நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் வீடுகளின் விலை இறங்க வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகி உள்ளது. இந்தச் சமயத்தில், வீடு வாங்க சரியான நேரமா என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருப்பதால், அதற்கான பதிலைப் பார்ப்போம்.

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

ஜி.எஸ்.டி குறைப்பு

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட்டத்தைக் கருத்தில்கொண்டு, சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப் பட்டன. சொகுசு வீடுகளுக்கு ஜி.எஸ்.டி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகித மாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான (afforadable price) வரி 8 சதவிகிதத் திலிருந்து 1 சதவிகிதமாகவும் இந்த கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு பிரிவுக்கும் ஏற்கெனவே இருந்த உள்ளீட்டு வரிக் (Input credit tax) கழிப்பு 18%  இனிமேல் கிடையாது என கவுன்சில் தெரிவித் திருக்கிறது. இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை யானது, 2019 ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டி ருக்கும் கட்டடங்கள் மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட வீடுகளை வாங்குபவர்களுக்கும் ஜி.எஸ்.டி இல்லை.  

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

வீடுகளுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைத்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும், உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெறுவதை முற்றிலும் நீக்கியிருப்பது பில்டர்களின் லாபத்தைக் குறைத்து, பாதிப்பை ஏற்படுத்துவதாக  இருக்கிறது.

ஓர் உதாரணக் கணக்கு

வீட்டுக் கட்டுமானம் மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து, ஒரு சதுர அடிக்கு ரூ.3,500 ஆகிறது என வைத்துக் கொள்வோம். அதில், மனை விலை மற்றும் பில்டர் லாபம் சேர்த்து ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்படுவதாகவும் வைத்துக்கொ வோம். இதற்கு 12% ஜி.எஸ்.டி என்றால், 600 ரூபாய் ஆகும். ஆகமொத்தம், ரூ.5,600 ரூபாய் ஆகும்.

அரசாங்கத்துக்குச் செலுத்தவேண் டிய வரி 600 ரூபாய் என்பதால், வீடு வாங்குபவர்களிடமிருந்து அந்த 600 ரூபாயை மட்டும் அதிகமாகப் பெற வேண்டியிருக்கும்.

வரும் ஏப்ரல் 1-ம் தேயிலிருந்து அறிமுகப்படுத்தப் படவுள்ள உள்ளீட்டு வரிக் கழிப்பு முறையை விலக்கிவிட்டு, 5% ஜி.எஸ்.டி முறைப்படி, 3,500 ரூபாயுடன் கட்டுமானச் செலவு, ஜி.எஸ்.டி (கட்டுமானப் பொருள்கள் மீதான உள்ளீட்டு வரி 18% (சம்பளம், லாபம் மற்றும் வட்டி ஆக்கியவற்றுக்கு உள்ளீட்டு வரிக் கழிப்பு கிடையாது) சுமார் ரூ.550 சேர்ந்து ரூ.4,050 ஆகும். அப்போது மனையின் விலை, பில்டரின் லாபம் அனைத்தும் சேர்ந்து விற்பனை விலை ரூ.5,550  ஆகும். இந்தத் தொகைக்கு 5% ஜி.எஸ்.டி வரி எனில், ரூ.277.50 வரும். ஆக, மொத்தத்தொகை ரூ.5,827.50 ஆகும். 

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

முன்பிருந்த முறைப்படி ஒரு சதுர அடிக்கு ரூ.5,600 எனவும், தற்போதைய முறைப்படி ரூ.5,827.50 எனவும் வருகிறது. இதனால் அரசுக்கு வரி வருமானம் முன்பைவிட, ரூ.227.50 அதிகம் கிடைக்கிறது. இந்த வரி வீடு வாங்குபவர்களிடமிருந்து பெறப்படும். ஆக, உள்ளீட்டு வரிக் கழிப்பு முறையை நீக்கிவிட்டு,         ஜி.எஸ்.டி வரியை 12 சதவிகிதத்தி லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கும் செயல்திட்டமானது வீட்டின் விலை உயர்வதற்கே வழிவகுக்கும். ஜி.எஸ்.டி முறையால் விளையும் அடிப்படை நன்மையாகக் கூறப்படும் விலைக் குறைவு மற்றும் வரிச் சீரமைப்பு போன்றவை  இதனால் கேள்விக் குறியாகின்றன. அதுமட்டுமல் லாமல், முன்பு இருந்த வரி முறையில், நிலத்துக்கு வரி கட்டத் தேவையில்லை. ஆனால், இப்போது கொடுத்திருக்கும் 5% வரியில், நிலத்தின் மீதான வரியும் சேர்ந்துதான் வருகிறது.

