Published:Updated:

சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!

சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!

சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!

சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!

சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!

Published:Updated:
சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!

பொள்ளாச்சியில் சில பெண்களுக்கு நேர்ந்துள்ள விபரீதங்கள் நம்மைப் பதைபதைக்கச் செய்கின்றன. சமூகவலைதளங்களின் மூலம் அறிமுகமாகி, காதல் வலை அல்லது நட்பு வலை வீசி, பிறகு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டுவதை ஒரு கும்பலே செய்திருக்கிறது. இந்தக் கும்பலுக்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகார் தந்தபிறகு இந்தத் தகவல்கள் அம்பலமானாலும், புகார் கொடுக்காத பெண்கள் ஏராளம் என்கின்றனர்.

சமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது!

பொள்ளாச்சி என்ற சிறுநகரத்தில் நடந்த கொடுமைகள் தேசம் முழுவதும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒருகாலத்தில் பெண்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டு வீட்டுக்குள் அடக்கிவைக்கப்பட்டனர். ஆனால் இன்று பெண்களுக்கான சுதந்திர வெளி விரிந்திருக்கிறது. பலதுறைகளிலும் ஆண்களுக்கு நிகராகவும் ஆண்களுக்கு மேலாகவும் சாதனைகளை நிகழ்த்திக்காட்டுகின்றனர். ஆனால், நவீன வாழ்க்கையில் ஏற்படும் இத்தகைய நெருக்கடிகள் பெண்களின் சுதந்திர வெளியைச் சுருக்கிவிடக் கூடாது.

அதேநேரத்தில் சமூகவலைதளங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது, மனிதர்களை இனம்கண்டுகொள்ளக்கூடிய உளவியல், தற்காத்துக்கொள்ளும் எச்சரிக்கையுணர்வு ஆகியவை பெண்களுக்கு அதிகம் தேவை என்பதையே இத்தகைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. இன்று சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நன்மையும் தீமையும் கலந்ததுதான் நவீன வாழ்க்கை. சமூகத்தில் இருக்கும் எல்லா வக்கிரங்களும் சமூகவலைதளங்களிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். அதில் ஆரோக்கியமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் திறனை ஆண், பெண் இருபாலருமே வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டிய கடமை கல்வி நிறுவனங்களிலிருந்து அரசு வரை அனைவருக்கும் உண்டு.

இன்னொருபுறம், பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருந்தாலும் அவர்களை நோக்கியே மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லப்படும் வழக்கமும் நிறுத்தப்பட வேண்டும். குழந்தைப்பருவத்திலிருந்தே  பாலின சமத்துவத்தை ஆண்குழந்தைகளுக்குக் கற்பித்து வளர்க்கவேண்டும். பாலினச் சமத்துவம் குறித்த புரிதலைப் பாடத்திட்டத்திலிருந்தே தொடங்கவேண்டும். ‘பெண்கள் வெறும் பாலியல் பண்டமல்ல’ என்கிற உண்மையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். பெண்களை மதிக்கிற, சக உயிர்களாய்க் கருதுகிற ஆண்கள் நிறைந்த நாடுதான் ஆரோக்கியமான நாடாக இருக்கும்.

சமூகவலைதளங்களைப் பாதுகாப்பாகவும் அறிவுபூர்வமாகவும் பயன்படுத்தும் முறை குறித்து இன்றே உரையாடலைத் தொடங்குவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism