Published:Updated:

கான்டிராஸ்ட் பிளவுஸ், ஆன்டிக் ஜுவல்லரி... 'செம்பருத்தி' பாரதா காஸ்டியூம்ஸ்

ஒரே மாதிரி ஆடைகளை அணியாமல் நிறைய மிக்ஸ் மேட்ச் செய்து நானே புதிது புதிதாக எனக்கான டிரெண்டை உருவாக்கிக்கொள்வேன்.

கான்டிராஸ்ட் பிளவுஸ், ஆன்டிக் ஜுவல்லரி... 'செம்பருத்தி' பாரதா காஸ்டியூம்ஸ்
கான்டிராஸ்ட் பிளவுஸ், ஆன்டிக் ஜுவல்லரி... 'செம்பருத்தி' பாரதா காஸ்டியூம்ஸ்

ன்னுடைய எக்ஸ்பிரஷன் மூலம் `செம்பருத்தி’ சீரியலில் வில்லி ரோலில் மாஸ் காட்டுபவர் பாரதா. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் ரோலில் கலக்கியவர். விஜய் டிவி ஜோடி சீஸன் 9-ல் ஆனந்த்துக்கு ஜோடியாகப் பங்குபெற்றவர். செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் சீரியலில் தன்னுடைய என்ட்ரியைத் தொடங்கியுள்ளார். சீரியலில் எப்போதும் கிராண்ட் லுக்கில் வலம் வரும் பாரதா தன்னுடைய ஃபேஷன் பக்கங்களை நம்மிடம் பகிர்கிறார்.

ஆடை தேர்வு:

நான் ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சிருக்கிறதுனால, என்னோட டிரஸ்ஸிங் சென்ஸ்ல எப்பவும் ரொம்ப கவனமா இருப்பேன். என்கிட்ட இருக்கிற டிரஸ்லேயே மிக்ஸ் மேட்ச் செய்து புது ஃபீல் உருவாக்கிடுவேன். டிரஸ்ஸை பொறுத்தவரைக்கும் வெஸ்டர்ன்தான் என் ஆல்டைம் ஃபேவரைட். செம்பருத்தி சீரியல்ல எனக்கு வில்லி ரோல்னு சொன்னதும் எப்படி டிரஸ்ஸிங் மூலமா என் வில்லத்தனத்தை அதிகப்படுத்தி காட்டலாம்னு நினைச்சேன்.

லைட் ஜார்ஜெட் புடவைக்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ் கான்சப்டை தேர்ந்தெடுத்தேன். இப்படி என்னோட டிரஸ்ல சின்னச் சின்ன மாற்றத்தை உருவாக்கி என் தோற்றத்தை எடுப்பா காட்டினேன். சொன்னா நம்ப மாட்டீங்க... என் டிரஸ்ஸிங் சென்ஸ்க்கு ஆடியன்ஸ் அதிகம் பேர் இருக்காங்க.

அக்சஸரிஸ்:

எனக்கு கிராண்டான ஆன்டிக் ஜுவல்ஸ்னா ரொம்ப இஷ்டம். நெறைய கலக்‌ஷன்ஸ் வைச்சிருக்கேன். ஷாப்பிங் போறப்ப யுனிக்கா கண்ல பட்டா அவளோதான் உடனே வாங்கிடுவேன். வாங்கின ஜுவல்ஸை பொருத்தமான புடவைக்கு மேட்சா போட்டுப்பேன். பாலி கம்மல்னா ரொம்ப இஷ்டம். சீரியல்ல டிசைனர் புடவை கட்டுறதுனால பாலி கம்மல்தான் யூஸ் பண்ணுவேன். கிராண்டா டிரெஸ் பண்றப்ப நெக்பீஸ் போட மாட்டேன். 

ஷாப்பிங்:

பேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சதுக்குப் பிறகு, எனக்கான டிரெஸ் எல்லாம் நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இப்ப ஷூட்டிங்ல பிஸி... அதனால டிசைன் சொல்லி வெளியே கொடுத்து ஸ்டிச் பண்ணி வாங்குறேன். ஒரு டிரஸ் மனசுக்குப் பிடிச்சிருந்தா அது லோக்கலோ மாலோ எங்கனாலும் வாங்கிடுவேன். உண்மையைச் சொல்லணும்னா சாதாரண கடைகளில்கூட நிறைய யூனிக்கான டிசைன்களைத் தேர்வு செய்து வாங்க முடியும்.

நிறத் தேர்வு:

பிரைட் கலர்ஸ் என்னோட ஃபேவரைட். டஸ்கி டோனுக்கு பிரைட் கலர்ஸ்தான் பொருத்தமா இருக்கும். என் வார்ட்ரோப்ல வாவில் கலர் அத்தனையும் இருக்கும். 

ஃபேவரைட் டிரஸ்:

எல்லா டிரஸ்ஸையும் பார்த்துப் பார்த்து செலக்ட் பண்றதுனால எல்லாமே ஸ்பெஷல்தான். ஒரு டிரஸ் சூப்பர் ஸ்பெஷல். அது ஒயிட் அண்ட் பிங்க் கலர்ல இருக்கிற லாங் கவுன். என்னோட அக்கா மகன் எனக்காக செலக்ட் பண்ணின அந்த ஸ்பெஷல் டிரஸ்ஸை எப்போவும் டாப்ல வைச்சிருப்பேன். 

ஆன்லைன் ஷாப்பிங்:

டிரெண்ட்ல உள்ள நிறைய அக்சசரீஸை உடனே வாங்க ஆன்லைனுக்குப் போகலாம். டிரெஸ் சில நேரம் பொருத்தமா அமையும். அளவைச் சரியா சொன்னோம்னா நல்ல டிரெஸ் நல்ல தரமா கிடைக்கும். நான் ஆன்லைன் ஷாப்பிங் நிறைய பண்ணுவேன்.

மேக்கப்:

எனக்கு எப்போதும் சிம்பிள் அண்ட் கேஷ்வல் லுக்தான் பிடிக்கும். அதனால் சீரியலுக்கு முன்பு வரை மேக்கப்பில் அதிக கவனம் செலுத்தியது கிடையாது. சீரியலில்கூட சில எபிசோடுகள் லைட் மேக்கப்பில் நடித்தேன். ஆனால், ரொம்ப டல்லாக இருக்குனு நிறைய கமென்ட் வரவே, எபிசோடுகளுக்கு ஏற்ப எனக்கான மேக்கப்பை நானே போட்டுக்கொள்கிறேன். மேக்கப் சார்ந்து நிறைய கற்றும் கொள்கிறேன்.