ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகச் சரியாக சொல்ல வேண்டும் என்றால் 46 ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுகமானது முதல் தலைமுறை ஹோண்டா சிவிக். இந்தக் காலகட்டத்தில் சிவிக் தொட்ட உயரம், சிகரம். எட்டாம் தலைமுறை மாடல்தான் நம் நாட்டில் அறிமுகமான முதல் சிவிக். ஓட்டுதல் அனுபவம், தாராளமான இடவசதி, சொகுசு, ப்ரீமியம் ஃபீல் என்று அனைத்து அளவுகோல்களிலும் முன்னணியில் இருந்ததால், அறிமுகமான நாளில் இருந்தே நம் நாட்டில் அதற்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஒன்பதாம் தலைமுறை சிவிக் நம் நாட்டுக்கு வராத நிலையில், நேரடியாக பத்தாம் தலைமுறை சிவிக் இப்போது அறிமுகமாகி இருக்கிறது.

டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா ஆகியவற்றுக்குப் போட்டியாகக் களம் இறங்க இருக்கும் இந்த எக்ஸிக்யூட்டீவ் செடான், என்னவெல்லாம் மாற்றங்களைக் கண்டிருக்கிறது?

சிட்டியாக இருந்தாலும் சரி, அமேஸாக இருந்தாலும் சரி... ஹோண்டாவின் ஸ்டைலிங் மொழி ஒரே மாதிரிதான் இருக்கும். சிவிக் டிசைன் செய்யப்பட்டதும் இதே டிசைன் மொழியில்தான். என்றாலும், சிவிக்கைப் பொறுத்தவரை இதில் பல விஷயங்கள் புரட்சிகரமாகவும் ஸ்போர்ட்டியாகவும் இருக்கின்றன.

குறிப்பாக, க்ரீஸ் கோடுகளைப் பார்த்தால் பழைய கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு பல புதுமைகளை முயற்சித்திருக்கிறார் கள். ஹெட்லைட்ஸ் அமைப்பு கைத்தட்ட வைக்கிறது. வீல் ஆர்ச், அதன் கீழே இருக்கும் 17 இன்ச் அலாய்வீல் ஆகியவை, காரின் கம்பீரத்தைக் கூட்டுகின்றன. கூபே வடிவில் இருக்கும் காரின் பின்பக்கக் கூரை சரிந்த வாக்கில் வந்து டிக்கியுடன் சேரும் டிசைன் கவிதை! காரின் ஹெட்ரூம் பாதிக்கப்படாமல் இதைச் செய்திருப்பது தொழில் நேர்த்தி. ஆங்கில எழுத்தான C வடிவில் இருக்கும் டெயில் லைட்ஸ், காருக்குத் தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன.

430 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியின் டிசைன் அசத்தல். அதேசமயம் இது அகலமாகத் திறந்து, பொருட்களை ஏற்றவும் இறக்கவும் வசதியாகவும் இருக்கிறது.

விற்பனையில் இருந்து விலகிய சிவிக் காரை உதாரணமாக எடுத்துக் கொண்டால்... அந்த காரின் உள்ளலங்காரம் காலத்தைக் கடந்து புரட்சிகரமாகவும், தரமானதாகவும் இருந்தது. புது சிவிக்கின் உள்ளே அந்த அளவுக்குப் புதுமையாக இல்லை. ஆனால், ஸ்போர்ட்டியும் சொகுசுத்தன்மையும் கேரன்ட்டி. சிட்டி மற்றும் அமேஸ் ஆகியவற்றில் இருந்தும்கூட, ஒரு சில அம்சங்கள் புதிய சிவிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன. எதுவும் கண்ணுக்கு உறுத்தலாக இல்லை. திருகுகள் மற்றும் பட்டன்கள், கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன. டேஷ்போர்டு தொடுவதற்கு மென்மையானதாக இருக்கிறது. பாட்டில்கள், காஃபி கப்கள், பேப்பர்கள் வைக்க ஏராளமான இடம் கொடுத்திருக்கிறார்கள். எரிபொருள் மற்றும் டெம்ப்ரேச்சர் மீட்டர்கள் அனலாக் முறையில் இயங்கினாலும், வண்ணமயமான டச் ஸ்கீரின் அனைத்துக் குறைபாடுகளையும் ஈடு செய்துவிடுகிறது.

