நிதியாண்டு 2018-19 கிட்டத்தட்ட நிறைவடையப் போகிறது. வரிச் சேமிப்புக்கான முதலீடுகளும் இப்போது முடிவுக்கு வந்திருக்கும். இதற்கான இறுதி நாள் மார்ச் 31.

இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம்

கடந்த 11 மாதங்களாக எந்தவித வரிச் சேமிப்பையும் செய்யவில்லை என்றாலும், தற்போது நீங்கள் அப்படியே இருந்துவிட முடியாது. வரிச் சேமிப்பு உடனடியாகச் செய்தாக வேண்டும். எனவே, தற்போது உங்களுக்கு உடனடியாக ஒரு திட்டம் தேவை. இதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

நீங்கள் யார், உங்கள் வயது என்ன, வருமானம் எவ்வளவு என்பதையெல்லாம் தாண்டி குடும்பத்திலுள்ள அனைவரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டும். இது உங்களுடைய மருத்துவத்துக்கான பெரும்செலவுகளிலிருந்து காப்பதற்கு அடிப்படைத் தேவையாகும்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, தீவிர நோய் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் சூழல் வந்தால், பல லட்சம் ரூபாய் சில நொடிகளில் செலவாகிவிடும். இதனால் நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இழக்கவேண்டியிருக்கும். ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியானது உங்களுடைய குடும்பத்தை நிதிச் சிக்கலிலிருந்து காப்பாற்றும். அதுபோக, வருமான வரிச்சட்டம் 80டி பிரிவின் வரிச் சலுகையும் கிடைக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை இன்ஷூரன்ஸ் அலுவலகத்திற்குச் சென்று வாங்க உங்களுக்குச் சிரமமென்றால், ஆன்லைன் மூலமாகவே பாலிசி எடுக்கலாம். பாலிசி விவரங்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பாலிசி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இதுதான் உங்களது முதல் பாலிசியாக இருந்தால் குறைந்தபட்சம் ரூ.3-5 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு பாலிசி எடுப்பது நல்லது.

உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பயனளிக்கும்விதமாக ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கும் வாய்ப்பும் உள்ளது. உங்களுடைய கிரெடிட் / டெபிட் கார்டுகள், நெட்பேங்கிங் அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனம் அனுமதிக்கும் வேறு ஏதேனும் டிஜிட்டல் மீடியம் வழியாகவும் இந்த பாலிசிக்கான பிரீமியத் தொகையை நீங்கள் செலுத்தலாம்.

இ.எல்.எஸ்.எஸ்

வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்படி வரிச் சலுகை பெறுவதற்குச் சிறந்த சேமிப்புத் திட்டம், இ.எல்.எஸ்.எஸ் எனப்படும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமாகும். மியூச்சுவல் ஃபண்டில் நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை பெற முடியும். இ.எல்எஸ்.எஸ் என்பது அடிப்படையில் பல்வேறு துறை சார்ந்த பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும் டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும்.

பல்வேறு காரணங்களுக்காக இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் சிறந்ததாக இருக்கிறது. வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்படி வரிவிலக்கு பெறும் முதலீட்டுத் திட்டங்களிலேயே இதற்குத் தான் மிகக் குறைந்த லாக்-இன் பீரியட் (மூன்று ஆண்டுகள்) உள்ளது.

இதில் மாதத் தவணையாகவோ, நிதியாண்டில் ஒருமுறை மொத்தத் தொகையாகவோ செலுத்த லாம். இந்த ஃபண்ட் நீண்ட கால அளவில் அதிக வருமானத்தைத் தரக்கூடியது. இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் கடந்த மூன்றாண்டுகளில் 15.09% வருமானமும், ஐந்தாண்டுகளில் 15.23% வருமானமும் தந்துள்ளது.