மேலும், சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குறைந்த விலை வீட்டை ஒருவர் வாங்குவ தாக எடுத்துக்கொள்வோம். இதற்கு முந்தைய குறைந்த விலை வீட்டின் மீதான ஜி.எஸ்.டி வரி 8 சதவிகிதத்தின்படி, அரசாங் கத்துக்குக் கட்டவேண்டிய ரூ.1.60 லட்சம் வரிப்பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.21.60 லட்சம் வீடு வாங்குபவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

ஜி.எஸ்.டி வரி 8 சதவிகிதத்தி லிருந்து ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்பட்டாலும், அதற்கு உள்ளீட்டு வரிக் கழிப்பு இல்லாததால், ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டின் கட்டுமானப் பொருள்கள்மீதான உள்ளீட்டு வரி ரூ.1.60 லட்சம்  (சம்பளம், லாபம் மற்றும் வட்டி ஆகியவற்றுக்கு உள்ளீட்டு வரிக் கழிப்பு கிடையாது) ஆகும்.  ஆக மொத்தம், ரூ.21.60 லட்சத்துக்கு 1% ஜி.எஸ்.டி வரி ரூ.21,600 சேர்த்து மொத்தம் ரூ.21.81 லட்சமாக வீடு வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

ஆக, சொகுசு வீடாக இருந்தாலும், குறைந்த விலை வீடாக இருந்தாலும், அரசுக்கு அதிக வரி கட்ட வேண்டியிருப்பதால், வீட்டின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது.

ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்தால்,  வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்பதை மத்திய அரசாங்கம் அடிக்கடி சொல்லி வந்தது.  ஆனால், உள்ளீட்டு வரிக் கழிப்பு முறை நீக்கப் பட்டிருப்பதால், ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் இனி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. 

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

உள்ளீட்டு வரிக் கழிப்பு இனி இல்லை என்பதால், வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டுக்கான விலை அதிகரிக்கத்தான் செய்யும். ஏனெனில், வீடு கட்டுவதற்குத் தேவைப்படும் சிமென்ட், ஜல்லி, கம்பிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருள்களுக்கான வெவ்வேறு வகையான ஜி.எஸ்.டி வரியும் வீட்டின் விலையுடன் சேர்வதால், வீட்டின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புண்டு என்பது பெரும்பாலான பில்டர்களின் கருத்தாகும்.

வீட்டின் விலை மேலும் அதிகரிக்கும்


ஜி.எஸ்.டி வரிக் குறைப்பினால் வீட்டின் விலை குறைந்து, வாங்குவதற்கு ஏற்ற நேரமா என நவீன்ஸ் ஹவுஸிங் நிறுவனத்தின் தலைவர்       ஆர்.குமாரிடம் கேட்டோம்.

``நீண்ட நாளாக நாங்கள் கேட்டுவந்த விஷ யத்தை ஜி.எஸ்.டி கவுன்சில் இப்போது நிறைவேற்றி யிருக்கிறது. ஆனால், உள்ளீட்டு வரிக் கழிப்பைத் திரும்பப் பெற்றிருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.

ஆனால், இந்த நடவடிக்கையால் வெளிப்படைத்தன்மை முற்றிலுமாகப் பாதிக்கும். உள்ளீட்டு வரிக் கழிப்பு 18% மற்றும் வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12-லிருந்து 5 சதவிகிதமாகக் குறைப்பு என்ற முறையை அமல்படுத்தி யிருந்தால், நிச்சயமாக இதன்மூலம் மக்கள் பெரும் நன்மையைச் சந்தித் திருப்பார்கள். அப்படிச் செய்யாமல், அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகப்படுத்தும் நோக்கில்தான் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. ஆகையால், வீடு வாங்க நினைப்பவர்கள் வருகிற ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாகவே வாங்குவது புத்திசாலித் தனம்” என்றார்

தேக்கம் முடிவுக்கு வரும்

தமிழ்நாடு ஃப்ளாட் மற்றும் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணிசங்கர் பேசியபோது, ``பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்குபவர்களுக்கு ரூ.2.67 லட்சம் சலுகை வழங்கப்பட்டது. தற்போது ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்குபவர்களுக்கும் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது, புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். அது மட்டுமல்லாமல், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஒருவர் வாங்கும் இரண்டாவது வீட்டுக்கும், அதன் மீதான கடனுக்கும் வரிச் சலுகை உண்டு என்பதும் வீடு வாங்குபவர் களுக்கு ஊக்கமளிக்கும் விஷயம். அதனுடன், கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு 12-லிருந்து 5% ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு என்பதும், முடங்கிக் கிடந்த வீட்டின் விற்பனையை அதிகப்படுத்தும்.

