Published:Updated:

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்... ஆச்சர்யப்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் தொழிலதிபர் ரூபன் சிங்!

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்... ஆச்சர்யப்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் தொழிலதிபர் ரூபன் சிங்!
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்... ஆச்சர்யப்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் தொழிலதிபர் ரூபன் சிங்!

நம் அன்றாட வாழ்வில்,  சிலர் ஆடைக்கு மேட்சாக ஷூ( shoe) க்களை அணிவதுண்டு அல்லது  கடிகார பட்டையை  அணிவதைக் கண்டிருப்போம். ஆனால், ஆடைக்கு மேட்சாகவிலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக் குவிக்க உள்ளார் ஒருவர். அது வேறுயாருமல்ல இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் பணக்காரர் ரூபன் சிங்( Reuben singh ).

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்... ஆச்சர்யப்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் தொழிலதிபர் ரூபன் சிங்!

Photo credit : Facebook/Reuben singh

யார்  இந்த ரூபன் சிங்?

'ஐரோப்பாவின் பில்கேட்ஸ்' என அழைக்கப்படும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து  வாழ் தொழிலதிபர்தான் இந்த ரூபன் சிங். இவர்,  தனது  miss attitude எனப்படும்   fashion retail chain ஐ அமெரிக்க தொழிலதிபரான  Klesch-குக்கு விற்றார். அதிலே, 45 மில்லியன்  யூரோவை தனது  22 வயதிலேயே  சம்பாதித்துப் பெரிய பிரபலமானவர்  இந்த ரூபன் சிங். இவருக்கு  துணிகள், வேகமாக ஓடும் கார்கள்  மற்றும் நிறுவனங்களின்மீது  அளவில்லா காதல். மேலும், இவர் பல  நிறுவனங்களுக்கு இயக்குநராகவும்  பங்குதாரராகவும் பங்காற்றி வருகிறார். இங்கிலாந்து பிரதமர்  Tony blair ஆணைக்கேற்ப, இங்கிலாந்து  நாட்டின் சிறு வணிகத் துறையின்  அரசு ஆலோசகராகப்  பணியாற்றியுள்ளார். மேலும், 1998-ம்  ஆண்டு 'தானாக உருவான ( selfmade ) இளம் மில்லினர்' என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார் இவர். கால் சென்டர்  நிறுவனத்தை (alldayPA) நிறுவி, அதன் முதன்மை செயல் அதிகாரியாகப் பணியாற்றிவந்தபோது, 2005-ம்  ஆண்டு  மிகப்பெரிய  சரிவைச்  சந்தித்து, அது தொடர்ந்து வந்த நிலையில், 2015-ம்  ஆண்டு தனது  கடின  முயற்சியால் மீண்டும் மீட்டெடுத்து, தற்போது 100 வேலையாட்களுடன் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. தற்போது இவர், தனியார்  முதலீடு  மேலாண் நிறுவனத்தை ( private equity firm- invesment management company-'sher Capita' ) நடத்திவருவது  குறிப்பிடத்தக்கது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்... ஆச்சர்யப்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் தொழிலதிபர் ரூபன் சிங்!

"யாரையும் துன்பப்படுத்தாமல் எப்போதும் சிரிப்போம். நமக்குப் பிடித்ததை எப்போதும் செய்வோம்" என்னும் கூற்றை எப்போதும் மனதில் வைத்து  வாழ்ந்துவரும் இவருக்கு, கார்  என்றால்  அவ்வளவு  பிரியம். தனக்குப்  பிடித்த கார்  ரகங்களை  உடனே வாங்கிவிடும் இவருக்கு, தற்போது ரோல்ஸ் ராய்ஸ் ரகங்களின்மீதும் காதல் வந்துள்ளது  என்றே  சொல்லலாம்.10 மில்லியன்  அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்ட கார்களை ஆர்டர்  செய்துள்ளார் இந்த ரூபன் சிங். ரூபி ( ruby ), சஃபையர் ( sapphire), எமரால்டு ( emerald)  கலர்களில் வாங்க உள்ளார். மேலும், இந்த கார்களை  ரூபி சிங்கின் வீட்டுக்கே  வந்து தரவுள்ளார், ரோல்ஸ் ராய்ஸ்  நிறுவனத்தின்   CEO வான  Torsten Muller- otvos. தனது வாகனக் கொட்டகையில் படை போல அணிவகுத்துக்  காத்திருக்கின்றன இந்த 20 ரோல்ஸ் ராய்ஸ்  கார்கள். புதிதாக  வாங்கிய  ஆறுடன் சேர்த்து,  இவரிடம்  Bugatti veyron (புகாட்டி வெய்ர்ன்),  porche 918 spyder (போர்ச்சே 918 ஸ்பைடர் ),  pagani huayara (பகானி ஹயூரா ),  லம்போகினி குரக்கன் போன்ற ஃபேமஸ்  கார் ரகங்களும்  உள்ளன. மேலும், ஃபெர்ராரி  F12 பெர்லினிட்ட ( Ferrari F12 Berlinetta) என்னும் ரகம் உலகத்திலேயே இவரிடம் மட்டுமே  உள்ள சிறப்பான  ரகமாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்... ஆச்சர்யப்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து வாழ் தொழிலதிபர் ரூபன் சிங்!

தற்போதுள்ள வாழ்க்கைச்சூழலில்,  பலருக்கு  கார்  என்பது எளிதில்  வாங்கக்கூடியதாக இருந்தாலும்  ரோல்ஸ் ராய்ஸ் , ஃபெர்ராரி போன்ற  கார்கள் எட்டாக்கனியாகவே  உள்ளது. தமிழகத்தில் உள்ள  உச்ச நடிகர்கள் மற்றும் மிகப் பெரிய தொழில் ஜாம்பவான்கள் மட்டுமே  வைத்துள்ள இந்த ரக கார்களை  நாம்  பொது வெளியில் காண்பதே அரிது. இந்த  இளம் தொழில் அதிபர் ரூபன் சிங் ரோல்ஸ் ராய்ஸ்  ரகங்களைப் பல வண்ணங்களில்  வாங்கிக் குவித்துள்ளது  ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளது.