நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!

பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!
பிரீமியம் ஸ்டோரி
News
பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!

ராகேஷ் வாத்வா,செயல் துணைத் தலைவர் (ஸ்ட்ராட்டஜி அண்டு ரீடெய்ல் அஸ்ஷூரன்ஸ்), ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா லைஃப் இன்ஷூரன்ஸ்

ணியிடங்களில் மேலாதிக்கம் செலுத்துமளவிற்குப் பெண்கள் நிலை உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில், குடும்பத்தை வெற்றி கரமாக நடத்திச் செல்வதில் கணவருடன்  இணைந்தோ அல்லது தனித்தோ சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருந்தபோதிலும், வங்கி வைப்புநிதி, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதித் திட்டங்களில் பெண்கள் முதலீடு செய்யும் அளவுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி அவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.    

பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!

நிதிப் பாதுகாப்பு

ஆயுள் காப்பீடு எடுப்பதன் முக்கிய அம்சம், பாலிசிதாரரின் எதிர்பாராத மரணம், பண ரீதியில் அன்பிற்கு உரியவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. வேலை பார்க்கும் பெண்கள் அவர்களின் வயது, பணி ஆகியவற்றுக்கேற்ப பொருத்தமான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பதுபோல், தங்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினரை நிதி விஷயத்தில் பாதுகாக்க முடியும். 

உங்களுடைய பெயரில் அடமானக் கடனோ, வேறு  கடனோ இருக்குமென்றால், முதல் வேலையாக அந்தத் தொகைக்கு இணையாகக் கூடுதல் தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். அப்போதுதான் உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்,  அந்தச் சொத்தினைப் பாதுகாக்க முடியும். 

தம்பதிக்கு பாலிசி

ஒரு குடும்பத்தில் இருவர் வேலை பார்க்கும் பட்சத்தில், இருவரில் ஒருவரின் இழப்புகூட குடும்பத்தின் நிதித்தேவையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அதனால் தம்பதி இருவரும் வேலை பார்க்கும்பட்சத்தில், இருவரும் தனித் தனியே டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது அவசியம்.

மனைவியானவர் கணவருடன் இணைந்தோ அல்லது தனியாகவே டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது கட்டாயம். உங்களுக்கு அல்லது உங்கள் கணவருக்கு, பணிபுரியும் நிறுவனம் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்தாலும்கூட, அது குடும்பத்தின் நிதி ஆதாரத்தைப் பாதிக்கும். 

கவரேஜ் தொகை


ஆயுள் காப்பீட்டு பாலிசியின் கவரேஜ் தொகையானது உங்களுடைய வாழ்க்கைத் தரம், நிதித் தேவைகள், கடன்களைப் பொறுத்து அமைய வேண்டும்.  பொதுவாக, ஆயுள் காப்பீட்டு கவரேஜ் தொகையானது, உங்களுடைய கடன் உள்ளிட்டவற்றைக் கட்டியதுபோக, குடும்பத்தின் நிதி ஆதாரம் எப்போதும்போல் தொடர்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். 

பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென் றால், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள், ஆண்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த பிரீமியத்தில் கிடைக்கிறது. மேலும், எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும் இந்தப் பாலிசியை வாங்க முடியும். பிரீமியத்தை மொத்தமாக அல்லது மாதத் தவணையாகக் கட்டி வரலாம்.

இழப்பீடு

பாலிசி மூலமான இழப்பீடு என்கிறபோது மொத்தத் தொகை மற்றும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் இணைந்த திட்டமே பாலிசிதாரரின் குடும்பத்தினரின்  வாழ்க்கைத்தரத்தில் எவ்விதக் குறையும் இல்லாமல் இருப்பதற்கான நல்ல தேர்வாக இருக்கும்.

