Published:Updated:

`எடப்பாடியும்,  ஓபிஎஸ்ஸும் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்கள்!’-  தங்கதமிழ்செல்வன்

`எடப்பாடியும்,  ஓபிஎஸ்ஸும் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்கள்!’-  தங்கதமிழ்செல்வன்
`எடப்பாடியும்,  ஓபிஎஸ்ஸும் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்கள்!’-  தங்கதமிழ்செல்வன்

எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பி.ஜே.பியின் ஸ்லீப்பர் செல்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்திருக்கிறார்.

`எடப்பாடியும்,  ஓபிஎஸ்ஸும் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்கள்!’-  தங்கதமிழ்செல்வன்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மறைந்த  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்தானத்தின்  உருவப்படத் திறப்பு விழா மதுரையில் நடந்தது. இதில் கலந்துள்ள வந்த  அ.ம.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் பிஜேபிக்கு ஸ்லீப்பர் செல்களாக எடப்பாடியும்  ஓபிஎஸ்ஸும்,  இருக்கிறார்கள். பிஜேபியோடு கூட்டணி அமைக்காவிட்டால் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு  மிகப்பெரிய அச்சுறுத்தல் வரும் என்பதால், பிஜேபியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைவது  நிச்சயம்.

`எடப்பாடியும்,  ஓபிஎஸ்ஸும் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்கள்!’-  தங்கதமிழ்செல்வன்

பா.ஜ.க கூட்டணி இல்லை என்று கூறும் தம்பிதுரை மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை. அவர் யதார்த்தத்தை பேசி வருகிறார்.  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வரும் என நம்புகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடக்கும், பா.ஜ.க தமிழகத்தில் கால் ஊன்ற வாய்ப்பில்லை, அ.தி.மு.க, பா.ஜ.க இரண்டையும் தமிழக மக்கள் ரசிக்கவில்லை. அ.மு.ம.கழகம் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும். இதற்காக கழகத் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்களைச் சந்தித்து வருகிறார்" என்றார்.