அறிவியலில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்தாலும்கூட, சரித்திரத்தைப் புரட்டிப்போடும் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் ஜப்பானில் நிகழ்ந்தேறியதில்லை. ஆனால் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றை மேம்படுத்துவதில், ஜப்பானுக்கு நிகராக எந்த நாட்டினரையும் சொல்ல முடியாது. காரணம், கைஜன் எனப்படும் அவர்களின் வாழ்வியல் தத்துவம். இந்தத் தத்துவத்தை இப்போது அவர்கள் வேகன் R-ல் காட்டியிருக்கிறார்கள்.

1993-ம் ஆண்டு வேகன்-R முதல் முதலாக வடிவமைக்கப்பட்டபோது, K-கார்கள்... அதாவது சிறிய கார்களுக்கு என ஜப்பானில் சில வரைமுறைகள் இருந்தன. அதன்படி 3.4 மீட்டர் நீளம் மற்றும் 1.48 மீட்டர் அகலத்திற்குள் எவ்வளவு தாராளமாகக் காரை உருவாக்க முடியுமோ, அப்படி அதிக இடவசதி கொண்ட ஒரு காரை உருவாக்கினார்கள். சோஃபா போன்ற இருக்கைகளை எடுத்துவிட்டு, டைனிங் டேபிள் நாற்காலிகளின் ஸ்டைலில் இருக்கைகளை அதில் அவர்கள் பொருத்தியதால், கால்களை வசதியாக நீட்டி மடக்க இடம் கிடைத்தது.

2000-ம் ஆண்டு இந்த வேகன்-R நம்நாட்டில் அறிமுகமானபோது, கார் பார்க்க பெட்டி போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. முதலில் வாடிக்கையாளர்கள் இடையே அதற்கு வரவேற்பும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு பெரிய ஹேட்ச்பேக் காரில் இருக்கும் தாராளமும் வசதியும் வேகன்-R-ல் கொடுக்கப்பட்டதால், இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் சேர ஆரம்பித்தார்கள். 18 ஆண்டுகளில் 22 லட்சம் கார்கள் விற்பனையாகும் அளவுக்கு, அது சத்தமில்லாமல் சாதனையை நிகழ்த்தியது.

இந்தியாவில் அது அறிமுகமான நாள் தொடங்கி, வேகன்-R பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் காரின் அளவுகளை மட்டும் மாருதி சுஸூகி மாற்றியதேயில்லை. ஆனால் இப்போது களமிறங்கி இருக்கும் வேகன்-R-ல், இந்த அடிப்படை அம்சங்கள் மாறியிருக்கின்றன. அகலத்தில் 150 மிமீ-யும், நீளத்தில் 150 மிமீ-யும், வீல் பேஸில் 35 மிமீ-யும் இப்போது கார் வளர்ந்திருக்கிறது. எனவே புதிய வேகன்-R-ன் ஸ்டைலை மாற்ற, மாருதி சுஸூகி மெனக்கெட்டிருக்கிறது.

ஆனால் அதேசமயம், ‘டால் பாய்’ டிசைன் என்ற அடையாளத்தையும் கார் இழந்து விடவில்லை. இதன் முகப்பு, தற்போது சற்றே உப்பலாகத் தெரிகிறது. அழகான அம்புகள்போல ஹெட்லைட்ஸ் மாறியிருக் கின்றன. சிமெண்ட் ஸ்லாப் போல இருந்த பக்கவாட்டு ஸ்டைலிங்கை, புதிய க்ரீஸ் கோடுகள் மாற்றியிருக்கின்றன. வீல் ஆர்ச்சுகளும் காருக்குப் புதிய அடையாளத்தைக் கொடுக்கின்றன. அதே போல B&C பில்லர்களுக்குக் கறுப்பு வண்ணம் கொடுக்கப் பட்டிருப்பதால், 'ஃப்ளோட்டிங் ரூஃப்’ தோற்றமும் கிடைக்கிறது. டெயில் லைட்ஸ், ஹோண்டா CR-Vயை நினைவுப்படுத்துகின்றன. அலாய்வீல் கிடையாது என்பதால், 14 இன்ச் டயரும் காரின் தோற்றத்தைத் தூக்கிக்கொடுக்க உதவவில்லை.

பெலினோ, இக்னிஸ், ஸ்ஃவிப்ட் போன்ற பிற கார்கள் உருவாகும் அதே Heartect ப்ளாட்ஃபார்மில்தான் வேகன்-R-ம் தயாரிக்கப்படுகிறது. குறைவான எடை, அதே சமயம் க்ராஷ் டெஸ்ட்டில் பாஸ் செய்யக்கூடிய உறுதி ஆகியவை இதன் ப்ளஸ் பாய்ன்ட்ஸ்.

வேகன்-R-ல் இருந்த அதே பழைய 1.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் இப்போதும் உண்டு. என்றாலும் வேகன்-R, இப்போது 83bhp சக்தியைக் கொடுக்கக்கூடிய, 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் K12 இன்ஜினோடும் வந்திருக்கிறது. இதுதான் புதிய வேகன்-R-ன் முக்கியமான ஹைலைட்.