இந்த வருமானத்தை வரிச் சேமிப்புத் திட்டங் களான பி.பி.எஃப், என்.எஸ்.சி-வுடன் ஒப்பிட்டால், இந்த வருமானம் அதிகமாகும். இந்த வருமானம், கடந்த காலத்தில் கிடைத்தவை என்பதையும், ஏற்ற இறக்கமான சந்தைச் சூழலில், எதிர்காலத்திலும் இதே வருமானமே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மற்ற முதலீட்டுத் திட்டங்களைவிட இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டுக்கான கட்டணம் குறைவானதாகும்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் ஆன்லைனிலும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஏதேனும் சந்தேகமிருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களையோ அல்லது நிதி ஆலோசகரையோ அணுகி, ஆலோசனை பெறலாம். இதில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டால், வங்கிக் கணக்கின் கே.ஒய்.சி-யை பயன்படுத்தி, ஆன்லைனில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான அனைத்துப் பணிகளையும் மார்ச் 28-ம் தேதிக்குமுன் முதலீடு செய்துவிடவும். அப்போதுதான் உங்களுடைய முதலீடு மார்ச் மாதக்கணக்கிலேயே சேர்க்கப்படும். இல்லையெனில், அடுத்த நிதியாண்டுக்குச் சென்று சேரும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்

வருமான அடிப்படையில் உங்களைச் சார்ந்து இணையர் (கணவர் /மனைவி) பிள்ளை அல்லது பெற்றோர் இருந்தால், இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை நீங்கள் அவசியம் எடுக்க வேண்டும்.

கடன் தவணை கட்டிவருபவர்கள், அவர்களின் குடும்பத்திற்குக் கடனில்லாத சொத்து கிடைக்க உறுதி செய்வதற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி பயனுள்ளதாகும்.

டேர்ம் இன்ஷூரன்ஸை ஆன்லைனில் எளிதாகப் பெற முடியும். இதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தியபின் சில நாள்களில் பாலிசிப் பத்திரத்தைப் பெறலாம்.

குறைவான பிரீமியத்துக்கு அதிக கவரேஜ் தொகையை டேர்ம் இன்ஷூரன்ஸில் பெறலாம். இந்த பிரீமியத்துக்கு முதலீட்டுப் பலன் கிடையாது. புகை பழக்கமில்லாத, வருமானமீட்டும் 30 வயது ஆண், 50 லட்சம் ரூபாய்க்கான டேர்ம் பிளானை எடுக்க ஆண்டு பிரீமியம் ரூ.4,222-தான்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது காப்பீட்டுத் தொகை, உங்களுடைய ஆண்டு வருமானத்தைப்போல் 10-20 மடங்கு இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவருடைய ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்றால், ஆயுள் காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருப்பது நல்லது. இப்படியிருந்தால் அவரின் மரணத்திற்குப்பின்னும் அவரை நம்பியுள்ள குடும்பம், அதே மாத வருமானத்தை அந்தக் குடும்பம் இந்தக் காப்பீட்டு தொகைமூலம் பெறலாம்.

இந்த பாலிசியுடன் ஆக்சிடென்டல் டெத் பெனிஃபிட், கிரிட்டிக்கல் இல்னஸ் பெனிஃபிட், மாத வருமானம், பிரீமியம் தள்ளுபடி போன்ற ரைடர்களை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ள லாம். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக செலுத்தப்படும் பிரீமியம் தொகையில் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை 80சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும்.

இந்த பாலிசிகளுக்கான பிரீமியத்தை மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டிவிட வேண்டும். அப்படியிருந்தால்தான் நடப்பு நிதியாண்டுக் கணக்கில் வரிச் சலுகை பெற இயலும்.

இதை ஒரு பாடமாகக்கொண்டு, அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தி லேயே நன்கு திட்டமிட்டு, அதிக வருமானம், நல்ல கவரேஜுடன் அதிக வரிச் சலுகை பெறும்படியான முதலீடுகளைத் தொடங்குங்கள்.

தமிழில்: தெ.சு.கவுதமன்

அதில் ஷெட்டி, சி.இ.ஓ, BankBazaar.com