புகைபிடிக்கும் பழக்கமில்லாத 30 வயது பெண்ணுக்கு 75 வயது வரை டேர்ம் பிளான்    ரூ.50 லட்சம் கவரேஜுக்கு எடுக்க ஆண்டுக்கு ரூ.5,000 என மிகக் குறைவான தொகைதான் பிரீமியம். இதை நாள் கணக்கில் சொல்வதானால், ஒரு நாளுக்கு ரூ.14. இந்தத் திட்டங்கள் ஆன்லைனிலும் கிடைக்கின்றன. நீங்கள் எளிதாக உங்களுடைய வசிப்பிடத்தில் இருந்தபடியே எடுக்க முடியும். 

உடல்நலக் கோளாறுகளுக்கு எதிரான பாதுகாப்பு


இந்தியப் பெண்கள் மத்தியில், இளம் வயது மரணம், தொற்று நோய்கள், வாழ்வியல் முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கக் கோளாறுகளால் வரும் நோய்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம்  வெளியிட்டுள்ள உலகளாவிய புள்ளிவிவரங் களின்படி, ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும், ஐந்து லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும் இறக்கிறார்கள். இவற்றுக்கான சிகிச்சை, நீண்ட காலத்திற்கானதாக இருப்பதுடன், அதிக செலவு பிடித்ததாகவும் இருக்கிறது. 

பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!

எங்கள் ஆய்வின்படி, இத்தகைய சிகிச்சைக்கான செலவால் பெரும்பாலானவர்களின் சேமிப்புகள் பெரிதும் சரிவடைகின்றன. எனவே, விரிவான ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் கிரிட்டிகல் இல்னஸ் கவரேஜ் கொண்ட பாலிசிகளைப் பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

இந்தியாவிலுள்ள ஆயுள் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவச் செலவுகள், தீவிர நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகள், அறுவைசிகிச்சைக் கட்டணங்களை உள்ளடக்கிய பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன.

ஹெல்த் பாலிசி மூலம் கிடைக்கும் சலுகைகள், எந்தெந்த நோய்களுக்கான சிகிச்சைச் செலவு களுக்கு இழப்பீடு கிடைக்கும், பாலிசிதாரருக்கு வருமான இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்குமா என்பது போன்ற விஷயங்களைக் கவனித்து பாலிசி எடுப்பது அவசியம்.

வரிச் சேமிப்பு

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு கட்டும் பீரிமியம்  (80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்), ஆரோக்கிய காப்பீடு பாலிசிக்குக் கட்டும் பிரீமியம் (80டி-ன்கீழ் ரூ.25,000) ஆகியவற்றுக்கு வரிச் சலுகை பெறலாம்.  ஓய்வுக்காலம் எவ்விதக் கவலையும் இல்லாமல் இருப்பதையே பலரும் விரும்புகிறோம். சரியாக  முதலீடு செய்வதன்மூலம் ஓய்வுக்காலத்தில் நிதித்தேவைக்காக யாரையும் சாராமல் இருக்க முடியும்.  

வில்லங்கமில்லாத சொத்தை எம்.டபுள்யூ.பி மூலம் உறுதிசெய்தல்

திருமணமான பெண்களுக்கான சொத்து (Married Woman Property - MWP) சட்டம், கணவரின் மரணத்திற்குப்பின் அவரது மனைவிக்கு  (பிள்ளைகள்) க்ளெய்ம் செய்வதற்கான உரிமையை அளிக்கிறது. இந்த க்ளெய்ம் தொகையை, கடன் வாங்கியவர்கள் பெற முடியாது. இன்ஷூரன்ஸ் பாலிசியை எம்.டபுள்யூ.பி சட்டத்தின்படி வாங்கி யிருந்தால் உறவினர்கள் மட்டுமல்ல, பாலிசி தாரருக்கு  யார் கடன் தந்திருந்தாலும், அவர்களால் க்ளெய்ம் பணத்தில் கைவைக்க முடியாது. இது குறிப்பாக கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அல்லது வியாபாரக் குடும்பத்திற்குப் பொருந்தக் கூடியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பதாக இருந்தாலும் அதைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு எடுப்பது அவசியம்!

தமிழில்: தெ.சு.கவுதமன்