Published:Updated:

”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி

ஜெ.முருகன்
”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி
”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி

புதுச்சேரியில் வரும் 11-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று டி.ஜி.பி சுந்தரி நந்தா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி

மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும் அறிவித்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு புதுச்சேரியில் மே மாதம் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவித்த முதல்வர் நாராயணசாமி, மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், ”தலையில் பூவும், காதில் கம்மலும் அணிந்துகொண்டு எப்படி ஹெல்மெட் போட முடியும்” என்று பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி

இந்த எதிர்ப்புகளின் காரணமாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்றும், அறிவுரை கூறினால் போதும் என்று தெரிவித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி. இந்நிலையில், ”ஹெல்மெட் சட்டம் புதுச்சேரியில் மீண்டும் அமல்படுத்தப்பட இருக்கிறது. கடந்த ஆண்டைப்போல முதல்வர் நாராயணசாமி இதற்கு இடையூறு செய்ய மாட்டார் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, சட்டத்தை மீறுபவர்கள் மீது வழக்கு போடவோ, அபராதம் விதிக்கவோ கூடாது என்று தடுத்துவிட்டார்.

”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி

அவரின் அந்த நடவடிக்கையால் கடந்த 13 மாதங்களில் மட்டும் புதுச்சேரியில் 3 நாள்களுக்கு ஒருவர் என 114 பேர் ஹெல்மெட் அணியாததால் விபத்துகளில் உயிரிழந்திருக்கின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் நாராயணசாமிதான் காரணம்” என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வாட்ஸ் அப் மூலம் தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாள் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் இதற்கு தீர்வு காண முடியும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் தலையில் வைத்திருக்கும் பூ வாடிவிடும் என்பதால் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள். வெறும் சட்டத்தை வைத்துக்கொண்டு புதுச்சேரியில் எதையும் செய்துவிட முடியாது. அன்பாகச் சொன்னால் புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.

”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி

அதற்கு ஆளுநர் கிரண் பேடி, “புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயச் சட்டம் அமலில் இருந்தும் அதனை யாரும் பின்பற்றுவதில்லை. இதில் முதல்வர் தலையீடு ஏன். கட்டாய ஹெல்மெட் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். ஹெல்மெட் அணியாதவர்களுக்குக் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்” என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் காவல்துறை தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சுந்தரி நந்தா, ”புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 322 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்திருக்கின்றனர். அதனைத் தடுக்கும் பொருட்டு புதுச்சேரி மாநிலத்தில் வரும் 11-ம் தேதி திங்கட்கிழமை முதல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி

மீறுபவர்களுக்கு முதல்முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 300 ரூபாய் அபராதமும், மூன்றாவது முறை மீறுபவர்களுக்கு 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். அதேபோல் கார்களில் செல்பவர்களும் வரும் திங்கட்கிழமை முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு ஹெல்மெட்டிற்கு விதிக்கப்படும் அபராதங்களே விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாத காவல்துறைக்கும் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. அறிவுரை மட்டுமே கூற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கூறியது குறித்து டி.ஜி.பியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்