Published:Updated:

அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!
அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!

அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!

பிரீமியம் ஸ்டோரி

ருத்துவத் துறையின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலேயே குழந்தையையும் கருப்பையையும் இழந்து தவிக்கிறார், 22 வயதான இளம்பெண் கிரிஜா.

விழுப்புரம் மாவட்டம், கெடார் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவி கிரிஜா. இவருக்கு, மார்ச் 4-ம் தேதி நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட, கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இதனால், நர்ஸ்களே இரவு முழுவதும் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால், மறுநாள் காலை ஆறு மணியளவில், ‘குழந்தை இறந்தே பிறந்தது’ என்று சொன்னதுடன், ‘கிரிஜாவுக்கு ரத்தப் போக்கு நிற்கவில்லை. உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள்’ என்று கூறி, 108 ஆம்புலன்ஸில் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங் களில், “கருப்பையை அகற்றவில்லையென்றால் உயிருக்கு ஆபத்து” என்று சொல்லி, கருப்பையை அகற்றிவிட்டார்கள்.  தொடர்ந்து தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார் கிரிஜா.

அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய கிரிஜாவின் கணவர் சந்திரசேகர், “இருபது கி.மீ தூரத்துல இருக்கற முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி போயிட்டு வர முடியாது. அதனால, எங்க ஊர் ஆரம்ப சுகாதார நிலையத்துலயே செக்கப் பண்ணிக்கிட்டோம். பிரசவ வலி வந்தன்னைக்கு அங்கதான் கூட்டிக்கிட்டுப் போனேன். ஆனா, டாக்டர் இல்லை. அதனால, முண்டியம்பாக்கம் கிளம்பத் தயாரானோம். அங்க இருந்த நர்ஸுங்க, ‘டாக்டர்கிட்ட போன்ல பேசிட்டோம். நாங்களே பிரசவம் பாத்துக்குறோம்’னு சொன்னாங்க. ஆனா,  இப்படி ஆகிடுச்சு. டாக்டர் இல்லாததால்தான் என் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமை...” என்றார் அழுகையுடன்.

அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!

இதுகுறித்துப் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், “மருத்துவர்கள் இல்லாமல் தவறான சிகிச்சை அளித்ததால், அந்தப் பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஸ்கேன் செய்து பார்த்து, அதற்கேற்ப பிரசவம் பார்த்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேர மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்” என்றார்.

அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் சங்கரநாராயணனிடம் பேசினோம். “அந்தப் பெண்ணுக்குக் குழந்தை இறந்துதான் பிறந்திருக்கிறது. அவருக்கு உதிரப்போக்கும் நிற்காததால் கருப்பையை எடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பிரசவம் பார்ப்பதில் எந்தப் பிரச்னையும் கிடையாது” என்றார்.

மருத்துவம் வளர்ந்துவிட்ட காலத்திலும், கிராமப்புற மக்களுக்கு மட்டும் அது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

- ஜெ.முருகன்

படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு