Published:Updated:

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...
பிரீமியம் ஸ்டோரி
செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

Published:Updated:
செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...
பிரீமியம் ஸ்டோரி
செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

2018-ம் ஆண்டு, செஸ் விளையாட்டில் இந்தியா பல சாதனைகளை நிகழ்த்தியது. ஒரே ஆண்டில், இந்தியாவில் இருந்து 5 இளம் செஸ் வீரர்கள், ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று அசத்தினர். அதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயதேயான பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டரானார். இந்தச் சுட்டி ஜீனியஸின் சாதனையைக் கொண்டாடித் தீர்ப்பதற்குள், சென்னையைச் சேர்ந்த மற்றுமொரு இளம் வீரர் பிரக்ஞானந்தாவின் சாதனையை முறியடித்தார்.

2019 ஜனவரி, டெல்லியில் நடைபெற்ற இண்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெற்ற குகேஷ், பிரக்ஞானந்தாவைவிடவும் மூன்று மாதங்கள் இளையவர். சவாலான பல கட்டங்களைத் தாண்டி, 2500 புள்ளிகளை எட்டிய குகேஷ், இப்போது உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்!

செஸ்ஸில் அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த இரண்டு கிராண்ட்மாஸ்டர்ஸை பேட்டி எடுக்க திட்டமிட்டோம். அவர்களிடம் பேசினோம். ‘உங்க இன்ஸ்பிரேஷன் யார்?’ என்ற வழக்கமான கேள்விக்கு, இருவரின் பதில்களிலும் இருந்த ஒற்றுமை, “விஷி சார் மாதிரி ஆகனும்!” நாட்டின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர், ஐந்து முறை உலக சாம்பியன், தேசிய அளவில் தொடர்ந்து நம்பர் 1 என இந்தியாவில் செஸ் விளையாட்டின் ஆரம்பப் புள்ளி, விஸ்வநாதன் ஆனந்த். இளம் வீரர்களின் இன்ஸ்பிரேஷன்.

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

ஜூனியர்களைக் கிளப்புக்கொண்டு விஸ்வநாதன் ஆனந்த் வீட்டுக்குள் நுழைந்தோம்.  ‘‘மூன்று ஜி.எம்ஸ் ஒரே இடத்தில். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வாங்க.. வாங்க...” என்று புன்னகையோடு நம்மை வரவேற்றார் அருணா ஆனந்த். ஹாலில் இரண்டு நிமிடம் காத்திருப்புக்குப் பிறகு, பயிற்சி அறைக்குள் சென்றோம். கோப்பைகளும், பதக்கங்களும் நிறைந்திருந்த அறைக்குள் ஒரு செஸ் போர்டும், மூன்று கிராண்ட் மாஸ்டர்களும். இடைவெளியின்றி செஸ் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர்களிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ‘‘ஹலோ வெல்கம்... இந்த கேம் முடியப் போகுது. ப்ளீஸ் வெயிட்” என்றார் ஆனந்த். கிப்ரால்டர் தொடரின் போது குகேஷுக்கு வந்த சந்தேகத்தை விவாதித்துக் கொண்டிருந்தனர். கேம் முடிந்தவுடன் பேசத் தொடங்கினர்.

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

‘‘1988-ல் கிராண்ட் மாஸ்டரானது முதல் விஸ்வநாதன் ஆனந்த்தான் இந்தியாவில் நம்பர் 1. சர்வதேச அளவிலும் டாப் 10-ல்  தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். இப்படி கன்சிஸ்டன்ட்டாக இருப்பதன் ரகசியம் என்ன?’’

‘‘செஸ்ஸில் கன்சிஸ்டன்ட்டாக இருப்பதற்கு முக்கிய காரணம், பயிற்சி. சரியான இடைவெளி, திட்டமிட்ட பயிற்சி முறைகளை பின்பற்றுவேன். விளையாட்டின் நுணுக்கங்களை அப்டேட் செய்வது அவசியம். என்னுடைய கேம் ப்ளான் மட்டுமின்றி, எதிரே விளையாடுபவரையும் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பது மகிழ்ச்சி. 12 வயதிலேயே பெரிய இலக்கை அடைந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் கையில் உள்ளது இந்திய செஸ்ஸின் எதிர்காலம்.’’

