பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

niranjan2428

தங்கள் கட்சியை அவமதித்துவிட்டதாகக் கூறி தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தே.மு.தி.க-வினர் போராட்டம் - செய்தி.

# நீட் தேர்வு, ஸ்டெர்லைட் என்று எத்தனையோ விவகாரங்களில் தமிழகம் பாதிக்கப்பட்டபோது தே.மு.தி.க தோழர்கள், முதல்வர் வீட்டை எத்தனை முறை முற்றுகையிட்டார்கள் என்று நினைச்சேன்... சிரிச்சேன்!

ஆஹான்

inlparty

காங்கிரஸ் ஊழல் செய்தது ஊழல் செய்தது எனக் கூப்பாடுபோட்டு மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., இந்தியா முழுவதும் ஒருவரைக்கூடக் கைது செய்து சிறையில் போடவில்லையே ஏன்?

TamizhanTrends

அல்சேஷன் ரூ.6,000
பொமரேனியன் ரூ.2,500
டாபர்மேன் ரூ.7,000
ராஜபாளையம் ரூ.5,000
தமிழகத்தில் ஓர் ஓட்டு ரூ.250 - ரூ.500
ரொம்ப சீப்பு

SubashiniBA

பா.ஜ.க தமிழ்நாட்டில் போட்டியிடும் ஐந்து தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காது - சர்வே

அதுக்கு எதுக்கு சர்வே எல்லாம் எடுத்துகிட்டு!

ஆஹான்

RahimGazzali

தமிழ்நாட்டில் பதினெட்டா? முப்பத்து ஒன்பதா என்றால் எடப்பாடியைப் பொறுத்தவரை பதினெட்டுதான் முக்கியம். தி.மு.க-வுக்கு பதினெட்டும் முக்கியம். முப்பத்து ஒன்பதும் முக்கியம்.

shivaas_twitz

21 காலி தொகுதில, 18-க்குதான் தேர்தலாம்... அதுல நாலு பண விநியோக புகார்ல கேன்சல் ஆகிடும். எடப்பாடிடா..!

sultan_Twitz

மிரட்டி அல்ல, திரட்டிக் கூட்டணி அமைத்துள்ளோம் - தமிழிசை

# பாத்துங்க கடைசில ‘நோட்டா’ புரட்டி எடுக்கப்போவுது!

SubashiniBA

அது எப்படி 350 கிலோ வெடி மருந்து உள்ள வருது... ரஃபேல் ஃபைல் வெளிய போகுது!

thirumarant

இந்த டார்ச் லைட்ட வச்சி ஆண்டவர் சொல்லப்போற கபீம்குபாம் விளக்கங்களுக்காக வெயிட்டிங்!

yugarajesh2

நாட்டின் பாதுகாப்புக் கருதியே பி.ஜே.பி-யுடன் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி.

# எங்களோட பாதுகாப்புக் கருதிதான்

பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைச்சிருக்கோம் - எடப்பாடி பழனிசாமி மைண்டு வாய்ஸ்!

Thaadikkaran

பதவில இருக்குறவங்க வெளியூருக்கு வரும்போது, மக்களுக்குப் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வந்துட்டுப்போங்க... அப்புறம் நீங்க நல்லாட்சி கொடுக்கறது பத்தி யோசிப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு