“இந்தியாவை மீட்போம் தமிழகத்தைக் காப்போம்! என்கிற முழக்கத்துடன் கோவையில் அரசியல் எழுச்சி மாநாட்டைக் கடந்த 27-ம் தேதி நடத்தியது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலாளர் கே.சுப்பராயன் தலைமை தாங்கினார். தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி, வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலில் பேசிய சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், “இந்த மாநாட்டை வ.உ.சி மைதானத்தில் நடத்த முதலில் சம்மதித்த அதிகாரிகள், பின்பு மேலிடத்து உத்தரவு என்று கூறி மறுத்துவிட்டார்கள். சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பதுபோல எடப்பாடி நினைக்கிறார். அரசு இடம் கொடுக்காவிட்டாலும் மாநாடு வெற்றிகரமாக நடக்கும். முதல்வரே நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்” என்றார்.

அடுத்துப்பேசிய கே.எஸ்.அழகிரி, “இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி சீரழித்திருக்கிறார். எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. செயல் திட்டம் இல்லாத அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி-யால் இந்த நாடு பின்னோக்கிச் சென்றிருக்கிறது. எந்தக் கொள்கையும் இல்லாத அ.தி.மு.க கூட்டணி துடைத்தெறியப்பட வேண்டும்” என்றார்.

திருமாவளவன் பேசுகையில், “நாட்டைக் காப்பாற்ற வேண்டிய, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம். இந்தக் கூட்டணிதான் இந்தியாவை மீட்கப்போகிற கூட்டணி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். பா.ம.க இந்தக் கூட்டணிக்கு வராததால், தமிழகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது’’ என்றார்.

பாலகிருஷ்ணன் பேசுகையில், “இந்தியாவைப் பாதுகாக்க நாங்கள்தான் இருக்கிறோம் என்கிறார் மோடி. 44 நான்கு வீரர்களின் உயிர் பறிபோனதற்கு யார் பொறுப்பேற்பது? பொதுமக்களை மட்டுமல்ல, ராணுவ வீரர்களுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் மோடியின் ஆட்சி. நாட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மோடி ஆட்சி விரட்டப்பட வேண்டும். ‘என்னை முதல்வராக்கினால், டாஸ்மாக்கை மூடுவதற்கு முதல் கையெழுத்துப் போடுவேன்’ என்று ஒருவர் முன்பு கூறினார். அவரோ, இப்போது அ.தி.மு.க-வுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டார். இனி அவர், டாஸ்மாக் பக்கத்திலேயே பக்கோடா கடை நடத்துவதற்குக் கையெழுத்துப் போட வேண்டியதுதான்” என்று பா.ம.க-வைச் சீண்டிவிட்டு அமர்ந்தார்.

அடுத்துப்பேசிய மு.க.ஸ்டாலின், “எனக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ள பந்தத்துக்கு என் பெயரே சான்று. திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால், தலைவர் கலைஞர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருப்பார். திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் வேறு வேறு கிடையாது. ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கலைஞர் ஆட்சியே சான்று. ஓர் ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மத்தியில் உள்ள மோடி ஆட்சியும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி ஆட்சியும் சிறந்த சான்றுகள்” என்று சாடினார்.

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: தி.விஜய்