Published:Updated:

மனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து! - நிரந்தரத் தடை வருமா?

மனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து! - நிரந்தரத் தடை வருமா?
பிரீமியம் ஸ்டோரி

திக விஷத்தன்மை உள்ள எலி மருந்துகள் சிறிய கடைகளில்கூடக் கிடைப்பதால், அதைத் தின்று தற்கொலை செய்துகொள்வது புதுக்கோட்டையில் அதிகரித்திருக்கிறது. புதுக்கோட்டையில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் எலி மருந்து சாப்பிட்டு இறந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள். எனவே, எலி மருந்துகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து! - நிரந்தரத் தடை வருமா?

புதுக்கோட்டை மாவட்டப் புறக்காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில், 60 சதவிகித வழக்குகள், எலிமருந்து சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார மருத்துவமனைகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். 2018-ம் ஆண்டில் மட்டும் எலி மருந்து சாப்பிட்ட 360 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது எலிப்பொறிகளில் எலிகள் சிக்காததால், அதிக விஷத்தன்மை உள்ள எலி மருந்துகளை வைத்து எலிகளைக் கொல்கின்றனர். தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் எளிதாகத் தெருமுனையில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் எலிமருந்துகளை வாங்கித் தின்று தற்கொலை செய்துகொள்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து! - நிரந்தரத் தடை வருமா?

இப்போது விற்கப்படும் எலிமருந்துகளின் விஷத்தன்மை குறித்து விஷமுறிவு சிறப்புச் சிகிச்சை மருத்துவர் இப்ராம் ஷாவிடம் கேட்டோம். “எலி மருந்தைச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை, சிறுநீரகச் செயலிழப்பைத் தொடர்ந்து உடலின் பல உறுப்புகளும் செயலிழக்கும். எலி மருந்து உடலுக்குள் மெல்ல மெல்லப் பரவி

மனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து! - நிரந்தரத் தடை வருமா?

இருதயம், கல்லீரலைப் பாதிக்கும். கல்லீரல் முழுமையாகச் செயலிழந்து போவதால், ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போகும். இதனால், மூளை மற்றும் நுரையீரலுக்குள் ரத்தம் கசிய ஆரம்பிக்கும். தொடர்ந்து உறங்கும் நிலையிலேயே நோயாளி கோமாவுக்குச் சென்று இறந்துவிடுவார். எலி மருந்து சாப்பிட்ட உடனே உயர் மருத்துவச் சிகிச்சை எடுத்தால், நோயாளியைக் காப்பாற்றப்பட குறைந்தபட்ச வாய்ப்பு உள்ளது. எலி மருந்து சாப்பிட்டவர்களுக்கு மாற்று மருந்துகள் ஏதும் இல்லை” என்றார்.

எலி மருந்துகளைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்ற பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வரும், புதுக்கோட்டை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் நாராயணனிடம் பேசினோம். ‘‘எலி பேஸ்ட், எலி கேக்குகள் என்று பல்வேறு வடிவங்களில் எலி மருந்துகள் கிடைக்கின்றன. ஒருபுறம் தற்கொலைக்கு முயற்சி செய்வோர் இதைச் சாப்பிட்டு இறக்கிறார்கள். இன்னொரு புறம், வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் எலி மருந்து கேக்கை சாக்லெட் என்று நினைத்துச் சாப்பிட்டுக் குழந்தைகள் இறக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. ‘எலி மருந்தைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஆனால், செய்யவில்லை” என்றார் வருத்தத்துடன்.

மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் பேசினோம். ‘‘புதிதாக இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

- இரா.மணிமாறன்
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism