தமிழக ரியல் எஸ்டேட் சமீப காலமாக சோம்பலிலிருந்து விடுபட்டு, செயல்பட ஆரம்பித்தி ருக்கிறது. கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இரண்டாவது வீட்டுக்குச் சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது, வீடுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அண்மையில் குறைக்கப்பட்டது போன்றவை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் எந்தமாதிரியான அடுக்குமாடி வீடுகளுக்கு அதிக தேவை இருக்கிறது என ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் (Anarock) சர்வே செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த சர்வேயின்படி, சென்னை நகரத்தில் ரூ.40 லட்சத்துக்குக்கீழ் உள்ள ஃப்ளாட்டு களுக்கான தேவை 22 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே, ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் விலை உள்ள வீடுகளுக்கான தேவை 57 சதவிகிதமாக உள்ளது.

பெங்களூரு நகரத்தை எடுத்துக்கொண்டால், ரூ.40 லட்சத்துக்குக்கீழ் உள்ள வீடுகளுக்கு 50%, ரூ.40-80 லட்சம் விலை உள்ள வீடுகளுக்கு 32% தேவைப்பாடு உள்ளது. இந்தியாவின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது, சென்னைவாசிகள் கொஞ்சம் வசதியானவர்களாகவே தெரிகிறார்கள்!

சி.சரவணன்