கூட்டணிக்கும் சரி, பெரிய குடும்பத்துக்கும் சரி - எத்தனை சீட் என்பதைப் பொறுத்துத்தான் அதன் வெற்றி அமையும். பெரிய குடும்பம் உங்களது, கையில் 15 லட்சம் ரூபாய் இருக்கிறது. அப்படியென்றால் உங்களுக்கு எம்பிவி/எஸ்யூவிக்களைத் தவிர வேறு வழியில்லை. 7 பேர் பயணிக்க வேண்டும், விலை குறைவாகவும் இருக்க வேண்டும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் எம்பிவிக்கள் என்று சொல்லப்பட்டும் மல்ட்டி யுட்டிலிட்டி வாகனங்கள்தான் ஒரே சாய்ஸ். இதில் மாருதி சுஸூகி எர்டிகாதான் இப்போது மார்க்கெட் லீடர். அதுவும் இரண்டாம் தலைமுறை எர்டிகா, இன்னும் ஸ்டைலாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

எர்டிகாவுடன் கடுமையான போட்டி போடக் காத்துக் கொண்டிருக்கிறது மஹிந்தி ராவின் மராத்ஸோ. இவற்றைத் தாண்டி பட்ஜெட் எம்பிவி எனப் பார்த்தால், ரெனோ லாஜியும் கண் முன் வருகிறது. பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், லாஜிக்கு வாடிக்கை யாளர்கள் மத்தியில் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத் தான் செய்கிறது. டிசைன்லாம் வேண்டாம்; பயன்பாடுதான் முக்கியம் என்றால் லாஜி ஓகேதான்.

இந்த மூன்று கார்களில் வின்னர் யார்?

டிசைன்

இந்த மூன்றில் எர்டிகாதான் மிகச்சிறிய எம்பிவி. இதன் நீள/அகல/உயரம் எல்லாமே மற்ற மூன்றையும்விட சிறியது. இந்தச் சின்ன சைஸும், குறைந்த டர்னிங் ரேடியஸும், சிட்டிக்குள் ஜாலியாக எர்டிகாவை வளைத்து நெளித்து ஓட்ட உதவுகிறது. மொத்தமாக ஓவர் ஆல் டிசைனில் பெரிய ஆரவாரங்கள் எதுவும் இல்லாமலேயே அசத்துகிறது எர்டிகா.

லாஜியின் டிசைனில் இன்னும் அடக்கம். டிஸைனுக்காக ரெனோ இன்ஜினியர்ஸ் பெரிதாக மெனக்கெட்டிருக்கிறார்கள் என்கிற எந்த அடையாளமும் தெரியவில்லை. ஆனால், இதைப் பயன்படுத்தியவர் கள், பயன்பாட்டில் இதை அடித்துக்கொள்ள முடியாது என்று பெருமிதம் கொள்கிறார்கள். ஆம்! உண்மைதான். மூன்றில் வீல்பேஸ் அதிகம் கொண்ட கார் லாஜிதான். அதனால், கேபின் ரூமில் இருந்து பின்பக்க இடவசதி வரை எல்லாமே சிறப்பு.

மற்ற இரண்டும் மோனோ காக் சேஸி என்றால், மராத்ஸோ கட்டுமஸ்தான பாடி-ஆன்-ஃப்ரேம் சேஸியில் வடிவமைக் கப்பட்டிருக்கிறது. மார்க்கெட்டுக்குப் புதிது என்பதால், டிசைனுக்கு ஓவராக உழைத்திருப்பது தெரிகிறது. பழைய ஃபெராரி 456 மாடல் போன்ற க்ரீஸ் டிசைன், மராத்ஸோவுக்கு நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகிறது. டாப் வேரியன்ட் M8-ல் 17 இன்ச் அலாய் வீல், LED DRL லைட், 2-வது வரிசைக்கு சன் ஷேடு இதெல்லாமே மராத்ஸோவின் ஹைலைட்.

யாருக்கு எத்தனை சீட்?

