பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படுபவை கோழி முட்டைமூலம் தயாரிக்கப்படும் உணவுகள். அவித்த முட்டை, ஆம்லெட், ஒன்சைட் ஆம்லெட், பிளைன் ஆம்லெட், ஆப்பாயில், புல்பாயில், கலக்கி இவையெல்லாம் முட்டையை வைத்து மிக எளிதாகத் தயாரிக்கக்கூடிய சைடு டிஷ்கள்.

இம்மாதிரியான டிஷ்களை முட்டையுடன் தூள் உப்பு சேர்த்துக் கலக்கித்தான் தயாரிப்பார்கள். அந்த வேலையையும் சுலபமாக்கும்படி உப்பு ஏற்றப்பட்ட முட்டைகளைத் தயாரித்திருக்கிறது, உத்திரப் பிரதேச மாநிலம், பைரேலி, இஷாத் நகரில் அமைந்திருக்கிற மத்திய பறவையின ஆராய்ச்சி மையம் (CARI-Central Avian Research Institute).

உப்பு ஏற்றப்பட்ட முட்டைகளை அப்படியே சமைத்துச் சாப்பிடலாம். இனி வேக வைத்த முட்டையிலும் உப்புச்சுவை இருக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதா, உண்மைதான். மத்திய பறவையின ஆராய்ச்சி மையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்தான், உப்புத் தன்மையோடு கூடிய முட்டையை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கோழிகள் இடும் முட்டைகளில் இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதன் மூலம், முட்டையின் உள்பகுதியில் உப்புச்சுவை ஏற்றப்பட்டு விடுகிறது. இப்படிப்பட்ட முட்டைகளைச் சமைக்கும்போது உப்பு சேர்க்கத் தேவையில்லை.

இத்தொழில்நுட்பம் குறித்துப் பறவையின ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கோபியிடம் பேசினோம். “இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் கோழிப்பண்ணையும் ஒன்று. கோழிப்பண்ணைகள் மூலம், இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்பதாயிரம் கோடி அளவு முட்டைகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஹரியானா ஆகிய மாநிலங்கள், முட்டை உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இந்திய அளவில் 7 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது, இத்துறை. இதில் கிராமப்புற மக்களே அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லப்போனால் கிராமப்புறங்களில் தான் அதிக அளவுக் கோழி வளர்ப்புப் பண்ணைகள் இருக்கின்றன.

மனிதர்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் முட்டை முக்கியப்பங்கு அளித்து வருகிறது. அதிக அளவிலான புரதத்தோடு வைட்டமின் ஏ, பி6, பி12 ஆகியவை முட்டையில் நிறைந்துள்ளன. அதனால்தான் குழந்தைகளுக்கு முட்டைப் பரிந்துரைக்கப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஒரு நபர் ஆண்டுக்கு 180 முட்டைகளையாவது சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தியாவில் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 70 முட்டைகளைத்தான் சாப்பிட்டு வருகிறார் என்று ஆய்வு கூறுகிறது. முட்டைச் சாப்பிடுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அதற்கான பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தை எளிமையாக்கி வருகிறோம்.

அந்த வகையில் எங்கள் ஆராய்ச்சி மையத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப துறை, உப்பு ஏற்றப்பட்ட முட்டைத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது முற்றிலும் புதுமையானது. பொதுவாக வேகவைக்கப்பட்ட முட்டையில் 24 மணிநேரம்தான் உப்புத்தன்மை இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் உப்பு ஏற்றப்பட்ட முட்டையில் 48 மணிநேரம் உப்புத்தன்மை நீடித்திருக்கும்.

முட்டையை ‘புட் கிரேடு’ என்ற கரைசலில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு 42 மணிநேரம் மற்றொரு கரைசலில் போட்டு வைத்திருக்க வேண்டும். முதல் கரைசலில் முட்டையானது அமிழ்ந்திருக்க வேண்டும். இரண்டாவது கரைசலில் முட்டையானது மிதக்க வேண்டும். இப்படியிருந்தால், அந்த முட்டையில் உப்பு ஏற்றப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். மின்சாரம், பெரிய உபகரணங்கள் எதுவும் தேவைப்படாத எளிமையான தொழில்நுட்பம் இது. வீட்டிலேயே இதற்கான வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். உப்பு ஏற்றப்பட்ட முட்டையில் உப்பின் அளவு முட்டை முழுவதும் சரிவிகிதமாக நிறைந்திருக்கும். முட்டையின் நிறம், ஊட்டச்சத்தின் அளவு ஆகியவை மாறுவதில்லை” என்ற கோபி நிறைவாக,

“இத்தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ளப் பெரிய படிப்பறிவோ, திறமையோ தேவையில்லை. இதற்கான கரைசலை எப்படித் தயாரிக்க வேண்டுமென்பதை நாங்கள் சொல்லிக் கொடுப்போம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான பயிற்சி, விற்பனை உள்ளிட்ட விஷயங்களை எங்கள் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். இதை ஒரு தொழிலாக நடத்த உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்துக்கான கட்டணம் 5,500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு முட்டையை உப்பு ஏற்றப்பட்டதாக மாற்ற ஆய்வக அளவில் ஒரு முட்டைக்கு 50-60 காசு ஆகும். அதனால், உப்பு ஏற்றப்படும் முட்டையின் விலையை உற்பத்தி செலவுக்கு ஏற்றாற்போல் நிர்ணயித்துக் கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பம் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்து மிளகு வாசனையோடு கூடிய முட்டைக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இருக்கிறோம்” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு,

Director, ICAR-Central Avian Research
Institute, Izatnagar, Uttar Pradesh–243122.
Email Id: cari_director@rediffmail.com
Website: icar.org.in/cari/
Phone: 0581 2300204 Extn: 3077.

த.ஜெயகுமார்