இருக்கைகள் சூப்பர். சீட்டின் மையப்பகுதி மென்மையாகவும், ஓரங்கள் உறுதித்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. முன் இருக்கைகளில் கால்களை நீட்ட தாராளமாக இடம் உண்டு. தொடைக்கு நல்ல சப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த சிவிக் காரை, டிரைவர் வைத்து ஓட்ட நினைப்பது நல்ல ஐடியா இல்லை. காரணம் டிரைவர் சீட்டுக்குப் பல வசதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இரண்டாவது வரிசை? பின் சீட் ஓகே! ஆனால் பின்னிருக்கையில் இருப்பவர்களுக்கு, பழைய கார்போல ஆடியோ கன்ட்ரோல் கிடையாது. USB சார்ஜர் கிடையாது. அவ்வளவு ஏன், 12V பாயின்ட்கூட இல்லை.

சன் ரூஃப், ஆறு காற்றுப்பைகள், LED ஹெட்லைட்ஸ், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோ வைப்பர்ஸ் என்று பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், போட்டி கார்களில் இருக்கக்கூடிய ஒரு சில அம்சங்கள் இங்கே மிஸ்ஸிங். குறிப்பாக கூல்டு சீட்ஸ், டிரைவர் சீட் மெமரி, முன்பக்கத்துக்கான பார்க்கிங் சென்ஸார், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் ஓபனிங் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இப்போதுள்ள மற்ற ஹோண்டா கார்களைப் போலவே, புதிய சிவிக்கும் டீசல் இன்ஜின் ஆப்ஷனோடு வந்திருக்கிறது என்பதுதான், ஆட்டோமொபைல் உலகின் தலைப்புச் செய்தி. ஹோண்டா CR-V யில் இருக்கும் அதே 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் இதிலும். இது 120 bhp சக்தியையும், 30kgm டார்கையும் கொடுக்கிறது. இது CR-Vக்கு வேண்டுமானால், போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிவிக்கைப் பொறுத்தவரை இது ஓகே. டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட CR-V, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ஆனால் சிவிக் டீசலில் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் இல்லை. இதில் இருப்பது, 6 கியர்கள் மொண்ட மேனுவல் கியர்பாக்ஸ்.

ஆனால் 1.8 லிட்டர் i - VTEC பெட்ரோல் இன்ஜினில் இயங்கக்கூடிய சிவிக், ஆட்டோமேட்டிக் வேரியன்ட் மட்டுமே! இது 141 bhp சக்தியையும், 17.4 kgm டார்க்கையும் தருகிறது. இந்த பெட்ரோல் காரைத்தான் முதலில் ஓட்டினோம். இதில் இருக்கும் CVT... சூப்பரோ சூப்பர்! கேட்ட மாத்திரத்தில் கேட்ட அளவுக்குச் சக்தியை இது கொடுக்கிறது. ஆனால் ஆக்ஸிலரேட்டரை பாதி அழுத்தி ஓட்டும்போது ஸ்மூத்தாக இயங்கும் சிவிக், முழுவதுமாக அழுத்தி இயக்கினால் திணறுகிறது. மிட் ரேஞ்சில் இதை ஓட்டுவது உற்சாகம் தருவதாக இல்லை. அதாவது 3,000 முதல் 5,000ஆர்பிஎம் வரை, தட்டையான பர்ஃபாமென்ஸ்.

1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட சிவிக்குக்கு மாறினோம். பவர் டெலிவரியைப் பொறுத்தவரை, இது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட சிட்டி மற்றும் அமேஸ் போல சீராகச் சக்தியை வெளிப்படுத்துகிறது. நல்ல மைலேஜ் வேண்டும் என்பதற்காகவே, டால் கியரிங் ரேஷியோவைக் கொடுத்திருக்கிறார்கள். 5000 ஆர்பிஎம் வரை இன்ஜின் சீற்றத்தோடு இயங்குகிறது. ARAI கணக்குப்படி இது போட்டியாளர்களைவிட அதிகமாக, அதாவது லிட்டருக்கு 26.8 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது ஹோண்டா. பெட்ரோல் இன்ஜின், லிட்டருக்கு 16.6 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது.

வேல்ஸ் - படங்கள்: ப.சரவணக்குமார்