இரண்டாவது தலைமுறை எர்டிகா வெளிவந்தபோது, எல்லோரும் எதிர்பார்த்தது இதைத்தான். 8 சீட் ஆப்ஷன் இருக்குமா? ஆனால் புது எர்டிகாவில், அதே 7 சீட்கள்தான் (2+3+2). பழைய காரைவிட புதிய எர்டிகாவின் இடவசதியில் முன்னேற்றம் தெரிகிறது. நடுவரிசையில் கால்களை நீட்டி, மடக்கி உட்கார லெக்ரூம் போதுமானதாக இருக்கிறது. இவற்றை 60:40 விகிதத்தில் மடித்தும் கொள்ளலாம். முதல் தலைமுறை எர்டிகாவில் கடைசி வரிசை சீட்டுக்கு, இடித்துத் தள்ளிக் கொண்டு தான் போக வேண்டும். புது எர்டிகாவில் நடுவரிசை மாதிரி இடவசதி இருப்பது ஆச்சர்யம். ஃபுளோர் உயரமும் குறைவாக இருப்பதால், உள்ளே போய் வரவும் எளிதாக இருக்கிறது.

லாஜியில் 7 சீட் (2+2+3) மற்றும் 8 சீட் (2+3+3) என இரண்டு ஆப்ஷன்களும் உண்டு. அதாவது, 7 சீட்டரில் நடுவரிசைக்கு கேப்டன் சேர்கள், 8 சீட்டரில் பெஞ்ச் சேர்கள் இருக்கின்றன. லாஜியின் நடுவரிசையில் நல்ல இடவசதி மற்றும் சொகுசு. காரணம், சீட்களை நன்றாக இறக்கிவிட்டு, லெக்ரூமை இன்னும் அதிகப் படுத்திக் கொள்ளலாம். 8 சீட்டரில் நடுவரிசையில் மூன்று பேருக்கான இட வசதியில் எர்காடிவைவிட வசதியாக இருக்கிறது லாஜி.

மராத்ஸோவிலும் 7 மற்றும் 8 சீட் ஆப்ஷன் இருக்கிறது. மராத்ஸோவின் இடவசதியை ஒப்பிடும் போது, மற்ற இரண்டு கார்களும் அருகில் நெருங்க முடியவில்லை. பெரிய காராக இருந்தாலும் உயரமான கேபின், வெளிச்சாலையை நன்றாகக் காண்பித்து தன்னம்பிக்கையோடு காரை ஓட்ட தைரியமூட்டுகிறது. நடுவரிசைக்கு லாஜி போலவே பென்ச் மற்றும் கேப்டன் சேர்கள் ஆப்ஷன் உண்டு. மேலும் இங்கே அவ்வளவு வசதியான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம். ஜன்னல் பெரிதாக இருப்பதால், காருக்குள் இடவசதி இன்னும் ஏராளம் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஒரு சிறிய லீவரை இழுத்தால், நடுவரிசை இருக்கைகளை ஓரளவுக்கு மடக்கி, 3-வது வரிசைக்குப் போய் விடலாம். பின்பக்க டோர் பாக்கெட்டுகள் இன்னும் கொஞ்சம் பயன்படுத்த எளிதாக இருந்திருக்கலாம்.

டிக்கி இடவசதியில் எது பெஸ்ட்?

மூன்று கார்களிலுமே டிக்கி இடவசதி, `வாவ்!’ என்று வியக்க வைக்கவில்லை. 7 பேரை ஏற்றிக்கொண்டு லக்கேஜ்களையும் அதற்கு ஏற்றதுபோல் அள்ளிக்கொண்டு போகலாம் என்றால்... எர்காடிவில் 209 லிட்டர்தான் இடம். இரண்டு சூட்கேஸ்களை வைத்துக் கொள்ளலாம்; அவ்வளவுதான். இது தவிர, ஃப்ளோருக்கு அடியில் சில பொருள்களை வைக்க வசதி இருக்கிறது. காருக்குள் பயணிக்கப்போவது வெறும் 2 பேர்தான் என்றால், 2-வது, 3-வது சீட்களை மடித்துக்கொள்ளலாம். அப்படியும் 803 லிட்டர்தான் இடம் கிடைக்கும்.

மராத்ஸோ, எர்டிகாவைவிட சுமார். எல்லா சீட்களும் நிரம்பிய நிலையில், டிக்கியில் பொருள்கள் வைக்க வெறும் 190 லிட்டர் இடம்தான். ஆனால் இரண்டு வரிசையையும் மடக்கிவிட்டால்... வாவ்! 1055 லிட்டர் இடவசதி.

