Published:Updated:

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

Published:Updated:
ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

தென் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு தொழிலானது தலைமுறை தலைமுறையாகச் செய்யப்பட்டு வருவதை பல நகரங்களில் பார்க்கலாம். நூறு ஆண்டுகளைக் கடந்து, மூன்று, நான்கு தலைமுறைகளைக் கடந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில்  செயல்பட்டு வருகின்றன. 

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

ஆனால், தலைமுறை தாண்டிய எல்லா நிறுவனங்களுமே தொடர்ந்து வெற்றிகரமாக நடப்பதாகச் சொல்ல முடியாது. அண்ணன் தம்பிக்குள் சண்டை, சொத்துப் பிரச்னை, வரவு செலவுகளில் சிக்கல் எனக் குடும்பத் தொழிலை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாமல் பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன.

 குடும்ப பிசினஸை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்கிற கருத்தரங்கு கடந்த வாரம் சென்னையில் நடந்தது. டை சென்னை மற்றும் அசென்ட் ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து,  `ஃபேமிலி பிசினஸ் மேனேஜ்மென்ட்’ என்கிற இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான கவின்கேர் நிறுவனத் தலைவர்  சி.கே.ரங்கநாதன், அவருடைய மகன் மனு ரஞ்சித்துடன் கலந்துகொண்டதுதான் ஹைலைட். மாரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ்.சி.மரிவாலா இந்தக் கூட்டத்துக்குத்  தலைமை தாங்கி முதலில் பேசினார்.
 
``ஃபேமிலி பிசினஸ் என்று வரும்போது, குடும்பத்தின் ஒன்றிரண்டு உறுப்பினர்கள் மட்டுமே அதைப் பார்த்துக்கொள்ளாமல்,  அனைவருமே அந்தத் தொழிலில் ஈடுபாடு காட்ட வேண்டும். எங்களுடைய தொழில் சார்ந்த நடவடிக்கைகள் அப்படித்தான் இருந்தன.

என்னுடைய தந்தையும், மாமாவும் நிறுவனத்தின் முக்கிய விஷயங்கள் குறித்த முடிவுகளை எடுப்பவர்களாக இருந்தனர். அவர்கள் எடுக்கும் முடிவுகளை குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்துபேசி, அவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொண்டு, அதையும் முடிந்தவரை தங்கள் முடிவுடன் ஒன்றிணைக்கவும் செய்தார்கள்.  பிசினஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களைக் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் மனம்விட்டுப் பேசி கலந்துரையாட வேண்டும்.

இந்த முக்கியமான விஷயம் நடக்காமல் போவதினால்தான், தென் இந்தியாவில் பெரும்பாலான குடும்பத் தொழில்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்ல முடியாமல், பிரிந்துவிடுகின்றன. 

தொழில் சார்ந்த புதிய புதிய ஐடியாக்கள் வழங்குவது, அதை நடைமுறைப்படுத்துவது என நான் ஏதாவது செய்துகொண்டே இருப்பேன். நிறைய விஷயங்கள் தோல்வியில் முடியும், வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்காமல்போகும். அதுமாதிரியான சமயங்கள்தான் என்னை  இந்தத் தொழிலில் நிலைபெறச் செய்ததாக உணர்கிறேன். அதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். பொறுமை, விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடு ஆகிய மூன்றும்தான் நாங்கள் நிறுவனத்தினை குடும்ப பிசினஸாக மாற்றி, வெற்றி கண்டதற்கு முக்கியக் காரணங்கள்’’ என்றார்.

மரிவாலா பேசியதைத் தொடர்ந்து, கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் மற்றும் அவரது மகன் மனு ரஞ்சித் கலந்துரையாடிய  நிகழ்ச்சி, அரங்கில் இருந்த அனைவரின்  சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக இருந்தது. தந்தைக்கும், மகனுக்குமான உரையாடலாக அது இல்லாமல், ஒரு தொழிலதிபருக்கும் தொழில்முனை வோருக்குமான உரையாடலாக அமைந்ததில் எல்லோருக்கும் சந்தோஷம்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபேமிலி பிசினஸ்... ஜெயிக்கும் வழிகள்!

``என்னுடைய மகன் மற்றும் இரு மகள்களும் குடும்பத் தொழில் செய்வதில் அவர்களாகவே  முன்வந்து ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக, மனு, 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே, தொழில் மீதான ஆர்வத்தை எனக்குத் தெரியப் படுத்தினான்.

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது, `நான் உங்கள் மகனாக ஏதாவது சாதிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்குள் இருந்த தொழில் ஆர்வத்துக்குச் சரியான தீனி போடவேண்டுமென்று, அப்போதுதான் நான் முடிவுசெய்தேன்.

அவனுக்கும், என் மகள்கள் இருவருக்கும் தொழில் தொடங்குவதற்கான மூலதனத்தைக் கொடுத்து, அவர்களுக்குப் பிடித்த தொழிலைத் ஆரம்பிக்குமாறு சொன்னேன். இப்போது அவர்களும் ஆளுக்கு ஒரு தொழில் தொடங்கி, அந்தத் தொழிலை சிறப்பாகச் செய்வதற்கான நுணுக்கங்களைக் கற்றுவருகிறார்கள். அதற்கு நான் உறுதுணையாக இருந்துவருகிறேன்” என்றார் சி.கே.ரங்கநாதன்.

குடும்பத் தொழிலில் தனது ஆர்வம் குறித்து பேசிய மனு, ``எனக்கு என் தந்தையிடமிருந்து முழுச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. என்னுடைய தொழிலில் அவர் என்றைக்கும் தலை யிடுவதில்லை. முழுக்க முழுக்க என்னுடைய பணிகளை நானே செய்வதற்கு அவர் அனுமதிக்கிறார். அதனால்தான் என்னால் நிறைய விஷயங்களைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள முடிகிறது.

தவறுகள் நடக்கும்போது, அதிலிருந்து புதிய புதிய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன். என்னுடன் பயின்றவர்களும், வெவ்வேறு துறைகளில் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். நாங்கள் எல்லோரும் அடிக்கடி சந்தித்து, தொழில் வளர்ச்சி குறித்து பேசிக்கொள்வோம்” என்றார்.

குடும்பமாகத் தொழில் செய்பவர்களுக்கும், இளம் தொழில்முனைவோர்களுக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

செ.கார்த்திகேயன் - படங்கள் : தே.அசோக் குமார்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism