அம்பாஸடர் உற்பத்தி நிறுத்தப்பட்டபோது, பலர் வருந்தினார்கள். சான்ட்ரோ சில வருடங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியபோதும் பலர் வருத்தம் அடைந்தனர். "சம்பாதிச்சு வாங்கிய முதல் கார். விக்க மனசு இல்ல'' என்று 800 காருடன் இன்னும் செல்ஃபி எடுத்துப்போடும் 80-ஸ் கிட்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். அம்பாஸடர் தவிர நிறுத்தப்பட்ட பல கார்கள் மறுபிறவி எடுத்துவிட்டன. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், மனசை விட்டு நீங்காமல் இருக்கும் மேற்கண்ட கார்கள் லிஸ்ட்டில் இன்னும் சில கார்கள் சேரவிருக்கின்றன.

மஹிந்திரா e2o (2013-2019), நுவோஸ்போர்ட் (2009-2018), வெரிட்டோ (2011-2019), ஸைலோ (2009-2018)

ஸைலோ நின்றுபோனது இன்னும் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், பொலேரோவின் ப்ளாட்ஃபார்மை மேம்படுத்தி அதில் தயாரிக்கப்பட்ட ஸைலோ போன ஆண்டே நிறுத்தப்பட்டு விட்டது. இதில் நுவோஸ்போர்ட்டும் அடக்கம். மேலும், எலெக்ட்ரிக் கார்களான e-வெரிட்டோ மற்றும் e2o ப்ளஸ், க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற கட்டுமானத்தைக் கொண்டிருக்காததால், அதன் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. e2o ப்ளஸ் காரை மாற்றியமைப்பது மிகவும் கடினம். ஆனால், வெரிட்டோவின் விற்பனையை வைத்துப் பார்க்கும்போது, அதற்கான முதலீட்டைச் செய்ய அந்த நிறுவனம் விரும்பாது.

ஜீப் விரும்பிகளுக்கும் ஒரு மகிழ்ச்சிச் செய்தி. மூத்தகுடி MM540-ன் லேடர் சேஸியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தார் ஜீப், ஸ்கார்ப்பியோ மற்றும் TUV 3OO கார்கள் தயாரிக்கப்படும் மூன்றாம் தலைமுறை லேடர் சேஸியில் புதுசாக வருகிறது. அடுத்த ஆண்டில் அறிமுகமாகப்போகும் இந்த எஸ்யூவி, புதிய பாடி மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். பொலேரோவும் இந்த லிஸ்ட்டில் சிக்கலாம்.

ஃபியட் புன்ட்டோ (2009-2019), லீனியா (2008-2019)

2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில், காலம் சென்ற ஃபியட் க்ரைஸ்லர் குழுமத் தலைவரான செர்ஜியோ மார்ச்சியோனி இப்படிச் சொன்னார்: ‘‘ஃபியட்டுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் கிடைத்தன. இது ஜீப் கார்களின் காலம்!’’

எத்தனை உண்மையான வார்த்தைகள் அவை! அப்போதே இந்தியாவில் ஃபியட்டின் தலைவிதி எழுதப்பட்டுவிட்டது. ஆம், இந்த நிறுவனம் லீனியா மற்றும் புன்ட்டோ ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன! ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில், ஃபேஸ்லிஃப்ட்கள் வாயிலாக காரை ஃப்ரெஷ்ஷாகக் காட்டுவதற்கு ஃபியட் பெரிதும் மெனக்கெடவில்லை என்பதால், இவற்றின் மாதாந்திர விற்பனை இரட்டை இலக்கத்திலேயே இருக்கிறது. எனவே, மற்ற கார் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னையான ‘முதலீடு செய் அல்லது அழித்துவிடு’ என்பது, இம்முறை ஃபியட் வசம் வந்தது. ஃபியட்டின் இந்த இரண்டாவது சாய்ஸ் எல்லோருக்கும் வருத்தம்தான்.

ஹோண்டா பிரியோ (2011-2019)

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பிரியோவின் உற்பத்தி நிறுத்தப் பட்டுவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது ஹோண்டா. இந்த காரின் குறைவான விற்பனையை மனதில் வைத்துப் பார்க்கும்போது, புதிய மாசு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப பிரியோவை மேம்படுத்துவது என்பது பண விரயமாக இருக்கும் என அந்த நிறுவனம் கருதியதே காரணம். எனவே, இந்த காரின் தயாரிப்பு முடிந்துவிட்டதால், பட்ஜெட் ஹேட்ச்பேக் பிரிவில் இனி ஹோண்டாவின் பெயரைப் பார்க்க முடியாது.