லாஜியைப் பொருத்தவரை, 8 பேர் நிரம்பிய நிலையில், இதன் பூட் ஸ்பேஸ் 207 லிட்டர்தான். அதுவே இரண்டு வரிசை சீட்களையும் மடித்துவிட்டு, வெறும் இரண்டு பேர் மட்டும் பயணித்தோம் என்றால், அடடா... கிட்டத்தட்ட 1861 லிட்டர் இடவசதியுடன் பொருள்களை அடுக்கி வைத்துக்கொண்டு போகலாம்.

டிரைவிங் சொகுசு

பயன்படுத்த எளிதான டேஷ்போர்டைக் கொண்டிருக்கிறது மாருதி சுஸூகி எர்டிகா. டிரைவர் சீட் கொஞ்சம் தாழ்வாக இருப்பதால், ஒரு டால்-பாய் காரை ஓட்டுவதுபோல் இருக்கிறது. ஸ்டீயரிங் வீல், விண்டோ ஸ்விட்ச்கள், டச் ஸ்க்ரீன் இவை அனைத்திலும் மாருதியின் டச் தெரிகிறது. தரம் ஓகே. மற்றபடி சீட் சொகுசு அருமை.

உயரமான சீட்கள், பெரிய விண்ட் ஸ்க்ரீன் எல்லாம் சேர்ந்து லாஜியில் அதிக விஸிபிளிட்டி கிடைக்கிறது. அதற்கேற்றபடி டேஷ்போர்டும் தாழ்வாக இருப்பது பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கிறது. பார்த்துப் பழகிய டேஷ்போர்டு என்பதால், வியப்பதற்கு வேலையில்லை. சீட் உயர அட்ஜஸ்ட் லீவர், ஏ.சி கன்ட்ரோல் நாப்கள் போன்ற சில பிளாஸ்டிக்குகளின் தரம்... மன்னிச்சூ!

தரத்தில், இந்த மஹிந்திரா சூப்பர் என்றே சொல்லலாம். காருக்கு உள்ளே கிளாஸி பியானோ பிளாக் ஃப்னிஷில் பார்த்தவுடன் ப்ரீமியம் டச் ஒட்டிக்கொள்கிறது. டிரைவர் சீட் நல்ல உயரத்தில் இருப்பதால், வெளிச்சாலை நன்றாகத் தெரிகிறது. ஆனால், ‘A’ பில்லர் கொஞ்சம் தடிமன். அதனால் வளைவுகளில் ஓட்டும்போது பார்வையை மறைக்கிறது. ஆனால், எம்பிவி கார்களில் முதன்முறையாக மராஸோவில் ரியர் வியூ கண்ணாடியில் கான்வெர்சேஷன் மிரர், வரம். கேபினுக்குள் இது ஒட்டுமொத்த ஏரியாவையும் கவர் செய்கிறது. அதேநேரம், சில எர்கானமிக்ஸ் குறைபாடுகள் இந்த மஹிந்திராவிலும் தொடர்கின்றன. சென்டர் ஸ்டோரேஜ் ஆர்ம்ரெஸ்ட் நீளமாக இருப்பது, USB போர்ட்டுகள் மறைவாக இருப்பது போன்றவற்றைச் சொல்லலாம். ஹேண்ட்பிரேக் லீவர் வித்தியாசமாக இருந்தாலும், பயன்படுத்த எளிதாக இல்லை.

ஓட்டுதல்

மூன்று கார்களுமே ஃப்ரன்ட் வீல் டிரைவ்தான். எர்டிகாவில் இருப்பது 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இன்ஜின். 90 bhp பவர், 20 kgm டார்க். ஃபியட் இன்ஜின் என்பதால், சந்தேகப்பட வேண்டியதில்லை. அதேநேரம், 7 பேரை வைத்துக்கொண்டு ஒரு எம்பிவி-யை இழுக்க இந்தச் சக்தி போதுமா என்றும் தெரியவில்லை. ஆனால் பழைய எர்டிகாவில் இருந்த அளவுக்கு பவர் குறைபாடு இதில் அதிகமாகத் தெரியவில்லை. 2,000 ஆர்பிஎம்மைத் தாண்டிவிட்டால், 5 கியர்களையும் தட்டிவிட்டு எர்டிகாவில் பறக்கலாம்.