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

‘‘இது கம்ப்யூட்டர்களின் காலம். Artificial Intelligence-ன் வளர்ச்சி சிஸ்டம் டு சிஸ்டம் போட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. மேன் டு மேன் போட்டிகளில் இருந்து மேன் டு சிஸ்டம். இது சாதகமா பாதகமா?’’

‘‘செஸ் விளையாட்டில் கம்ப்யூட்டர்களின் தாக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியது. ஆனால், மேன் டு மேன் விளையாட்டுகளை பார்க்கவே மக்கள் விரும்புவார்கள். ஒரு கம்ப்யூட்டருக்கு எதிரானப் போட்டி உயிரோட்டமாக இருக்காது. மேன் டு சிஸ்டம் வளர்ச்சி செஸ் விளையாட்டுக்கு பாதகமாக இருக்காது. சொல்லப்போனால், சிஸ்டமில் விளையாடும் போது சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ள முடியும். சிஸ்டம் டிப்ஸ் ரொம்ப ஓப்பன். இதே நுணுக்கங்களை மற்றவர்களும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே, கம்ப்யூட்டரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, மேன் டு மேன் விளையாடும்போது கிடைக்கும் அனுபவமே சவாலான போட்டிகளை எதிர்கொள்ள உதவும்.’’

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

‘‘2018 உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது, `இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தால், உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பில் நான் விளையாடும் கடைசிப் போட்டியாக இருந்திருக்கும்’ என்றார் கார்ல்சன். 28 வயதில் கார்ல்சனுக்கு ஏன் இந்த அழுத்தம்?’’

‘‘செஸ் விளையாட்டு வீரர்களுக்கு, போட்டி தொடங்குவதற்கு முன்பைவிட போட்டி முடிந்தபின் இருக்கும் அழுத்தமே அதிகமானது. ஏன் இந்த தவறு, இப்படி விளையாடி இருந்தால் சாம்பியனாகி இருக்கலாம் போன்ற எண்ணங்கள் மன அழுத்தம் தரும். அதனாலேயே, கார்ல்சன் தோல்வியடைவதை விரும்பி இருக்க மாட்டார். மேலும், அந்தப் போட்டியில் ஃபேபியானா கருணாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.  இறுதி போட்டியை எதிர்கொள்ள தயாராக வந்தார். இளம் வீரர்களுக்கு இந்த மனநிலை தேவையானது.’’

செஸ் போர்டும் - மூன்று கிராண்ட் மாஸ்டர்களும்...

‘‘குகேஷ், பிரக்ஞானந்தா பற்றி..’’

‘‘பெரிய இலக்கை (கிராண்ட்மாஸ்டர்) விரட்டிச் சென்று இளம் வீரர்கள் சாதனைப்படைத்துள்ளனர். இப்போது இவர்களுக்கு ஓய்வு தேவை. விளையாட்டின் நுணுக்கங்களை ஆராய்ந்து, கிராண்ட்மாஸ்டருக்கான ஆட்டத்தை தொடங்க வேண்டும். ஆர்வமிருக்கும்போது மட்டுமே செஸ் விளையாட வேண்டும். ஆர்வமில்லாதபோது கட்டாயமாக பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வயதில் பிரக், குகேஷ் எட்டியிருப்பது பெரிய உச்சம். செஸ் விளையாட்டில் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஐ அம் ஹாப்பி!’’

15 நிமிட உரையாடலுக்கு பிறகு, மீண்டும் செஸ்ஸில் மூழ்கினார்கள் கிராண்ட் மாஸ்டர்ஸ்!

- கார்த்திகா ராஜேந்திரன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்