மாருதி சுஸூகி ஆம்னி (1984-2019), மாருதி சுஸூகி ஜிப்ஸி (1985-2019)

மாருதி சுஸூகியின் சிவப்புக் கொடியில் முதன்மையாகச் சிக்கியிருக்கும் கார் - ஆம்னி. இன்றும் மாதத்துக்கு 7 ஆயிரம் கார்கள் என்ற ரீதியில் இந்த வேன் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. அதிக இடவசதிக்கும், குறைவான பராமரிப்புக்கும் பெயர்பெற்ற ஆம்னி, முன்பக்கப் பாதுகாப்பில் சொதப்புகிறது. எனவே க்ராஷ் டெஸ்ட்டில் 'பாஸ்' எனும் பேச்சுக்கே இடமில்லை. இனி ஆம்னி நஹி!

ஆஃப் ரோடு கிங் எனவும், வெற்றிகரமான ராலி கார் எனவும் அழைக்கப்படும் ஜிப்ஸியும் எண்ட் கார்டு பெறவிருக்கிறது. 1980-களில் தயாரிக்கப்பட்ட காரின் கட்டுமானம், க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் ஆகுமா என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆனால் இந்த காரின் விற்பனை சொற்பமான எண்ணிக்கையில் இருப்பதால், ஜிப்ஸியை மேம்படுத்தும் எண்ணத்தில் மாருதி சுஸூகி இல்லை. எனவே, இதற்கு மாற்றாக ஜிம்னியின் (Jimny) 4 டோர் வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கும் முடிவில் இருக்கிறதாம் மாருதி சுஸூகி.

ஆல்ட்டோ மற்றும் ஈக்கோ ஆகிய கார்களும் க்ராஷ் டெஸ்ட் விதிகளில் பாஸ் மார்க் வாங்காது என்றாலும், அவை புதிய அவதாரத்தில் வரவிருக்கின்றன. இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாக உள்ள புதிய ஈக்கோவின் ஆரம்ப வேரியன்ட், ஆம்னியின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும். வேகன்-R-ஐத் தொடர்ந்து, மாற்றியமைக்கப்பட்ட Heartect ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவிருக்கிறது புதிய ஆல்ட்டோ.

ஹூண்டாய் இயான் (2011-2018)

ஹூண்டாயின் HA ப்ளாட்ஃபார்மில், இந்தியாவுக்கெனப் பிரத்யேகமான பட்ஜெட் காராகத் தயாரிக்கப்பட்டதுதான் இயான். இது இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால், உலகளாவிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப இந்த கார் கட்டமைக்கப்படவில்லை. மேலும் இதே காரணத்துக்காக, இயான் மற்ற சர்வதேச கார் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இதே காருக்கு மாற்றாக, i10 காரின் ப்ளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட்ட சான்ட்ரோ அறிமுகமானதால், சென்ற ஆண்டே இயானின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.

டாடா நானோ (2008-2019), டாடா சஃபாரி (1998-2019), டாடா சுமோ (1994-2019)

டாடாவின் வருங்கால மாடல்கள் அனைத்துமே, இனி ஆல்ஃபா மற்றும் ஒமேகா எனும் இரு ப்ளாட்ஃபார்ம்களில் மட்டுமே தயாரிக்கப்படும். எனவே, மற்ற ப்ளாட்ஃபார்ம்களில் உற்பத்தியாகும் டாடா கார்களின் தயாரிப்பு நிறுத்தப்படலாம். இதில் டாடாவின் வரலாற்றில் மறக்க முடியாத தயாரிப்பாக இருந்த நானோ, விரைவில் மக்களை விட்டுப் பிரிய உள்ளது. க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உள்பட்ட புதிய நானோவை (Pelican), 400 கோடி செலவில் தயாரிக்கும் பணிகளை ஏற்கெனவே தொடங்கியிருந்தது டாடா. ஆனால் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலுக்கே டிமாண்ட் இல்லாததால், அந்த எண்ணத்தை மூட்டை கட்டிவிட்டது. ஏப்ரல் 1 – 2019 முதலாக கார்களில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படுவதால், டா(ட்)டா நானோ!

விற்பனை எண்ணிக்கையில் பின்தங்கியிருக்கும் சுமோ மற்றும் சஃபாரியை, அதிக முதலீடு செய்து க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்த டாடா தயங்குகிறது. லேடர் ஃப்ரேமில் தயாரிக்கப்படும் இவற்றை, இந்த நிறுவனத்தின் 2 ப்ளாட்ஃபார்ம்களில் சேர்ப்பது மிகவும் கடினம். அடுத்த ஆண்டின் நடுவே, ஹெக்ஸாவின் உற்பத்தியை நிறுத்த டாடா முடிவெடுத்திருக்கிறது. ஏனெனில் ஏப்ரல் 1 – 2020 முதலாக அமலுக்கு வரவிருக்கும் BS-VI மாசு விதிகள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப அந்த எஸ்யூவியை மாற்றியமைக்க, அதிக முதலீடு தேவைப்படலாம்.

ராகுல் சிவகுரு