நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்... புதிய செயலி அறிமுகம்!

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்... புதிய செயலி அறிமுகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்... புதிய செயலி அறிமுகம்!

அருண் சின்னத்துரை, படம்: வீ.சதீஷ்குமார்

மிழ்நாடு அரசு அலுவலர் களுக்கானப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   இந்த ஆப்பை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பேசிய மதுரை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் மகேஷ் ஐ.பி.எஸ், ‘‘புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய வரம். குறிப்பாக, காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வேலை தொடர்பான சிக்கல் காரணமாக இதய நோய், சர்க்கரை நோய்  வந்துவிடு கிறது. திடீரென ஏற்படும் நோய்களைச் சரிசெய்ய புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உதவும்’’ என்றார்.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்... புதிய செயலி அறிமுகம்!

அவரைத் தொடர்ந்து பேசிய கருவூலக் கணக்குத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ், ‘‘அரசு ஊழியர்கள், ஓய்வூதியம்  பெறுபவர்கள் என சுமார் 52 லட்சம் பேர் இந்தத் திட்டத்தினால் பயன் பெறுவார்கள். ஏறக்குறைய ஆயிரம் மருத்துவமனைகள் இதில் இணைக்கப் பட்டுள்ளன. இந்த ஆப்பின்மூலம் மருத்துவமனை உள்பட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.

இந்த ஆப்பினை கூகுள் ப்ளே ஸ்டோரில் ஐ.ஓ.எஸ் மூலம் (TNNHIS 2016) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையைப் பெற்றவர்கள் தங்களின் அடையாள அட்டை எண் மூலம் (TNNHIS 2016) இந்த ஆப்பில் பதிவு செய்து பயன்பெறலாம்.