 லி பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல். இரண்டிலுமே 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 1.2 பெட்ரோல், KUV காரில் இருக்கும் அதே யூனிட்டின் டர்போ சார்ஜ்டு வெர்ஷன்.

டீசல்...? கரெக்ட்... மராஸோதான். 115 bhp பவர். இதில் பெர்ஃபாமென்ஸுக்காக ரிஃபைண்ட் செய்திருப்பார்கள்போல் தெரிகிறது. ஆரம்ப அதிர்வுகள், `திரும்பவும் மஹிந்திராவா!’ என ஆச்சரியப்படுத்துகின்றன.

டீசலில்தான் கால் வைத்தேன். ``எலெக்ட்ரிக்கலாக கன்ட்ரோல் செய்யப்பட்ட வேரியபிள் ஜியோமெட்ரி டர்போ சார்ஜர்’’ என்றார்கள். டர்போ லேக்கை நினைத்துதான் பயந்தேன். ஆனால், மற்ற கார்கள்போல் இல்லை. அதற்காக இல்லாமலும் இல்லை. கொஞ்சம் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. 2,000 rpm-மைத் தாண்டிவிட்டால், 3,500 வரை `கிர்’ரென பறக்கலாம். அதன்பிறகும் பவர் கொஞ்சம் டிராப் ஆவதுபோல் தெரிந்தது. அப்படியென்றால், மிட் ரேஞ்ச் சூப்பர் என அர்த்தம். அதாவது, ஓவர்டேக்கிங் பெர்ஃபாமென்ஸ் அருமையாக இருக்கும். கியர்பாக்ஸ், ஸ்மூத் ஷிஃப்ட்டிங்தான். ஆனால், கியர் லீவரின் டிராவல் கொஞ்சம் அதிகம்.

நெக்ஸான் போன்ற கார்களில் டிரைவிங் மோடுகள் இருக்கும். XUV300-ல் மோடுகளைத் தேடினேன். அதற்குப் பதிலாகத்தான் `ஸ்டீயரிங் மோடு’ என்றார்கள். ஃபீட்பேக் ரொம்பவும் பிரமாதம் என்று சொல்ல முடியவில்லை. ஸ்போர்ட் மோடில் வைத்தால், ஸ்டீயரிங் எடை அதிகமாவதை ஃபீல் செய்ய முடிந்தது. ஹைவேஸுக்கு இதைப் பயன்படுத்தலாம். டாப் ஸ்பீடு 150 வரைதான் என்னால் கோவா சாலைகளில் விரட்ட முடிந்தது. அதேநேரம், பிரில்லியன்ட்டான டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் ஏதோ ஒன்று மிஸ் ஆவதுபோல் தெரிந்தது.

கையாளுமை

ரைடு குவாலிட்டியில், XUV300 எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கோவாவின் மோசமான சில சாலைகளில் வேண்டுமென்றே இறக்கி ஏற்றினேன். லாங் டிராவல் சஸ்பென்ஷன் என்பதால், மோசமான சில பள்ளங்களில் நம்மை சொகுசாகப் பார்த்துக் கொள்கிறது. டயர் மற்றும் சஸ்பென்ஷனின் கூட்டணி அருமை. நல்ல கிரிப். ஹை ஸ்பீடு கார்னரிங்கில் சில நேரத்தில் பாடி ரோல் தெரிந்தபோது, ESC-யை ஆன் செய்துகொண்டேன். நல்ல ஃபீல் கிடைத்தது.

வாங்கலாமா?

W4, W6, W8, W8 (O) என்ற நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது XUV300. பெப்பியான டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ், ஸ்டீயரிங் ஃபீட்பேக், சின்ன டிக்கி, சில எர்கானமிக்ஸ் குறைகள் - இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மஹிந்திரா மனசுக்குள் சிரிக்கிறது.

பெட்ரோல் 9.1 முதல் 13.93 லட்சம் ரூபாய் வரையும், டீசல் 9.77 முதல் 14.52 லட்சம் ரூபாய் வரையும் சென்னை ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது XUV300. ஆனால், பிரெஸ்ஸாவை நெருங்க முடியவில்லை. ஆரம்ப வேரியன்ட்கள் பிரெஸ்ஸாவைவிட 80,000 ரூபாய் வரை விலை அதிகம். இதுவே எக்கோஸ்போர்ட்டைவிட10,0000 ரூபாய்தான் அதிகம். அதேநேரம் ஆல்வீல் டிஸ்க், ஏழு காற்றுப்பைகள், டூயல் ஸோன் ஏ.சி கன்ட்ரோல், பெரிய வீல்பேஸ் (2,600 மிமீ), ஹீட்டட் ORVM, ஸ்டீயரிங் மோடுகள் என்று `செக்மென்ட் ஃபர்ஸ்ட்’ என்று சொல்லக்கூடிய பல வசதிகளுக்காகவும், விலை மற்றும் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டுக்காகவுமே மஹிந்திராவுக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.

தமிழ் - படங்கள்:க.பாலாஜி