மராத்ஸோவின் சிறப்பே அதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட்தான். 1.5 லிட்டர் டீசல் - நல்ல ஸ்மூத்தான, அதிகம் சத்தம் போடாத, அமைதியான இன்ஜின். அதற்காக வேகமாக ஓட்டினால் சத்தம் வராமல் இல்லை. ஸ்மூத்தான பவர் டெலிவரி கிடைக்கிறது. நெடுஞ்சாலை க்ரூஸிங்கில் பதற்றம் இல்லாமல் ஓட்ட முடிகிறது. அதேநேரம், குறைந்த வேகங்களில் 123 bhp பவர் மிகவும் குறைவோ எனத் தோன்றுகிறது. காரணம், எர்டிகாவைவிட மராஸோவின் எடை 405 கிலோ அதிகம். (1,650 கிலோ). லைட் வெயிட் கிளட்ச்தான். ஆனால், கிளட்ச் டிராவல் அதிகமாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்மூத்.

இந்த லாஜி ‘ஸ்டெப்அவே’-யில் டஸ்ட்டர், கேப்ச்சர் கார்களில் இருக்கும் அதே 1.5லி K9K, 4 சிலிண்டர் இன்ஜின்தான். இதிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். கிளட்ச், செம துல்லியம். பழைய லாஜி போல் ஹெவியாக இல்லை. 110 bhp பவர், 24.5 kgm டார்க் கொண்ட இந்த இன்ஜின்தான், 0-100 கி.மீ போட்டியில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடம் மராத்ஸோவுக்கு. லாஜி காரும் ஆரம்பத்தில் சத்தம் போடுகிறதுதான்; வழக்கம்போல் அதே டர்போ லேக் இருக்கிறதுதான். ஆனால், டர்போ லேக்கைத் தாண்டியதும், பவர் டெலிவரியில் ஏதோ ஒன்று ஈர்க்கிறது. மிட் ரேஞ்ச் அருமை.

ஓட்டுதல் தரம்!

மற்ற கார்களைவிட எர்டிகாவில்தான் கி.கிளியரன்ஸ் 180 மிமீ. இருந்தாலும் 7 பேர் உட்கார்ந்து போனால், ஸ்பீடு பிரேக்கர்களில் பயந்து பயந்துதான் ஓட்ட வேண்டியிருக்கிறது. நெடுஞ்சாலையில் தன்னம்பிக்கையோடு பறக்க முடிகிறது. சிட்டிக்குள் இதன் ஸ்டீயரிங்கை எளிதாகக் கையாளலாம். ஸ்விஃப்ட் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருப்பதால், எம்பிவி ஓட்டும் உணர்வு இல்லை. எர்டிகாவில் இருப்பது சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப். ஆனால், ஓட்டுதலில் லேசான இறுக்கம் தெரிகிறது. பெரும்பள்ளம் மேடுகளை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது எர்டிகா.

மராத்ஸோவில் ஸ்டீயரிங்குக்குத்தான் முதல் லைக். நகரத்துக்குள் ஓட்டும்போது லைட் வெயிட்டாகவும், நெடுஞ்சாலையில் லேசான எடைத்தன்மை அதிகரித்தும் பக்காவாகச் செயல்படுகிறது. பார்க்கிங் ஈஸியாகச் செய்யலாம். நெடுஞ்சாலையில் இதுபோன்ற உயரமான கார்களில் வியக்க வைப்பது டைனமிக் டிசைனாகத்தான் இருக்கும். மராத்ஸோவிலும் அற்புதமான ஏரோடைனமிக்ஸ். எவ்வளவு வேகமாகப் போனாலும் பதற்றம் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. 4 வீல்களிலும் டிஸ்க் இருப்பதால் தன்னம்பிக்கை எக்ஸ்ட்ரா. எர்டிகாவைவிட அதிக டர்னிங் ரேடியஸ் (5.25 மீ) என்பதால், சட்டெனத் திருப்பத்தான் முடியவில்லை.