சக்தி கூடியிருந்தாலும் மாருதியின் அடையாளமான மைலேஜ் விஷயத்திலும் ஏமாற்றமில்லை. ARAI கணக்குப்படி லிட்டருக்கு 21.5 கி.மீ இதன் மைலேஜ். 1.0 லிட்டர், 1.2 லிட்டர்… எந்த இன்ஜினாக இருந்தாலும் 5 கியர்கள் கொண்ட AMT உண்டு. மேனுவல் கியர்பாக்ஸ் வேண்டும் என்பவர்களுக்கு அதுவும் கிடைக்கும்.

'ஏரிகளின் நகரம்' என்று அறியப்படும் உதய்ப்பூரில் வேகன்-R-ஐ ஓட்ட ஓடுபாதை போல இருக்கும் நேரான சாலைகள், திடீர் வளைவுகள், வானவில் போன்ற திருப்பங்கள் என்று சகலவிதமான பாதைகளும் உண்டு. வேகன்-R-ன் புதிய 1.2 லிட்டர் இன்ஜின், சகலவிதமான சாலைகளுக்கும் கை கொடுக்கிறது. இன்ஜின் வேகம் குறைவாக இருந்தாலும் சரி, மிட் ரேஞ்ச் என்றாலும் சரி… காருக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடுகிறது. 0 - 100 வேகத்தை 11.98 விநாடிகளில் இது தொட்டுவிடுகிறது. பழைய வேகன்-R-ஐவிடவும் 5 விநாடிகள் சீக்கிரம். 'ஒரு டன் எடையை இழுக்க - 100bhp சக்தி' என்ற பவர்-டு-வெயிட் விகிதம் செய்த மாயம் இது. 5,000 - 6,500 rpm-ல் இன்ஜினை இயக்கினால் சக்தியைவிட சத்தம்தான் அதிகமாக வருகிறது. இதற்கு இன்ஸுலேஷன் மட்டும் காரணமில்லை.

சில சமயங்களில் கியர்களை மாற்ற இரண்டாவது முறை முயற்சிக்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே மேனுவல் வேகன்-R-ஐ விடவும் AMT கொண்ட வேகன்-R மனதுக்குப் பிடித்தமான காராக மாறுகிறது. ஆனால் மேனுவல் கார் அளவுக்குச் சட்டென்று வேகம் எடுக்கவில்லை. 0 - 100 கி.மீ வேகத்தை எட்ட மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட காரைவிடவும், AMT கூடுதலாக சில விநாடிகள் எடுத்துக்கொள்கிறது.

வேகமாக ஓட்டும்போதும்கூட வேகன்-R ஆடாமல் அசையாமல் நிலைத்தன்மையோடு பயணிக்கிறது. சஸ்பென்ஷனிலும் நல்ல முன்னேற்றம். ஆனால் வேகங்களில் ஸ்டீயரிங் அமைப்பு கட்டளைகளை நிறைவேற்ற யோசித்துச் செயல்படுகிறது. அதனாலேயே நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற காராக இது இல்லை.

'தாராள இடவசதி’ என்ற கோணத்தில் பார்த்தால், வேகன் - R எடுக்கும் மதிப்பெண் 10/10. பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரது தோளோடு தோள் உரசாமல் உட்கார முடிகிறது. கூரையில் தலை இடிக்கவில்லை. கால்களை நீட்டி மடக்க முடிகிறது. சீட்டில் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட். பின்னிருக்கைகளில் மூன்றுபேர் கூட தாராளமாக உட்கார முடியும். டிக்கி இடவசதி இப்போது 341 லிட்டர். அதாவது, இரண்டு மடங்கு அதிகம். கேபினில் இருக்கும் க்ளோவ் பாக்ஸ், டோர் பாக்கெட்ஸ்கூட பெரிதுதான்.

கறுப்பு மற்றும் பீஜ் என இரண்டு வண்ணங்களில் இருக்கும் கேபின், அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் திருகுகள், பட்டன்கள் என எல்லாமே தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இக்னிஸில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல்தான் இதிலும். இருந்தாலும் காரின் வெளித்தோற்றம் கவர்ந்த அளவுக்கு, காரின் உள்ளலங்காரம் கவரவில்லை. புதிய 7 இன்ச் டிஸ்ப்ளே ஸ்க்ரீனின் தரம் சூப்பர். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளும் உண்டு.

வேல்ஸ் - படங்கள்: தி.குமரகுருபரன்

1.0 லிட்டர் வேகன்-R-க்கும் , 1.2 லிட்டர் வேகன்-R-க்கும் விலை வித்தியாசம் அதிகம் இல்லை என்பதால், பலரது தேர்வும் சக்தி வாய்ந்த 1.2 லிட்டராகத்தான் இருக்கும். காரின் உள்ளலங்காரம் மேலும் கவர்ச்சிகரமாக இருந்திருக்கலாம். 'மேம்படுத்தப்பட வேண்டும்' என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஸ்டீயரிங் சிஸ்டம். பிராக்ட்டிக்கலான இடவசதி கொண்ட கார் என்ற இதன் அடையாளம் மேலும் உறுதியாகி இருக்கிறது.