ஏற்கெனவே கட்டி விற்பனையாகாத வீடுகள்,  விற்கத் தொடங்கும்போது ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்துவந்த தேக்கம் முடிவுக்கு வரும்” என்றார்

ஆக, வீடுகளின் விலை குறையாது என்றாலும்,  இந்த அறிவிப்புக்குப்பின் வீடுகளின் விற்பனை அதிகரிக்கும் என இந்தத் துறை சார்ந்தவர்கள் கருதுகிறார்கள். எனவே, முதலீட்டு நோக்கில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணம் கிடையாது. ஏனெனில், அதிகமான வீடுகள் விற்பனையாகும்போது, அந்த இடத்தில் வாடகை வருமானம் குறையவே வாய்ப்புகள் அதிகம். வருமான வரிச் சேமிப்பு, சொந்தப் பயன் பாட்டுக்கு வீடு தேவை என்கிறவர்கள் இப்போது வீடு வாங்கலாம்!

செ.கார்த்திகேயன் 

குறைந்த விலை வீடுகள்: வரையறை மாற்றம்!

ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடுகளே `குறைந்த விலை வீடுகள்’ என்று இதுவரை வரையறுக்கப்பட்டன. இனிமேல், மெட்ரோ நகரங்களிலும், பிற நகரங்களிலும் ரூ.45 லட்சம் வரை இருக்கும் வீடுகள் குறைந்த விலை வீடுகளாகக் கருதப்படும். அதேசமயம் சென்னை, பெங்களூரூ, டெல்லி என்.சி.ஆர், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களில் சுமார் 650 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளும், பிற நகரங்களாக இருந்தால் சுமார் 970 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளும் குறைந்த விலை வீடுகளாகக் கருதப்படும். உதாரணத்துக்கு, சென்னை வேளச்சேரியில் 650 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை ரூ.45 லட்சம் கொடுத்து வாங்கினாலும், சென்னையின் புறநகரில் இருக்கும் செங்கல்பட்டில் 970 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை ரூ.30 லட்சம் கொடுத்து வாங்கினாலும் குறைந்த விலை வீடுகள் என்கிற வரையறைக்குள்தான் வரும். 

ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?

என்ன செய்திருக்கலாம்?

* ஏற்கெனவே இருந்த உள்ளீட்டு வரிக் கழிப்பு 18 சதவிகிதத்துடன், வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியை ஐந்து சதவிகிதமாகக் குறைத்திருக்கலாம். இப்படிச் செய்திருந்தால் வரிச் சீரமைப்புடன், வீடுகளின் விலையும் குறைந்திருக்கும். இதனால் வீடு வாங்குபவர்கள் நேரடியாகப் பயனடைந்திருப்பார்கள்.

* இன்றைய நிலையில், வீட்டின் கட்டுமானத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கக்கூடிய மணல் தட்டுப்பாடு தொடர்பான பிரச்னையைத் தீர்க்க மாநில அரசுக்கு உதவுகிற மாதிரி மத்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். இயற்கை வளங்களில் இன்றியமையாத ஒன்றான மணல் எடுப்பதை முற்றிலுமாகத் தடை செய்துவிட்டு, அதற்கு மாற்றாக வந்திருக்கும் எம்.சாண்ட் மணலை ஊக்குவிக்கலாம்.  எம்.சாண்ட் மணலின் விலை உள்ளூர் மணல், இறக்குமதி செய்யப்படும் மணலின் விலையைவிட மிகவும் குறைவு என்பதால், கட்டுமானப் பணிகளுக்கு ஆகும் செலவுகளின் பெரும்பகுதியை மிச்சப்படுத்த முடியும். இதனால் வீடு வாங்குபவர்கள், சொந்தமாக வீடுக் கட்டுபவர்கள் என எல்லோரும் பயன்பெறுவார்கள்.

* அதேபோல, சிமென்ட் விலை ஏற்றத்திலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சிமென்ட் விலை குறையும் என்ற பேச்சு அடிபடும்போதெல்லாம், அதற்கு எதிர்மாறாக சிமென்ட்  விலை உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சிமென்ட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விலை நிர்ணயம் இருப்பதால், ஆந்திரா, கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களில் விற்கப்படும் சிமென்ட் விலையைவிட, தமிழ்நாட்டில் விற்கப்படும் ஒரு மூட்டை சிமென்டின் விலை சுமார் 60% அதிகம். இந்த நிலையில், அதற்கான உள்ளீட்டு வரிக் கழிப்பு 18 சதவிகிதத்தை நீக்குவது அர்த்தமற்றச் செயலாகத் தெரிகிறது.