Published:Updated:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக மாணவர்கள் அடையாள உண்ணாவிரதம்! 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக மாணவர்கள் அடையாள உண்ணாவிரதம்! 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக மாணவர்கள் அடையாள உண்ணாவிரதம்! 

குரூப் 1 தேர்வில் வயது வரம்புப் பிரச்னையால், பாதிக்கப்பட்ட பலரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (TNPSC) எதிராகச்  சென்னையில் 10-ம் தேதி அடையாளம் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர். 

கடந்த 1.1.2019 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் 1.7.2019 தேதிக்குள் 37 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும் என வயது நிர்ணயித்துள்ளது.  2018-ம் ஆண்டு, குரூப் 1 தேர்வு நடத்தப்படும் என்று கால அட்டவணையில் அறிவித்திருந்தது. ஆனால், 31.12.2018 தேதி வரை விளம்பரத்தை வெளியிடாமல், 1.1.2019 அன்றே விளம்பரத்தை வெளியிட்டது. இதனால், 37 வயது பூர்த்தியாகாமல் இருப்பவர்களும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுடைய வாய்ப்பு பறிபோனதை எதிர்த்து, காவல்துறையின் அனுமதியுடன் சென்னை அம்பத்தூரில் 10-ம் தேதி அடையாள உண்ணாவிரதமிருக்க உள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் முருகன், ``ஆந்திராவில் கூட 31.12.2018 அன்று குரூப் 1 தேர்வுக்கு வெளியிட்டு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி முடிவால், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிந்தும் வாய்ப்பு வழங்க மறுப்பது ஆச்சர்யமாக உள்ளது. கடந்த ஆண்டில் குரூப் 1 தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்து காலம் கடந்து நடத்துவதால் பலரின் அரசுப் பணி கனவும் கானல் நீராகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை ஏற்று 37 வயது பூர்த்தியாகாத அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என்றார்.