Published:Updated:

எங்கள் ஓட்டு யாருக்கு?- அய்யாக்கண்ணு போடும் தேர்தல் பிரசாரக் கணக்கு

எங்கள் ஓட்டு யாருக்கு?- அய்யாக்கண்ணு போடும் தேர்தல் பிரசாரக் கணக்கு
எங்கள் ஓட்டு யாருக்கு?- அய்யாக்கண்ணு போடும் தேர்தல் பிரசாரக் கணக்கு

``வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சங்க கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாகத் தர மறுப்பவர்களை எதிர்த்து விவசாயிகளைத் திரட்டி பிரசாரம் செய்யப்போகிறோம்'' என்கிறார் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு.


 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி அண்ணாமலைநகரில் உள்ள மாநில தலைமையகத்தில் நடைபெற்றது.  அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மன்னார்குடி பழனிவேல், மாநில துணை தலைவர் நெய்வேலி செந்தில் குமாரசாமி, கரூர் கிட்டப்பா ரெட்டி, மற்றும் கிருஷ்ணகிரி ஜே.பி.கிருஷ்ணன், புதுக்கோட்டை முருகேசன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மிகவும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசியவர்கள், விவசாயிகளைத் சிறு குறு விவசாயிகள் விவசாயிகளின் என அரசு பிரிக்கக்கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை எதிர்த்து பிரசாரம் செய்வது என்றும், அந்தக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடக்கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சங்க கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாகத் தர மறுப்பவர்களை எதிர்த்து பிரசாரம் செய்வது என்றும், விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை தர வேண்டும். அதுவரை விவசாயிகள் வாங்கிய அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும், அனைத்து  நதிகளையும் இணைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், 60வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு அவர்களின் மகன் அல்லது மகள் வைத்திருந்தாலும் மாத  ஓய்வு ஊதியமாக ரூபாய் ஐந்தாயிரம் தர வேண்டும். பிப்ரவரி மாதம் 15-ம் தேதி லக்னோவில் விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் நான்கு லட்சம் விவசாயிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் தமிழக தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமும் கலந்துகொள்வது என மார்ச் மாதம் 2-ம்தேதி உத்தரபிரதேசத்தில் நடைபெறும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்துகொள்வது என்றும், வரும் மார்ச் 29-ம் தேதி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் 29மாநிலங்கள்ம்7 யூனியன் பிரதேசங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும், மாபெரும் நாடைபயண பிரச்சார பேரணியில் கலந்து கொள்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

கூடவே  இந்தக் கூட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியில் பெய்கின்ற மழை நீரைத் தமிழகத்துக்கு திருப்பிவிட வேண்டும் என்றும் மாயாறு தண்ணீரைக் கர்நாடக மாநிலத்துக்குப் போகாமல் தமிழகத்துக்குத் திருப்பி வேண்டும். இதன் மூலம் பவானி சாகர் அணைக்கு ஆண்டு முழுவதும் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும்.  மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கற்பாநதியை பெரிய நீர்த்தேக்கமாக உருவாக்கி பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். வாழைமலையாறு, கோட்டாறு, செண்பகவள்ளிஆறு போன்ற நதிகளை நீர்த்தேங்கங்களாக ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தூக்கு போட்டுச் சாகும் வரை போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

விளைப்பொருள்களுக்கு நியாயமான விலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களை திரட்டி, தங்கள் கோரிக்கைகளை புறக்கணிக்கும் கட்சிகளுக்கு எதிராக பிரசாரம் செய்வது என கூறியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.