லாஜி, டஸ்ட்டரின் பிளாட்ஃபார்மில் தயாராவது தெரியும்தானே! கரடுமுரடு சாலைகளில் கொஞ்சம் கரடுமுரடுப் பயணம்தான் கிடைக்கும். பெரிய குண்டு குழிகளில் அசால்ட்டாகப் பாய்ந்து செல்லும் லாஜியில் ஸ்டீயரிங் கிக்-பேக் கிடைக்கிறது. அதாவது, மேடு, பள்ளங்களில் ஏறி இறங்குவதை ஸ்டீயரிங்கில் உணர முடிகிறது. இதன் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் கொஞ்சம் எடை அதிகமோ என்று தோன்றுகிறது. இதுதான் நெடுஞ்சாலைகளில் நல்ல நிலைத்தன்மை கிடைக்க உதவுகிறது. நேர்கோட்டில் ஜிவ்வெனப் பறக்கலாம். பாடி ரோலும் பெரிதாக இல்லை. ஆனால், பார்க்கிங் செய்வது சிரமம்.

தொகுப்பு: தமிழ்

உண்மையான எம்பிவி என்றால், அது லாஜிதான். காரணம், இந்த காரை கார்கோவாகக்கூட மாற்றிக் கொள்ளலாம். பெரிய டூர் அடிக்கும் சின்னக் குடும்பம், ஒரு ஊரையே காலி செய்து ஏற்றிக்கொண்டு போகும் அளவுக்கு டிக்கி இடவசதிதான் (1861லி) லாஜியின் ப்ளஸ். நெடுஞ்சாலையிலும் நல்ல நிலைத்தன்மை. இதைத் தாண்டிப் பெரிதாக லாஜியில் யோசிக்க முடியவில்லை. சுற்றிச் சுற்றித் தேடிப் பார்த்தாலும் காலத்துக்கேற்ற சில மாடர்ன் அம்சங்கள் மிஸ் ஆகின்றன. ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ, புரொஜெக்டர் லைட்ஸ், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட் போன்ற விஷயங்களெல்லாம் தேடினாலும் கிடைக்கவில்லை. விலையும் எர்டிகாவைவிட அதிகம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

ப்ரீமியம் கேபின், இடவசதி, சட்டெனத் திரும்ப வைக்கும் வெளிப்புற டிசைன், ஈஸி டு டிரைவ், ரிஃபைண்டு இன்ஜின், பெப்பியான பெர்ஃபாமென்ஸ், வசதிகள், பாடி ஆன் ஃப்ரேம் கட்டுமானத்தில் தயாராகும் எம்பிவி, விமானம் போன்ற பின் பக்க ஏ.சி வென்ட்கள், ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் எனக் கலக்குகிறது மராத்ஸோ. ஆனால், இதற்கெல்லாம் எர்டிகாவைவிட எக்ஸ்ட்ராவாக 3.58 லட்சம் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்பது கொஞ்சம் உறுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால், இனோவா க்ரிஸ்ட்டாவை மனதில் வைத்துத்தான் இந்த விலையை மஹிந்திரா நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

மராத்ஸோ அளவுக்கு, பட்டுப்போன்ற இன்ஜின் ரிஃபைன்மென்ட் இல்லை. ஆனால், இந்த எர்டிகாவைப் போட்டியில் வெல்ல வைக்க நிறைய விஷயங்கள் உண்டு. வசதியான மூன்றாவது வரிசை இடவசதி, தாராளமான நடுவரிசை இருக்கைகள், ஏற்றி இறக்க சுலபமான டிக்கி, ஃப்ளோருக்கு அடியில் பொருள்கள் வைக்கும்படியான இடவசதி எனப் பல விஷயங்கள் சொல்லலாம். விலையைக் கவனியுங்கள். முதல் தலைமுறை எர்டிகா, இப்போதுகூட பழைய கார் மார்க்கெட்டில் சக்கைப் போடு போடுவதற்குக் காரணம் - அதன் மார்க்கெட் விலைதான். இரண்டாம் தலைமுறை எர்டிகாவும் அப்படித்தான். மராத்ஸோவைவிட 3.58 லட்சம் குறைவு; லாஜியைவிட 2.12 லட்சம் குறைவு. இது ஒன்றே போதும்தானே... எம்பிவி மார்க்கெட்டைப் பிடிக்க! மாருதி சுஸூகிக்கு வாழ்த்துகள்!